Skip to main content

Posts

Showing posts from March, 2018

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தின மா

தென் தமிழகத்தையே வென்ற வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை

அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை  மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குருவான அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை அவர்களின் மண்டகபடி திருவிழா இராமநாதபுரம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் பங்குனி திருவிழாவில் 8 ஆம் திருநாள் மண்டகபடியாக ''வெள்ளையன் சேர்வை'' மண்டகபடி மிகச்சிறப்பாக நடைபெறுகிறது...!!! ------------------------------------------------------------------ வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை 1736 முதல் 1763 வரை நான்கு சேதுபதிகளின் ஆட்சி காலத்தில் அரசாங்கத்தில் சக்தி வாய்ந்த ஒரு தலைவனாக விளங்கினார் அந்த 27 ஆண்டுகால சேதுநாட்டு வரலாறானது தளவாய் வெள்ளையன் சேர்வையின் வெற்றி புகழின் வரலாறாகவே காணப்படுகிறது...! சேதுபதிகளின் ஆட்சியில் தளவாயாக பணியாற்றியவர்களில் இவர் பெயர் தனியிடம் வகிக்கிறது மதுரை நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் தளபதியும் அமைச்சரும் சேர்ந்த ஒரு பதவி உருவாக்கப்பட்டது அதன் பெயரே தளவாய் என்பதாகும்...! நாட்டின் ஆட்சி முறையெல்லாம் சேர்வைகாரருக்கு உட்பட்டே இருந்தது வெள்ளையன் சேர்வையின் வீரம் புகழ் தமிழ் நா

அரசாண்ட அகமுடையார் இல்ல திருமண விழா பதாகை

தமிழகத்திலே முதல் முறையாக 50 அகமுடையார் வழித்தோன்றல்கள் படங்களை கொண்டு வரலாறு ரீதியாக அகமுடையார் வரலாறு மீட்புகுழு மூலம் தயார் செய்யப்பட்ட திருமண பதாகை...!!! தமிழகத்தில் அதிக வழித்தோன்றல்கள் கொண்ட ஒரே பேரினம் அகமுடையார் இனம் என்பதை கர்வத்துடன் சொல்...!!! அகமுடையார் வரலாறு மீட்புகுழு

இரத்தத்தில் கையெழுத்திட்டு நேதாஜியின் ஐ.என்.ஏ படையில் இணைந்து போர் புரிந்த மாவீரர் ஜெயராமன் முதலியார்

மாவீரர் ஜெயராமன் முதலியார்  போர்க்குடி அகமுடையார் பேரினத்தில் பிறந்த சுதந்திர போராட்ட தியாகி மாவீரர் ஜெயராமன் முதலியார் அவர்கள் வேலூர் உசூர் பகுதியில் 21.3.1921 ம் வருடத்தில் பிறந்தார் இவர் தனது இளம் வயதிலேயே ஐ.என்.ஏ எனும் இந்திய தேசிய ராணுவப் படையில் ராக்கெட் பாராசூட் பிரிவில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் தனது 13 வயதில் அணைக்கட்டு பகுதியில் மவுண்ட் என்ற பள்ளியில் படித்து வந்தார் அந்த நேரத்தில் அப்பகுதியில் தேசிய பற்றாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காந்தி பற்றிய பாடல்களை பாடியும் ஜெயராமன் முதலியாருக்கு கற்றும் கொடுத்தனர் அந்த பாடல்களை விரும்பி கற்றுக்கொண்ட ஜெயராமன் முதலியார் தான் படிக்கும் மவுண்ட் பள்ளியில் இந்த பாடலை பாடுகிறார் ஆனால் அந்த பள்ளி ஆங்கிலேயரின் பள்ளி என்பதால் அங்குள்ள ஆசிரியர்கள் மிகுந்த கோபத்துடன் ஜெயராமன் முதலியாரை அடித்தனர் ஜெயராமன் முதலியார் அந்த ஆசிரியரை பதிலுக்கு பதில் அடிக்கு அடி கொடுத்துவிட்டு அந்த ஊரைவிட்டே சென்றுவிடுகிறார் எங்கு தேடியும் கிடைக்காத ஜெயராமன் முதலியார் சில மாதங்களுக்கு பிறகு ஹிட்லரின் ஜெர்மன் படையில் ப

மணலி கந்தசாமி பிள்ளை

தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னனி தலைவர்களில் ஒருவரான மேலும் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களின் உரிமைக்காக அயராது உழைத்த அகமுடையார் வழித்தோன்றல் மணலி கந்தசாமி பிள்ளை  முன்பு தஞ்சாவூர் மாவட்டமான திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிற்றூர் தான் மணலி இந்த ஊரின் விவசாய குடும்பத்தை சேர்ந்த சிதம்பர தேவர் புனிதவதி அம்மையாருக்கு 12/03/1911 அன்று தலை மகனாகப் பிறந்தவர் தான் அகமுடையார் வழித்தோன்றல் மணலி கந்தசாமி பிற்காலத்தில் தமிழகம் அறிந்த மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவராக புகழ் பெற்று விளங்கினார்...!!!  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் செயலாளராகவும் இரண்டு முறை சட்டப்பேரவை உறிப்பினராகவும் தேர்ந்துதெடுக்கப்பட்டவர் விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்தவர் நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு எதிராக பெரு நில முதலாளிகள் செய்த அடக்கு முறைகளை எதிர்த்து நின்றவர் விடுதலைப் போராட்டத்தில் அதன் வெற்றியில் அடித்தட்டு மக்களின் விடுதலைக்காக மேம்பாட்டுக்காகக் பாடுபட்டவர்களில் மணலி கந்தசாமியின் வாழ்வும் போராட்ட பணியும் குறிப்பிடத்தக்கது பள்ள

