Skip to main content

கோயம்புத்தூரை கிராமத்திலிருந்து இன்றுள்ள நகரமாக மாற்றிய இரத்தின சபாபதி முதலியார்


கோயம்புத்தூரை கிராமத்திலிருந்து இன்றுள்ள நகரமாக மாற்றிய அகமுடையார் வழித்தோன்றல் இரத்தின சபாபதி முதலியார் பிறந்த தினம் இன்று இந்த நாளில் அவரது தியாகத்தை நினைவு கூறுவோம்...!!!

கோயமுத்தூரில் குடிநீர்பஞ்சம் :

தொழில் வளம்,சீதோஷ்ண நிலை, உயர் கல்வி,பல்துறை மருத்துவம், தகவல் தொழில் நுட்பம் என பல விஷயங்களிலும், சர்வதேசமும் போற்றக்கூடிய நகரமாக வளர்ந்துள்ள கோவையில் குடியேறுவதற்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் மக்கள் படையெடுத்து வருகின்றனர் ஆனால் ஒரு காலத்தில் வாழத்தகுதியற்ற ஊர் என்று பெயர் பெற்றிருந்தது கோவை என்றால் நம்ப முடிகிறதா...? ஆனால் அதுதான் நிஜம் அந்தளவுக்கு கோவையைப் பிடித்து ஆட்டியது குடிநீர் பஞ்சம் நிலத்தடி நீரும் மாசு பட்டு மோசமாக இருந்ததாக பல்வேறு ஆவணங்களும் உறுதி செய்கின்றன அப்படியிருக்கையில் சிறுவாணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து கோயமுத்தூர் மக்களின் தாகம் தீர்க்கும் தொலைநோக்குத் திட்டத்தை மிகுந்த இடர்பாடுகளுக்கிடையே நிறைவேற்றியவர் அன்றைய கோவை நகராட்சியின் தலைவர் அகமுடையார் வழித்தோன்றல் திரு. C.S.இரத்தினசபாபதி முதலியார் எனும் அகமுடையார் ஆவார்...!!!

முதன் முதலாய் சிறுவாணித் தண்ணீரை குழாய் வழியாகச் சுவைத்த மக்கள் ஆனந்தக் கூத்தாடினர் சிறுவாணித் திட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் இன்றைய கோயமுத்தூரின் நிலமையை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது...!!!

கோயமுத்தூர் நகரை விரிவாக்கம் செய்தல் :

பழைய கோயமுத்தூர் என்பது கிழக்கு மேற்காக இரண்டு மைல் தெற்கு வடக்காக ஒரு மைல் என்ற அளவில்தான் இருந்தது மேற்கே சலிவன் வீதி வடக்கே சுக்கிரவாரப்பேட்டை வீதி கிழக்கே ரயில்வே ஸ்டேஷன் தெற்கே செட்டி வீதி எனப்படும் வைசியாள் வீதி இவ்வளவு தான் மொத்த கோயமுத்தூர் இதைச் சுற்றிப் பக்கத்திலேயே சிறு சிறு கிராமங்கள் இருந்தன அன்றைய கோவை என்பது அருகில் உள்ள கிராமங்களுக்கு எல்லாம் ஓர் தலைக் கிராமம் போல் சற்று பெரிய கிராமம் என்ற அளவிலேயே இருந்தது...!!!

ஒரு நகருக்குரிய கட்டமைப்போ மக்கள் குடியேற்றத்திற்கான வாய்ப்போ இல்லாத நிலையில் இரத்தின சபாபதி முதலியார் அவர்கள் கோயமுத்தூரின் வெளிப்புறத்தில் இருந்த முக்கிய பகுதிகளை (மருத்துவமனை,அரசு அலுவலகங்கள்) ஒன்றினைத்து மேலும் காடாய் இருந்த பகுதியை குடியிருப்பு நிலங்களாக மாற்றி அவற்றை கோயமுத்தூருடன் இணைத்து இன்றைய கோயமுத்தூர் நகர் உருவாக அடித்தளம் நாட்டினார் மேலும் மக்கள் குடியேற்றத்தினால் ஏற்படும் தண்ணீர் தேவையைப் போக்க மேற்சொன்ன சிறுவாணி தண்ணீர் திட்டத்தையும் நிறைவேற்றினார்...!!!

கோவை நகருக்கு தடையில்லா மின்சாரம் :

அதே போல் கிராமம் நகரமாக மாறும் போது அதன் வளர்ச்சிக்கேற்ப அதன் மின்சாரத் தேவையும் அதிகரிக்கும் இதை மனதிற் கொண்டு 
பைக்காரா மின் திட்டத்தை கோவை நகருடன் இணைத்து கோவை நகருக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கச் செய்தார் இவ்வாறு இரத்தின சபாபதி முதலியாரின் பல்வேறு ஆக்கப்பணிகளின் காரணமாக கோயமுத்தூர் வாழ்வதற்காக ஏற்ற நகரமாக மாற்றப்பட்டு வெறும் கிராமமாக அதுவரை இருந்த அப்பகுதி நகரத்தில் வாழ்வதற்குரிய அம்சங்களைப் பெற்று மக்கள் குடியேற்றம் பெருமளவில் ஏற்பட்டது அந்தவகையில் கோயமுத்தூர் இன்று தொழில்துறையில் ஓங்கி உயர்ந்து நிற்பதற்கு இரத்தினசபாபதி முதலியார் எனும் அகமுடையாரின் சீரிய முயற்சியே காரணம் ஆகும்...!!!


