Skip to main content

Posts

Showing posts from January, 2018

முருகனின் மறு அவதாரமான பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள்  முருகனின் மறு அவதாரமான பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் உதித்த பாம்பன் சுவாமிகள் தமிழ்நாட்டில் இராமேசுவரத்தில் அமைந்துள்ள பாம்பன் என்ற ஊரில் பிறந்து வடமொழி,தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார் திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார் தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும் சாத்திரங்களாலும் தொண்டாற்றினார் முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666 இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன இவரியற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது பாம்பன் சுவாமிகள் மே 30 1929 அன்று ஜீவசமாதி அடைந்தார் அவரது சமாதி கோவில் சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ளது...!!!                     வாழ்க்கைக் குறிப்பு: பழந்தமிழ்க் குடியான அகம்படியர் குடியில் சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாக தோராயமாக 1850 ஆம் ஆண்டு இராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார் இவரது இயற்பெயர் அப்பாவு என்பதாகும் 1866 ஆம் ஆண்டு உள்ளூர் கிருத்துவப் பள்ள

சுயமரியாதை வழக்கறிஞர் இராமச்சந்திரன் சேர்வை

அகமுடையார் வழித்தோன்றல் இராமச்சந்திரன் சேர்வை  போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் சிவகங்கை இராமச்சந்திரன் சேர்வை (செப்டம்பர் 16 1884 - பிப்பிரவரி 26 1933) வழக்கறிஞராகவும் தந்தை பெரியாரின் தோழராகவும் சாதி ஒழிப்பில் முனைப்பாளராகவும் தென் தமிழ்நாட்டில் திராவிட சுயமரியாதை இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராகவும் விளங்கியவர் ஆதி திராவிடத் தமிழர்களும் தாழ்த்தப்பட்டோரும் கோவில்களில் தடையின்றி சென்று வழிபட பாடுபட்டார் தாழ்த்தப்பட்டோர் கல்வி பெற இரவுப் பள்ளிகளைத் தம் சொந்தச் செலவில் கட்டி அவர்கள் கல்வியறிவு பெற உதவினார் 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த சுய மரியாதை இயக்க மாநாட்டில் தம் பெயருக்கு பின்னால் உள்ள சாதி ரீதியான அடையாளத்தை தமது சேர்வை என்ற பட்டத்தை துறப்பதாக அறிவித்து அந்நாளிலிருந்து சிவகங்கை இராமச்சந்திரன் என்றே அவர் மக்களால் அறியப்பட்டார்...!!!  அந்த காலத்தில் நாடார் என்னும் பிரிவினர் கோவில்களிலும் அக்கிரக்காரத் தெருக்களிலும் நுழையவும் நடக்கவும் முடியாத சூழ்நிலை நிலவியது இருப்பினும் சிவகங்கை இராமச்சந்திரன் இராமநாதபுரம் தேவஸ்தானக் கமிட்டியில் தலைவர் பதவியில் இருந்தபோது பி. எஸ். ச

சுபேதார் சுலைமான்

சுபேதார் சுலைமான் சமாதி  சுபேதார் சுலைமானுக்கு மாமன்னர் பெரிய மருது பாண்டியர் சிவகங்கையில் பட்டரைக் கண்மாய் என்ற கிராமத்தில் கட்டிய சமாதி பற்றி இந்த பதிவில் காண்போம்...!!! மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு காளையார் கோவிலில் உள்ள காளீஸ்வரருக்கு ஒரு ராஜகோபுரம் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளதைப் போல் கட்ட வேண்டும் என்ற ஆசை அதற்கான ஆயத்த வேலைகள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது அஸ்திவாரம் தோண்டும் போது பிரச்சனைகள் கட்டிடம் கட்ட முடியாமல் நீர் ஊற்று அதிகரித்து கட்டிடம் கட்ட தடைப்பட்டது அந்த சமயத்தில் சிறிய வயதுடைய ஒரு முகமதியர் பெயர் சுலைமான் பக்கிரி என்பவர் அந்த இடத்திற்கு வந்தார் அவர் யார் தெரியுமா...? ஆற்காட்டு நவாப் முகமதலியின் படையில் பணி ஆற்றிய ஒரு தலைசிறந்த வீரன் தான் சுலைமான் இவன் காளையார் கோயில் மீது படையெடுக்க சரியான தருணத்தை கணக்கிடுவதற்காகவும் மருது பாண்டியர்களின் படையின் வலிமையை அறிந்து கொள்ளவும் அங்குள்ள மக்களின் மனநிலையை அறிந்து சரியான நேரத்தில் படையெடுக்க ஆற்காடு நவாப்பால் அனுப்பப்பட்ட ஒற்றன் ஆவான் சந்தர்ப்பம் கிடைக்குமாயின் மருது பாண்டியரைக் கொலை செய்வதற்குக் கூட

