Skip to main content

இரத்தத்தில் கையெழுத்திட்டு நேதாஜியின் ஐ.என்.ஏ படையில் இணைந்து போர் புரிந்த மாவீரர் ஜெயராமன் முதலியார்




மாவீரர் ஜெயராமன் முதலியார் 

போர்க்குடி அகமுடையார் பேரினத்தில் பிறந்த சுதந்திர போராட்ட தியாகி மாவீரர் ஜெயராமன் முதலியார் அவர்கள் வேலூர் உசூர் பகுதியில் 21.3.1921 ம் வருடத்தில் பிறந்தார் இவர் தனது இளம் வயதிலேயே ஐ.என்.ஏ எனும் இந்திய தேசிய ராணுவப் படையில் ராக்கெட் பாராசூட் பிரிவில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் தனது 13 வயதில் அணைக்கட்டு பகுதியில் மவுண்ட் என்ற பள்ளியில் படித்து வந்தார் அந்த நேரத்தில் அப்பகுதியில் தேசிய பற்றாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காந்தி பற்றிய பாடல்களை பாடியும் ஜெயராமன் முதலியாருக்கு கற்றும் கொடுத்தனர் அந்த பாடல்களை விரும்பி கற்றுக்கொண்ட ஜெயராமன் முதலியார் தான் படிக்கும் மவுண்ட் பள்ளியில் இந்த பாடலை பாடுகிறார் ஆனால் அந்த பள்ளி ஆங்கிலேயரின் பள்ளி என்பதால் அங்குள்ள ஆசிரியர்கள் மிகுந்த கோபத்துடன் ஜெயராமன் முதலியாரை அடித்தனர் ஜெயராமன் முதலியார் அந்த ஆசிரியரை பதிலுக்கு பதில் அடிக்கு அடி கொடுத்துவிட்டு அந்த ஊரைவிட்டே சென்றுவிடுகிறார் எங்கு தேடியும் கிடைக்காத ஜெயராமன் முதலியார் சில மாதங்களுக்கு பிறகு ஹிட்லரின் ஜெர்மன் படையில் பணியாற்றுவதாக தகவல் கிடைக்கிறது...!!! 


அந்த சமயத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய நாட்டின் விடுதலைக்காக ஹிட்லரிடம் உதவி கேட்கிறார் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு உங்கள் படையில் உள்ள இந்திய சிப்பாய்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்க அதனை ஏற்ற ஹிட்லர் சுமார் முப்பதாயிரம் வீரர்களை இந்தியா அனுப்புகிறார் அந்த வீரர்கள் இரத்தத்தில் கையெழுத்திட்டு தாய் நாட்டின் விடுதலைக்காக போராட வந்தனர் அதில் ஜெயராமன் முதலியாரும் ஒருவர்...!!!

ஹிட்லர் அளித்த The Italy Star விருது 


சரியான உணவு உறக்கம் கிடையாது எந்த வகையிலும் வருமானம் கிடையாது உயிருக்கு உத்திரவாதமும் கிடையாது இதனை எல்லாம் மனப்பூர்வமாக ஏற்று இரத்தத்தில் கையெழுத்திட்டு நாட்டை காக்க வாருங்கள் என்று கூற அதன்படியே வேலூர் மாவட்டத்திலே முதல் ஆளாய் நேதாஜியின் ஐ.என்.ஏ படையில் ராக்கெட் பாராசூட் பிரிவில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றினார் மாவீரர் ஜெயராமன் முதலியார்...!!!

இத்தாலியின் படையில் ஜெயராமன் முதலியார் பணியாற்றிய போது அங்கு நடந்த ஒரு போரில் இவர் பலரை கொன்று குவித்ததால் இத்தாலியன் அரசாங்கம் இவருக்கு ''THE ITALY STAR'' என்ற விருது வழங்கி சிறப்பித்தது ஹிட்லர் அரசாங்கம் மேலும் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு தாமரை பட்டையம் விருது அளித்து கெளரவித்தது மேலும் பாரத் ரத்னா மேதகு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் APJ அப்துல்கலாம் நேதாஜியின் இந்திய ராணுவப்படையில் பணியாற்றியதற்கு ''நாட்டிற்கு உழைத்த விடுதலை வீரர்'' எனவும் விடுதலை போராட்ட தியாகி எனவும் கெளரவப்படுத்தினார் மேலும் மாநில அரசு தாமரை பட்டம் விருது வழங்கி சிறப்பித்தது...!!!

நாட்டிற்க்கு உழைத்த விடுதலை வீரர் என்ற விருதை APJ அப்துல்கலாம் வழங்கிய போது


மாநில அரசு அளித்த தாமரை பட்டம் 


மத்திய அரசு அளித்த தாமரை பட்டையம் 


ஜெயராமன் முதலியாரின் முழு தகவல் மற்றும் அவர் வகித்த பதவிகள் 


சுதந்திரம் பெற வேண்டி சுமார் 8 ஆண்டுகள் குடும்பத்தினரை பிரிந்து இருந்தார் ஜெயராமன் முதலியார் சுதந்திரத்திற்குப் பிறகும் பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வந்த இவர் 2007ம் வருடம் டிசம்பர் 8ம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார் நாட்டுக்காக உழைத்து உயிர் நீத்த அகமுடையார் வழித்தோன்றல் ஜெயராமன் முதலியார் புகழ் எட்டுதிக்கும் ஓங்குக...!!!

அகமுடையார் வரலாறு மீட்புகுழு 

Comments

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படத்தின் திறப்பு விழா

பேராசிரியர் ராஜையன்  மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நேரடி வாரிசுதார் திருப்பத்தூர் ராமசாமி சேர்வை  சிவகங்கை வரலாற்று ஆய்வாளர் குருசாமி மயில்வாகனன்  வரலாற்றில் மறைக்கபட்ட இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் படுகொலையான திருப்பத்தூர் படுகொலையில் வீரமரணம் அடைந்த முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து இன்னுயிர் நீத்த 500 க்கும் மேற்பட்ட போராளிகளின் தியாகத்தை உயிர்பிக்கும் வீர வரலாறு தான் திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படம்...!!! திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படத்தை YouTube வழியே காண https://youtu.be/OpDrspgrHng அக்டோபர் 24 2018 அன்று திருப்பத்தூரில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் அரசு மணி மண்டபத்தில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு மூலம் #திருப்பத்தூர் #படுகொலை ஆவணப்படத்தை பேராசிரியர் ராஜையன் அவர்களின் கைகளால் திறந்து வெற்றிகரமாக இவ்விழா இனிதே நிறைவடைந்தது...!!! ஆயிரம் ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் இருந்தும் தள்ளாத வயதில் உள்ள முதியவரான ஐயா ராஜையன் அவர்கள் கைகளால்...

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தி...