Skip to main content

Posts

Showing posts from June, 2018

காளையார் கோவில் காட்டில் மருதரசர்கள் உயிரை காத்த புளியமரம்

காளையார் கோவில் காட்டில் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் உயிரை காத்த புளியமரம் : 09/08/1801 அன்று ஆங்கிலேயர்களின் மரம் வெட்டும் குழுவிற்கு மேஜர் ஷெப்பர்டு தலைமை ஏற்றார் அவர்களின் வேகமான முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த ஒரு மேட்டை வசப்படுத்தும் முயற்சியில் அவர்கள் இருந்தனர் ஆங்கிலேயர்களால் வசப்படுத்தப்பட்ட அந்த மேட்டை ஒரு இராணுவ நிலையாக அரண் செய்யும்படி ஆங்கிலேயர்களுக்கு உத்தரவு வந்தது அதன்படி கர்னல் இன்ஸ் என்பவரின் தலைமையில் ஒரு அணி புறப்பட்டு வந்து வேலையில் ஈடுபட்டது 300 வீரர்களும் 3 பீரங்கிகளும் இருக்கும் அளவிற்கு ஏற்றவாறு மாலை நேரம் வருவதற்குள் தற்காலிகமாக ஒரு கொத்தளம் அமைத்தனர்...!!!  ஆங்கிலேயர்கள் அமைத்த கொத்தளத்தின் தென்பகுதி காளையார் கோவிலை பார்த்து இருந்தது மேலும் அந்த இடத்தில் இருந்து காளையார் கோவிலும் சிறுவயலும் தெளிவாக தெரியும்படி அமைந்திருந்தது அங்கிருந்த ஒரு பெரிய புளிய மரத்தை ஆங்கிலேயர்களின் படைகளால் வெட்ட முடியவில்லை இந்த புளிய மரம் தான் மருதரசர்கள் உயிரை காத்தது என்பது குறிப்பிடத்தக்கது...!!!  குண்டடிபட்ட புளிய மரம் : நெருங்கி புடிக்க முடியாததும் வெட

சிவகங்கை சீமை சிவந்த தினம்

ஜீன் 2 தமிழனின் வரலாற்றில் மிக முக்கியமான தினம் சிவகங்கை சீமை சிவந்த தினம் இரத்த சரித்திரம் உருவான தினம்...!!! மருது சீமையான சிவகங்கை சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் தன்னை நம்பி வந்த கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக ஆங்கிலேயர்கள் சிவகங்கை சீமை மீது போர் தொடுக்க மே 26 1801 அன்று புறப்படுகிறார்கள் அவ்வாறு புறப்பட்ட அவர்களது படைகள் ஜீன் 2 1801 ஆம் நாளன்று மேஜர் கிரே தலைமையில் நாகலாபுரத்திலிருந்து 46 மைல்கள் தூரத்தில் உள்ள மருது சீமைக்குட்பட்ட திருப்புவனத்தை வந்தடைகிறார்கள் அங்கே மருது நாட்டை சேர்ந்த வீரர்கள் முதல் முறையாக ஆங்கிலேயர்களின் கண்களுக்கு தென்படுகிறார்கள்...!!! மருது நாட்டு வீரர்கள் ஆங்கிலேயர்களின் படையில் பின் வரிசையில் வந்த வீரர்களை சுடுகிறார்கள் ஆனால் அதை தவிர ஆங்கிலேயர்களுக்கு வேறு இடைஞ்சல் ஏதுமில்லை மேலும் ஆங்கிலேயர்களின் முகாமிற்கு அருகிலிருந்த வெற்றிலை கொடி காலில் இருந்து இரவு நேரத்தில் நமது மருது நாட்டு வீரர்கள் வெடிகளை வெடித்தார்கள் இதனால் ஆங்கிலேயர்கள் இரவு முழுவதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது ஆனாலும் அவர்க

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் அளித்த வெள்ளி தேர்

மருது சீமையான சிவகங்கை சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்களால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருஞானசம்பந்த பெருமானை ஆவணி மூல வீதிகளில் எழுந்தருளச் செய்வதற்கு மதுரை ஆதீனத்திற்கு வழங்கப்பட்ட வெள்ளி தேர் இன்று 31/05/2018 மீனாட்சி அம்மன் கோயில் வெளியே வீதி உலா வந்தது...!!! இவ்விழாவில் நமது அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் இளைஞர்கள் கலந்து கொண்டனர்...!!! வெள்ளி தேர் பற்றி முதன் முதலில் குரல் கொடுத்த சைவநெறி மீட்பு பேரவைக்கும் இந்த தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்திய ஐயா மாரி சேர்வை அவர்களுக்கு நன்றிகள்...!!! இவண் : அகமுடையார் வரலாறு மீட்புகுழு