கோயம்புத்தூரை கிராமத்திலிருந்து இன்றுள்ள நகரமாக மாற்றிய இரத்தின சபாபதி முதலியார்

கோயம்புத்தூரை கிராமத்திலிருந்து இன்றுள்ள நகரமாக மாற்றிய அகமுடையார் வழித்தோன்றல் இரத்தின சபாபதி முதலியார் பிறந்த தினம் இன்று இந்த நாளில் அவரது தியாகத்தை நினைவு கூறுவோம்...!!! கோயமுத்தூரில் குடிநீர்பஞ்சம் : தொழில் வளம்,சீதோஷ்ண நிலை, உயர் கல்வி,பல்துறை மருத்துவம், தகவல் தொழில் நுட்பம் என பல விஷயங்களிலும், சர்வதேசமும் போற்றக்கூடிய நகரமாக வளர்ந்துள்ள கோவையில் குடியேறுவதற்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் மக்கள் படையெடுத்து வருகின்றனர் ஆனால் ஒரு காலத்தில் வாழத்தகுதியற்ற ஊர் என்று பெயர் பெற்றிருந்தது கோவை என்றால் நம்ப முடிகிறதா...? ஆனால் அதுதான் நிஜம் அந்தளவுக்கு கோவையைப் பிடித்து ஆட்டியது குடிநீர் பஞ்சம் நிலத்தடி நீரும் மாசு பட்டு மோசமாக இருந்ததாக பல்வேறு ஆவணங்களும் உறுதி செய்கின்றன அப்படியிருக்கையில் சிறுவாணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து கோயமுத்தூர் மக்களின் தாகம் தீர்க்கும் தொலைநோக்குத் திட்டத்தை மிகுந்த இடர்பாடுகளுக்கிடையே நிறைவேற்றியவர் அன்றைய கோவை நகராட்சியின் தலைவர் அகமுடையார் வழித்தோன்றல் திரு. C.S.இரத்தினசபாபதி முதலியார் எனும் அகமுடையார் ஆவார்...!!! முதன் முதலாய் சிறுவாணித் தண்ணீரை குழாய்

மழை வெள்ளத்தால் நிரம்பிய காளையார் கோவிலை சித்தர் வடிவில் வந்து காத்த மருது பாண்டியர்கள்

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு மருது சீமையான காளையார் கோவிலில் நடந்த நிகழ்ச்சி...!!! சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு காளையார் கோவில் பகுதியில் பலத்த மழை பெய்து வெள்ளம் வந்தது இதனால் காளையார் கோவில் தெப்பக்குளம் ஆனைமடு விரைவில் நிறைந்தது ஏனென்றால் காளையார் கோவில் அமைந்துள்ள பகுதி பள்ளமான இடமாகும் இதற்கு எடுத்துக்காட்டாக சுமார் 200 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியினை நினைவு கூற விரும்புகிறேன்...!!! காளையார் கோவில் தெப்பக்குளம்                   மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு காளையார் கோவிலில் உள்ள காளீஸ்வரருக்கு ஒரு ராஜகோபுரம் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளதைப் போல் கட்ட வேண்டும் என்ற ஆசை அதற்கான ஆயத்த வேலைகள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது அஸ்திவாரம் தோண்டும் போது பிரச்சனைகள் கட்டிடம் கட்ட முடியாமல் நீர் ஊற்று அதிகரித்து கட்டிடம் கட்ட தடைப்பட்டது அந்த சமயத்தில் சிறிய வயதுடைய ஒரு முகமதியர் பெயர் சுலைமான் பக்கிரி என்பவர் அந்த இடத்திற்கு வந்தார் அவர் யார் தெரியுமா...? ஆற்காட்டு நவாப் முகமதலியின் படையில் பணி ஆற்றிய ஒரு தலைசிறந்த வீரன் தான் சுலை

சுதந்திர போராட்ட தியாகி மாவீரர் மாயாண்டி சேர்வை

ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் சமயம் மதுரை பகுதியில் இருந்த சமயம் இந்து சமுதாய பெண்கள் வெளியில் செல்லவோ திருவிழாக்களிலோ கலந்து கொள்ளவோ முடியாத சூழல் நிலவிகொண்டிருந்தது மாற்று மதத்தினரால் கடத்தபட்டு கொலை செய்யபடும் நிகழ்வுகள் சாதாரணமாக நடந்தது இதற்கு முற்றுபுள்ளி வைத்தவர்கள் மாயாண்டி சேர்வை மற்றும் அவரது குழுவினர் அகமுடையார் வழித்தோன்றல் மாவீரர் மாயாண்டி சேர்வை அவர்கள் தேசியவாதியாக இருந்தவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தேசிய கொடி ஏற்றபோவதாக ஆங்கிலேயர்களிடம் அறிவித்தார் ஆங்கிலேயர்களும் அவரை தடுப்பதற்கு பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தி இருந்தனர் ஆனால் மாயாண்டி சேர்வை மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு கோபுரத்திலே சில நாட்கள் தங்கி அந்த நாட்களில் உணவு தண்ணீர் இன்றி வாழ்ந்து சொன்ன தேதியில் தேசிய கொடி ஏற்றிவிட்டார்...!!!  மாயாண்டி சேர்வை வரைந்த மருதரசர்கள் திருவுருவ படம்...!!!  மாயாண்டி சேர்வை மிக சிறந்த ஓவியரும் ஆவர் மருது சீமையான சிவகங்கை சீமையின் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் சிம்மாசனத்தில் உள்ளவாறு முதன்முதலில் படம் வரைந்தவர் இவரே...!!! மதுரை இந்து மகாசபை தலைவராக இருந்து இந்துகளுக