![]() |
மாவீரர் மலேயா கணபதி |
டிசம்பர் 29 /12 /2017 தஞ்சாவூர் தம்பிக்கோட்டையில் போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் மாவீரர் மலேயா கணபதி நினைவு தூண் திறப்பு விழா நடைபெற்றது சில மாதங்களுக்கு முன்பு ரஜினி நடித்து வெளிவந்த கபாலி திரைப்படத்தின் கதை மலேயா கணபதியின் வீர வரலாறு என்பது அனைவரும் அறிந்ததே மலேயாவில் ஏழை எளிய தொழிலாளர்களின் இழிநிலையை கண்டு மனம் கொதித்து அவர்களின் துயர் துடைத்தவராவார் மேலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தை அமைந்த போது நேதாஜியின் அழைப்பை ஏற்று மலேயா கணபதி INA படையில் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியராக பணியாற்றினார்...!!!
மலேயாவில் வாழ்ந்த அனைத்து இன தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி வலிமை வாய்ந்த ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கினார் அதன் மூலம் பல போராட்டங்களைச் செய்து வெள்ளை முதலாளிக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் அவரின் நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்து அப்போது மலேயாவை ஆண்ட பிரிட்டிஷ் காலனியாதிக்க அரசால் மலேயா கணபதி கைது செய்யப்பட்டு 04/05/1949 அன்று தூக்கிலிடப்பட்டார்...!!!
![]() |
தஞ்சாவூர் தம்பிக்கோட்டையில் புதிதாக திறக்கப்பட்ட மாவீரர் மலேயா கணபதி நினைவு தூண் |
![]() |
அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் மரியாதை செலுத்திய போது |
![]() |
31 ஆண்டுகளுக்கு முன்பு தம்பிக்கோட்டையில் மலேயா கணபதிக்கு வைத்த நினைவு தூணின் கல்வெட்டு |
31 வருடங்களுக்கு முன்பே தஞ்சாவூர் தம்பிக்கோட்டையில் வைக்கப்பட்டிருந்த அகமுடையார் வழித்தோன்றல் மாவீரர் மலேயா கணபதி நினைவு தூண் பற்றி இப்பதிவில் காண்போம் கடந்த 29/12/2017 அன்று தம்பிக்கோட்டையில் மாவீரர் மலேயா கணபதி நினைவு தூண் திறப்பு விழா நடைபெற்றது இது அனைவரும் அறிந்ததே ஆகும்...!!!
ஆனால் 6/7/1986 ஆம் ஆண்டே தம்பிக்கோட்டையில் அவருக்காக நினைவு தூண் வைத்துவிட்டனர் அந்த பகுதியில் ECR ரோடு வருவதின் காரணமாக வேறு வழியின்றி அந்த நினைவு தூணை இடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அப்போது இருந்த அரசாங்கத்தின் மூலம் அந்த தூண் இடிக்கப்பட்டு சாலை கொண்டு வரப்பட்டது அப்போது அந்த ஊரில் வசித்த ஒருவரின் (பெயர் தெரியவில்லை) முயற்சியால் திறப்பு விழா செய்யப்பட்ட கல்வெட்டு மட்டும் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டு சுமார் 31 ஆண்டுகள் பாதுகாத்து தற்போது 2017 ஆம் ஆண்டு திறப்பு விழா செய்யப்பட்ட நினைவு தூணில் புதிய மற்றும் பழைய கல்வெட்டையும் பதித்து உள்ளனர்...!!!
கல்வெட்டை பாதுகாத்த அந்த நபருக்கு இந்த நேரத்தில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்...!!!
![]() |
புதிய மற்றும் பழைய கல்வெட்டு |
இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு
Comments
Post a Comment