24 சங்க இலக்கிய நூல்களுக்கு உரைநடை எழுதிய அகமுடையார் வழித்தோன்றல் பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள மேலைப் பெருமழை என்றும் சிறிய கிராமத்தில் வேலுத்தேவர் சிவகாமியம்மாள் தம்பதிக்கு 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் சோமசுந்தரனார் பிறந்தார் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து அரிச்சுவடி, ஆத்திச்சூடி, வெற்றிவேற்கை, நிகண்டுகள், நைடதம், கிருட்டிணன் தூது, அருணாசலப் புராணம் முதலிய நூல்களைக் கற்றார் இவருடைய தந்தையார், தொடர்ந்து மகன் படிப்பதற்கு இடம் தராமல் உழவுத் தொழிலில் ஈடுபடுத்தினார் இருப்பினும் தந்தையாருக்குத் தெரியாமல் கோவில் மடம் முதலிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள நூல்களைப் பெற்று படித்து வந்தார்...!!! இவருடைய தாயார் இவரது பத்தாவது வயதில் காலமாகிவிட்டார் தந்தையார் மறுமணம் செய்து கொண்டார் பின்னர் சோமசுந்தரனார் தமது தாய்மாமன் இல்லத்தில் தங்கினார் இவரது கிராமத்துக்கு அருகில் உள்ள ஆலங்காடு என்னும் ஊரில் ‘சர்க்கரைப் புலவர்’ வாழ்ந்து வந்தார் அவரைக் கண்டு தமது கல்வி ஆர்வத்தை வெளிப்படுத்தினார் சர்க்கரைப் புலவ...
அகமுடையார் வரலாறு மீட்புகுழு