சமயம் மற்றும் கொடைப்பணி :

சமயப் பணிகளில் ஈடுபாடுடைய இவர் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தங்கிச் செல்வதற்காக கணபதி,போத்தனூர் உள்பட பல்வேறு இடங்களில் சத்திரம் அமைத்தார் தங்கிச் செல்லும் பக்தர்களுக்கு உணவும் இலவசமாக வழங்கினார் முடவர்கள் தங்கிச் செல்ல லங்கர் கார்னர் பகுதியில் ஒரு சத்திரம் அமைத்தார் பிரசவத்துக்கு இலவச விடுதிகளை ஏற்படுத்தினார் இதில் போத்தனூர் பகுதியில் தற்போதுள்ள சத்திரம் வீதியில் 15 ஏக்கர் பரப்புள்ள இடத்தில் சத்திரம் மற்றும் பிரசவ விடுதி அமைத்தார் இதனால் தான் இப்பகுதிக்கு சத்திரம் வீதி என்ற பெயர் ஏற்பட்டது இவரது பெயரில் தான் அப்பகுதி ஆர்.எஸ்.புரம் (ரத்தின சபாபதி புரம்) என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது...!!!

தமிழ்ப்பணி :

கோயமுத்தூரில் தமிழைச் சங்கம் அமைய முக்கிய பங்கு வகித்தார் மேலும் கோவையில் மாநில அளவிலான தமிழ் மாநாட்டை ஏற்பாடு செய்தார் கோவையில் “கோவை சேக்கிழார் சங்கம்” என்ற அமைப்பை தோற்றுவித்ததோடல்லாமல் அதனை தலைமையேற்று அதன் புரவலராக தொடர்ந்து கொடையளித்து வந்தார்...!!!


பேரூர் தமிழ்க் கல்லூரி அமைய தன்னுடைய 100 ஏக்கர் நிலத்தை வழங்கினார் இதனால் கோவைக் கிழார் என்றும் இவர் அழைக்கப்பட்டார்...!!!

சமூகப்பணி :

1924 இல் கோவை ரத்தினசபாபதி முதலியார் அவர்கள் இரயில்வே உணவு விடுதி களில் பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் பேதம் இருக்கக் கூடாது என்று இரயில்வே ஆலோசனைக் குழுவில் தீர்மானம் கொண்டு வந்தார் மேலும் Central Committee of the Reserve of Bank of India, State Co-operative Bank, Chamber of Commerce, Southern India Mills Association, National Dairy Development Board, State Electricity Board, Indian Council of Agricultural Research போன்ற பல்வேறு துறைகளில் பல்வேறு பதவி வகித்து திறம்பட நடத்தி வந்தார் இரத்தின சபாபதி முதலியார்...!!!

வாழ்நாளின் இறுதிவரை இரக்க சிந்தனை உள்ளவராகவும் எல்லோரிடத்திலும் அன்பு கூர்பவராகவும் திகழ்ந்தார் வியத்தகு சாதனைகள் புரிந்து கோயமுத்தூர் நகரின் தந்தையாக விளங்கிய இவர் 1956ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார் எனினும் கோயமுத்தூர் நகர் இருக்கும் வரை அது இரத்தினசபாபதி முதலியார் எனும் அகமுடையார் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கும்...!!!

இரத்தன சபாபதி முதலியார் பிறந்த இந்த இனிய நாளில் அவருக்கு புகழ் வணக்கம் செலுத்துவதில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு பெருமிதம் அடைகிறது....!!!

Comments

  1. Gongu mandalankalil ulla agamudayar kalin history podunga. Anga enena pattankaludan valuranga

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்

கி.பி 1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்  ----------------------------------------------------- பழந்தமிழர்களின் போர் ஆயுதமான வளரி ஆயுதத்தை 217 ஆண்டுகளுக்கு முன்பு போர்களங்களில் பயன்படுத்திய பெருமைக்குரியவர்கள் நமது சிவகங்கை சீமையின் மன்னர்கள் மருது பாண்டியர்கள் என்பது நாம் அறிந்த செய்தி ஆனால் அகமுடையார்கள் கி.பி 1500 களிலேயே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது...!!! ஆம் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வடகரை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கி.பி 1500 ஆண்டைச் சார்ந்த நடுகல் மூலம் இப்பகுதியில் அகமுடையார் சகோதர்கள் இருவர் வளரி ஆயுதத்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது இதுவே வளரி பற்றி தமிழகத்தில் கிடைத்துள்ள ஒரே பழமையான சிற்பம் ஆகும் இந்த நடுகல்லில் காணப்படுபவர்கள் திரு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களின் முன்னோர்களே ஆவார்கள் இந்நடுகல் பற்றியச் செய்தியை இவர் தனது “வடகரை-ஒர் வம்சத்தின் வரலாறு” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்...!!! மேலும் குறிப்பிட்ட இந்த சகோதரர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி ஆயுதம் மேற்குறிப்பிட்டவர்களி...

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தி...