ஐந்தாம் தமிழ் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த அகமுடையார் வழித்தோன்றல் தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் 77 வது ஜெயந்தி விழா முதன் முறையாக அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் மூலம் தஞ்சாவூர் கரந்தையில் கொண்டாடப்பட்டது உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் படத்திறப்பு விழாவும் நடைபெற்றது...!!! ஆங்கிலேயரின் ஆதிக்கம் இருந்த காலமான 1919 லேயே கரந்தை தமிழ் சங்கத்தின் மூலமாக தமிழ் மொழியை செம்மொழியாக்க வேண்டுமென முதன் முதலில் தீர்மானம் நிறைவேற்றியவர் உமா மகேசுவரன் பிள்ளை ஆவார் மேலும் அகமுடையார் பேரினத்தின் நலன் கருதி அகமுடையார்கென முதல் முறையாக 1926 ஆம் ஆண்டு சென்னை மாகாண அகமுடையார் மகாசன சங்கம் உருவாக முக்கிய காரணகர்த்தா ஆவார் இந்த வரலாற்றை நினைவு கூறும் வகையில் சுவரொட்டி தயார் செய்து அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் தஞ்சை பகுதியில் ஒட்டப்பட்டது...!!! மே 7 உமா மகேசுவரன் பிள்ளை பிறந்த தினத்தன்று தஞ்சாவூர் கரந்தை தமிழ் சங்கத்தில் அமைந்துள்ள ஐயாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! உமா மகேசுவரன் பிள்ளை உதித்த நல்ல நாளில் ...