![]() |
அகமுடையார் வழித்தோன்றல் இராமச்சந்திரன் சேர்வை |
போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் சிவகங்கை இராமச்சந்திரன் சேர்வை (செப்டம்பர் 16 1884 - பிப்பிரவரி 26 1933) வழக்கறிஞராகவும் தந்தை பெரியாரின் தோழராகவும் சாதி ஒழிப்பில் முனைப்பாளராகவும் தென் தமிழ்நாட்டில் திராவிட சுயமரியாதை இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராகவும் விளங்கியவர் ஆதி திராவிடத் தமிழர்களும் தாழ்த்தப்பட்டோரும் கோவில்களில் தடையின்றி சென்று வழிபட பாடுபட்டார் தாழ்த்தப்பட்டோர் கல்வி பெற இரவுப் பள்ளிகளைத் தம் சொந்தச் செலவில் கட்டி அவர்கள் கல்வியறிவு பெற உதவினார் 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த சுய மரியாதை இயக்க மாநாட்டில் தம் பெயருக்கு பின்னால் உள்ள சாதி ரீதியான அடையாளத்தை தமது சேர்வை என்ற பட்டத்தை துறப்பதாக அறிவித்து அந்நாளிலிருந்து சிவகங்கை இராமச்சந்திரன் என்றே அவர் மக்களால் அறியப்பட்டார்...!!!
அந்த காலத்தில் நாடார் என்னும் பிரிவினர் கோவில்களிலும் அக்கிரக்காரத் தெருக்களிலும் நுழையவும் நடக்கவும் முடியாத சூழ்நிலை நிலவியது இருப்பினும் சிவகங்கை இராமச்சந்திரன் இராமநாதபுரம் தேவஸ்தானக் கமிட்டியில் தலைவர் பதவியில் இருந்தபோது பி. எஸ். சிதம்பரம் (நாடார்) என்ற நாடார் இனத்தவரை உறுப்பினராக அமர்த்தினார் 1932 சூன் திங்களில் அவர் நோய்வாய்ப்பட்டபோது வி. வி.இராமசாமி என்ற நாடார் இனத்தவரை தாம் வகித்த தலைவர் பதவிக்கு தேவஸ்தானம் கமிட்டி சிறப்புக் கூட்டத்தை கூட்டி தேர்ந்தெடுக்கச் செய்தார்...!!!
1930 அக்டோபரில் நீதிக்கட்சி அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்க அழைப்பு வந்த போதும் அதனை ஏற்காமல் சுய மரியாதை இயக்கப் பணியில் முழுமையாகத் தம்மை ஒப்படைத்துக் கொண்டு உழைத்தார்...!!!
அகமுடையார் வழித்தோன்றல் சிவகங்கை இராமச்சந்திரனார் சேர்வை 49 ஆண்டுகள் வாழ்ந்து 1933 ஆம் ஆண்டு பிப்பிரவரி 26 ஆம் தேதி அன்று காலமானார் காலங்கள் பல கடந்தாலும் அவரது தியாகம் அழியாது...!!!
![]() |
சிவகங்கையில் அமைந்துள்ள இராமச்சந்திரன் சேர்வை திருஉருவ சிலை |
அமரர் இராமச்சந்திரன் சேர்வை அவர்களது திருஉருவ சிலை சிவகங்கையில் அமைந்துள்ளது கீழே உள்ள படங்களில் பார்த்தால் தெரியும் சிலை அமைத்த முதல் கல்வெட்டில் அமரர் இராமச்சந்திரன் சேர்வை என்று உள்ளது சிலை மற்றும் கல்வெட்டை புதுப்பித்து எடுக்கப்பட்ட இரண்டாவது கல்வெட்டில் இராமச்சந்திரன் என்று மட்டுமே உள்ளது சேர்வை என்ற அகமுடையார் பட்டம் மறைக்கப்பட்டுள்ளது இதே போல் தான் சிவகங்கை அரண்மனை எதிரில் அமைந்துள்ள உலகில் முதன் முதலில் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் க்கு சிலை அமைத்த தியாகி சுந்தர்ராஜன் சேர்வை என்ற அகமுடையார் அவர்களது பட்டமும் மறைக்கபட்டுள்ளது இப்படி ஒவ்வொரு அகமுடையார் வழித்தோன்றல்கள் பின்னாலும் திட்டமிட்டு மறைக்கபடுவது அவர்களது பட்டம் மட்டுமல்ல எமது அகமுடையார் பேரினத்தின் உண்ணதமான வீர தியாக வரலாறும் தான்...!!!
![]() |
சேர்வை என்ற அகமுடையார் பட்டம் மறைக்கபட்ட புதிய கல்வெட்டு |
![]() |
ராமச்சந்திரன் சேர்வை என்று இருந்த பழைய கல்வெட்டு |
ராமச்சந்திர சேர்வையாகிய நான் இன்று முதல் ராமச்சந்திரனாகிறேன் என பெரியார் வழி உறுதியெடுத்து சாதிப் பெயர் அகற்றி ராமச்சந்திரனாக வாழ்ந்தவரை "ராமச்சந்திர சேர்வை" என குறிப்பிடச் சொல்வது அவரது பெயரையே களங்கப் படுத்துவதற்குச் சமம்.
ReplyDelete