மாவீரர் மலேயா கணபதி டிசம்பர் 29 /12 /2017 தஞ்சாவூர் தம்பிக்கோட்டையில் போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் மாவீரர் மலேயா கணபதி நினைவு தூண் திறப்பு விழா நடைபெற்றது சில மாதங்களுக்கு முன்பு ரஜினி நடித்து வெளிவந்த கபாலி திரைப்படத்தின் கதை மலேயா கணபதியின் வீர வரலாறு என்பது அனைவரும் அறிந்ததே மலேயாவில் ஏழை எளிய தொழிலாளர்களின் இழிநிலையை கண்டு மனம் கொதித்து அவர்களின் துயர் துடைத்தவராவார் மேலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தை அமைந்த போது நேதாஜியின் அழைப்பை ஏற்று மலேயா கணபதி INA படையில் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியராக பணியாற்றினார்...!!! மலேயாவில் வாழ்ந்த அனைத்து இன தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி வலிமை வாய்ந்த ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கினார் அதன் மூலம் பல போராட்டங்களைச் செய்து வெள்ளை முதலாளிக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் அவரின் நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்து அப்போது மலேயாவை ஆண்ட பிரிட்டிஷ் காலனியாதிக்க அரசால் மலேயா கணபதி கைது செய்யப்பட்டு 04/05/1949 அன்று தூக்கிலிடப்பட்டார்...!!! தஞ்சாவூர் தம்பிக்கோட்டையில் புதிதாக திறக்கப்பட்ட மாவீரர்...
அகமுடையார் வரலாறு மீட்புகுழு