கொம்புக்காரனேந்தல் என்ற ஊருக்கும் மருது பாண்டியர்களுக்கும் உண்டான தொடர்பு

மருது சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் (அப்பாவை பெற்ற தாய்) அப்பத்தாவின் ஊர் தான் கொம்புக்காரனேந்தல் என்ற ஊர் இது சிவகங்கை சீமையில் அமைந்துள்ளது இந்த ஊர் மருதிருவரின் அப்பத்தா ஊர் என்று அறிந்த பலருக்கு மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் மூத்த மனைவி பட்டத்தரசி  இராக்காத்தாள் அம்மா அவர்களின் ஊரும் இது தான் என்று தெரியாது அதை பற்றி இந்த பதிவில் காண்போம்...! கொம்புக்காரனேந்தல் மாமன்னர் மருது பாண்டியர்களின் அப்பத்தா ஊராகும் அந்த வகையில் உறவினரான இவ்வூரை சேர்ந்த பெரியதனக்காரரின் மகளான இராக்காத்தாளை பெரிய மருது பாண்டியர் மணந்து கொண்டார்...! ஒரு முறை பெரிய மருது பாண்டியர் கொம்புக்காரனேந்தலுக்கு வந்திருந்தார் இது அவருக்கு தந்தை வழி பாட்டியின் ஊர் என்பதால் கொம்புக்காரனேந்தல் மக்கள் மருதிருவரின் அளவற்ற அன்பும் உரிமையும் கொண்டாடி ''கொம்புக்காரனேந்தல் மருது பாண்டியன்'' என்று பெருமிதத்துடன் நாட்டுப்பாடல் பாடியுள்ளனர் அந்த பாடலின் வரிகள் இதோ...! ''வம்புக் காரர்கள் அத்தனை பேரையும் வம்பு மரத்திலே சேர்த்தடிக்கும் கொம்புக்கா ரனேந்தல் மருது பாண்டியன் கொலுச்

பாகல்பட்டி ஜமீன்தார் பா.வே.மாணிக்க நாயக்கர் அகமுடையார்

பா. வே. மாணிக்க நாயக்கர் (அகமுடையார்)  மறைக்கபட்ட மாமனிதர் பாகல்பட்டி ஜமீன்தார் அகமுடையார் வழித்தோன்றல் பா.வே.மாணிக்க நாயக்கர் இவர் சேலம் மாவட்டம் பாகல் பட்டியில் வேங்கடசாமி நாயக்கருக்கும் முத்தம்மையாருக்கும் 02.02.1871 ஆம் நாள் இரண்டாவது மகனாகப் பிறந்தார் அகமுடையார் பேரினத்தில் நாயக்கர் பட்டம் பெற்ற இவர் பள்ளியில் படிக்கும் பொழுதே கவிபாடும் ஆற்றல் கொண்டவராக விளங்கினார் சேலம் கல்லூரியில் சேர்ந்து இளங்கலையில் எப்.ஏ பட்டம் பெற்றார் அவருடைய பொறியியல் நுட்ப ஆர்வத்தை அறிந்த கல்லூரி முதல்வர் சென்னை பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு உதவினார் அங்கு முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுப் பல பரிசுகளும் தங்க பதக்கமும் பெற்றார் சென்னை அரசாங்கத்தில் நீலகிரி உதவிப் பொறியாளராக 1896 ஆம் ஆண்டு பணியேற்றார்...!!! செயற்பொறியாளராக 1906 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்றார் இங்கிலாந்துக்கு 1912 ஆம் ஆண்டு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார் வலுவாக்கிய கான்கிரீட் பற்றியும் ஆய்வு செய்தார் மேலும் ''கால்குலோகிராப்'' என்ற கருவியை உருவாக்கி அதை பொறியியல் உலகத்துக்கு அளித்து சாதனை புரிந்த

தியாகி சுந்தரராஜன் சேர்வை அகமுடையார் அவர்களால் உலகில் நேதாஜிக்கு வைக்கப்பட்ட முதல் சிலை

