அகமுடையார் வழித்தோன்றல் தேசியத்தலைவர் ஐயா ஏ ஆர் பெருமாள் தேவர் அவர்கள் அருப்புக்கோட்டை ராமுத்தேவர் - பாக்கியம் அம்மாள் ஆகியோரின் புதல்வராக 17.1.1921 ஆம் ஆண்டு பிறந்தார்...!!! பெருமாள் தேவர் அவர்கள் ''அகில இந்திய பார்வர்ட் ப்ளாக்'' கட்சியின் தேசிய தலைவராக இருந்தவர் இன்றைக்கு எத்தனையோ நூல்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றி வந்திருக்கலாம் ஆனால் அதற்கெல்லாம் விதை போட்டவர் அகமுடையார் வழித்தோன்றல் ஏ.ஆர்.பெருமாள் தேவர் ஆவார் அவர் எழுதிய ”முடிசூடா மன்னர் முத்துராமலிங்கத்தேவர்” என்ற நூலை படிக்காதவர் பெரும்பாலும் இருக்க முடியாது முதன் முறையாக பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வரலாற்றை முழுமையாக எழுதியவர் இவரே தனது 12 வயதில் இருந்து தேவரோடு பயனித்தவர் மேலும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முதல் சிஷ்யன் ஆவார் அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தின் காரியாபட்டி தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருமுறை வென்றவர்...!!! 1937 சட்டபேரவை தேர்தல் சமயம் முத்துராமலிங்க தேவர் அருப்புக்கோட்டை அகம்படியர் மஹாலில் தங்கியிருந்த நேரம் செய்தி கேட்டு மக்கள் கூடி விட்டனர் பின்னர் தேவர் வெளியே வந்...
அகமுடையார் வரலாறு மீட்புகுழு