ஜீன் 2 தமிழனின் வரலாற்றில் மிக முக்கியமான தினம் சிவகங்கை சீமை சிவந்த தினம் இரத்த சரித்திரம் உருவான தினம்...!!!
மருது சீமையான சிவகங்கை சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் தன்னை நம்பி வந்த கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக ஆங்கிலேயர்கள் சிவகங்கை சீமை மீது போர் தொடுக்க மே 26 1801 அன்று புறப்படுகிறார்கள் அவ்வாறு புறப்பட்ட அவர்களது படைகள் ஜீன் 2 1801 ஆம் நாளன்று மேஜர் கிரே தலைமையில் நாகலாபுரத்திலிருந்து 46 மைல்கள் தூரத்தில் உள்ள மருது சீமைக்குட்பட்ட திருப்புவனத்தை வந்தடைகிறார்கள் அங்கே மருது நாட்டை சேர்ந்த வீரர்கள் முதல் முறையாக ஆங்கிலேயர்களின் கண்களுக்கு தென்படுகிறார்கள்...!!!
மருது நாட்டு வீரர்கள் ஆங்கிலேயர்களின் படையில் பின் வரிசையில் வந்த வீரர்களை சுடுகிறார்கள் ஆனால் அதை தவிர ஆங்கிலேயர்களுக்கு வேறு இடைஞ்சல் ஏதுமில்லை மேலும் ஆங்கிலேயர்களின் முகாமிற்கு அருகிலிருந்த வெற்றிலை கொடி காலில் இருந்து இரவு நேரத்தில் நமது மருது நாட்டு வீரர்கள் வெடிகளை வெடித்தார்கள் இதனால் ஆங்கிலேயர்கள் இரவு முழுவதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது ஆனாலும் அவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர்...!!!
நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் மட்டுமின்றி தனது ஒட்டு மொத்த குடும்பத்தையும் நாட்டையும் நாட்டு மக்களையும் இழந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி வீரமரணம் அடைந்து இன்று நட்பின் இலக்கணமா திகழும் தியாக திருவடிகள் மாமன்னர்கள் மருது பாண்டியர்களை இந்நாளில் நினைவு கூறுவதில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு பெருமிதம் கொள்கிறது...!!!
ஆதாரங்கள் :
ஆங்கிலேய அதிகாரி கர்னல் வேல்ஸ் தனது கைப்பட எழுதிய ''எனது இராணுவ நினைவுகள்'' பக்கம் 428
மீ மனோகரன் அவர்கள் எழுதிய ''மருது பாண்டிய மன்னர்கள்''
பக்கம் 597
Comments
Post a Comment