1946 ஆம் ஆண்டு சிவகங்கை அரண்மனை வாசலில் நிறுவப்பட்ட நேதாஜி சிலை...!!!  தாய்நாட்டின் சுதந்திரம் பெறவேண்டி நேதாஜியுடன் இணைந்து பல அகமுடையார் வழித்தோன்றல்கள் போராடினார்கள் அந்த விதத்தில் மருது சீமையான சிவகங்கை சீமையில் பிரிட்டிஷாருக்கு பரம எதிரியான நேதாஜி சுபாஸ் சுந்தரபோஸ் சிலையை சுதந்திரத்திற்கு முன்பே 23/01/1946 அன்று நேதாஜி உயிருடன் இருக்கும் போதே உலகில் முதன் முதலில் சிலை அமைத்த தியாகி சுந்தரராஜன் சேர்வை (அகமுடையார்) ஆவார்...!!!  உலகில் முதல் நேதாஜி சிலை அமைத்த அகமுடையார் வழித்தோன்றல் சுந்தரராஜன் சேர்வை...!!!  நேதாஜி சிலைக்கு கீழே அமைந்துள்ள கல்வெட்டு...!!!  சிவகங்கையின் மைய பகுதியில் பிரிட்டிஷாரின் ஆதிக்க காலத்தில் நேதாஜி அவர்களின் சிலையை திறப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல பல துன்பத்திற்கு உள்ளாகி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போதிலும் எதற்கும் கலங்காமல் நேதாஜி சிலை திறந்த மாவீரர் சுந்தரராஜன் சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக...!!!  இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு 

தமிழ் மொழியை செம்மொழியாக்க முதன் முதலில் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்ற தீர்மானம்

1919 ஆம் ஆண்டு தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்கள் கையெழுத்திட்டு முறைப்படி அரசுக்கு அனுப்பிய கடிதம்...!!!  கருணாநிதி அவர்கள் 2010 ஆம் ஆண்டு தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவதற்கு சுமார் 91 ஆண்டுகளுக்கு முன்பே போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்களால் தமிழை செம்மொழியாக்க வேண்டுமென முதன் முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது...!!!  கரந்தை தமிழ் சங்கத்தின் சார்பில் 24.5.1919 மற்றும் 25.5.1919 ஆகிய இரு நாட்களில் கொண்டாடப்பட்ட ஏழு மற்றும் எட்டாம் ஆண்டு விழாவின் போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ''தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழியே'' என்னும் தீர்மானம் இயற்றப்பெற்றது தமிழ் மொழியானது தொன்மையும், சீர்மையும், செம்மையும் வாய்ந்து விளங்குகின்ற ஓர் உயர்தனிச் செம்மொழியென உறுதிபட பலராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதால் சென்னை பல்கலைக் கழகத்தார் தமிழ் என்பது உயர் தனிச் செம்மொழி என்பதை ஒப்புக்கொண்டு இத்தென்னாட்டுப் பல்கலைக் கழகத்தில் அதற்கு முறைப்படி முதலிடமும் உரிமைகளும் கொடுக்க வேண்டுமென்ற தீர்மானம் இயற்றப்பட்டது இந்த தீர்மானமானது கரந்

கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் தலைமையில் நடந்த நான்காவது அகமுடையார் மாநாடு

அகமுடையார் வழித்தோன்றல் தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை  அகமுடையார் வரலாற்றில் முதல் முறையாக 1926 ஆம் ஆண்டு அகமுடையார் பேரினத்தின் நலன் கருதி அகமுடையார்கென தனி சங்கம் (சென்னை மாகான அகமுடையார் மகாசன சங்கம்) என்ற பெயரில் உருவாக்கி மாபெரும் 4 அகமுடையார் மாநாடுகளை நடத்தி வெற்றி கண்டவர் வீரத்திருமகன் பட்டுக்கோட்டை நாடிமுத்து பிள்ளை ஆவார் இதன் நான்காவது மாநாட்டை 1932 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை தலைமையில் நடத்தினார் அந்த மாநாட்டில் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை ஆற்றிய உரை உங்கள் பார்வைக்கு...!!!  அகமுடையார் இனம் சார்ந்த மாநாடாக இருந்தாலும் இதிலும் கூட தமிழ் வளர்ச்சிக்கும் நமது இனத்தில் வாழும் ஏழை எளிய குழந்தைகளின் நலனுக்காகவும் கல்வி வளர்ச்சிக்குமே ஐயா உமா மகேசுவரன் பிள்ளை அதிகம் பேசியுள்ளார்...!!!  புகைப்படம் ஆதாரம் உதவி செய்த மதிப்பிற்குரிய அண்ணன் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி...!!!  இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு