 |
மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் |
இன்று (அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள்) மருது சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் சிவகங்கை சீமை மீட்பு போருக்கு முன்பு வணங்கிய கோச்சடை முத்தையா கோவிலுக்கு சென்று நாம் மறந்த சில வரலாற்றை மீட்டனர்...!!!
மதுரையின் மைய பகுதியான கோச்சடை என்ற ஊரில் முத்தையா கோவில் உள்ளது மருது பாண்டியர்கள் வேலுநாட்சியாரை காப்பாற்றி விருப்பாச்சி கோபால நாயக்கர் உதவியுடன் விருப்பாச்சியில் பாதுகாத்து வந்தனர் பின்னர் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானின் உதவியுடன் போர் படைகளை திரட்டி கொண்டு மருதிருவர் வழிநடத்தி வருகிறார்கள் வெள்ளையனிடம் இழந்த சிவகங்கை சீமையை மீட்க வைகை ஆற்றினை கடந்து செல்லும் போது இந்த கோச்சடை முத்தையா கோவிலுக்கு வந்து வணங்கி விட்டு கோவிலின் தல விருட்சமான சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான புளியமரத்தின் அடியில் அவர்கள் அழைத்து வந்த மொத்த படை வீரர்களுடன் மருது பாண்டியர்கள் மற்றும் வேலுநாட்சியார் ஒரு இரவு தங்கி இறைவனை வணங்கி அதன் பிறகு தான் வெள்ளையர்களுடன் போரிட்டு இழந்த சீமையினை மீட்டுள்ளனர்...!!!
 |
முத்தையா கோவிலின் முன்புறம் |
இந்த கோயிலின் உள்ளே நுழைந்ததும் முத்தையாவும் வில்லாயுதம் உடைய அய்யனாரும் குதிரை மீது அமர்ந்த படி நம்மை வரவேற்கிறார்கள் அவர்களை தரிசித்து அப்படியே நேராக சென்றால் இந்திரன் அய்யனாருக்கு அளித்த வெள்ளை யானை உள்ளது அதையும் தாண்டி சென்றால் மூலஸ்தானத்தில் மூலவராக வில்லாயுதம் உடைய அய்யனார் அருள்பாலிக்கிறார் மேலும் மூலஸ்தானத்தின் முன்பு செண்பகப்பாண்டியன் காலத்தில் செண்பகத்தோட்டத்தில் கிடைத்த செண்பகவல்லி அய்யனார் உள்ளார்
இது பாண்டியர் கால புராதன கோயிலாகும் அய்யனார் மதுரை எல்லையின் காவல் தெய்வம் இங்கு திருமலை நாயக்கரால் இரண்டு குதிரையும் ஒரு பூதமும் முதலில் கட்டப்பட்டது...!!!
ஆரம்ப காலத்தில் முத்தையா சுவாமி என்பவர் இங்கு வந்தார் இங்குள்ள அய்யனாரிடம் அடைக்கலம் புகுந்தார் காலப் போக்கில் முத்தையா சுவாமி பிரபலமாகி விட்டார் அன்று முதல் அய்யனார் கோயில் என்ற நிலை மாறி முத்தையா கோயில் என்று வழங்கப்பட்டது...!!!
மரம் கூறும் வரலாறு : பொதுவாக புளிய மரத்தை பற்றி கூறும்போது "புளி ஆயிரம் பொந்து ஆயிரம்'' என் று கூறுவார்கள் அந்தவகையில் இந்த கோயிலின் தலவிருட்சமான புளிய மரத்தின் பொந்தைப்பார்த்தால் மரமும் கோயிலும் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாயந்ததாக கருதப்படுகிறது...!!!
 |
அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் |
 |
புதிதாக வைக்கப்பட்ட கோவிலின் தலவிருட்சமான புளிய மரம் |
கோச்சடை முத்தையா கோவிலின் தல விருட்சமான புளியமரமானது அந்த கோவிலை அடைக்கும் அளவுக்கு பெரிதாக வளர்ந்து காணப்பட்டது 2013 ஆம் ஆண்டு சூறாவளி காற்றின் காரணமாக மரம் சாய்ந்தது அதன் பிறகு அதே இடத்தில் ஒரு புளிய மரக்கன்றை வைத்து வணங்கி வந்தனர் தற்போது அது வளர்ந்து தழைத்து நிற்கிறது மேலும் சில வருடங்களுக்கு முன்பு வரை மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் மற்றும் ராணி வேலுநாட்சியார் இந்த கோவிலுக்கு வந்து வணங்கி சென்றதை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக ஒரு பலகை வைக்கப்பட்டிருந்தது தற்போது அந்த பலகையும் இல்லை...!!!
 |
அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் வணங்கிய போது |
 |
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கோச்சடை முத்தையா கோவில் புளியமரம்...!!! |
 |
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான புளியமரம் 2013 ஆம் ஆண்டு சாய்ந்தது அந்த வேலையில் எடுத்த புகைப்படம்...!!! |
 |
இந்த வரலாற்று தகவலை நமக்கு அளித்த அண்ணன் செந்தில்குமார் அவர்களுக்கு நன்றி...!!! |
Comments
Post a Comment