அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை |
மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குருவான அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை அவர்களின் மண்டகபடி திருவிழா இராமநாதபுரம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் பங்குனி திருவிழாவில் 8 ஆம் திருநாள் மண்டகபடியாக ''வெள்ளையன் சேர்வை'' மண்டகபடி மிகச்சிறப்பாக நடைபெறுகிறது...!!!
------------------------------------------------------------------
வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை 1736 முதல் 1763 வரை நான்கு சேதுபதிகளின் ஆட்சி காலத்தில் அரசாங்கத்தில் சக்தி வாய்ந்த ஒரு தலைவனாக விளங்கினார் அந்த 27 ஆண்டுகால சேதுநாட்டு வரலாறானது தளவாய் வெள்ளையன் சேர்வையின் வெற்றி புகழின் வரலாறாகவே காணப்படுகிறது...!
சேதுபதிகளின் ஆட்சியில் தளவாயாக பணியாற்றியவர்களில் இவர் பெயர் தனியிடம் வகிக்கிறது மதுரை நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் தளபதியும் அமைச்சரும் சேர்ந்த ஒரு பதவி உருவாக்கப்பட்டது அதன் பெயரே தளவாய் என்பதாகும்...!
நாட்டின் ஆட்சி முறையெல்லாம் சேர்வைகாரருக்கு உட்பட்டே இருந்தது வெள்ளையன் சேர்வையின் வீரம் புகழ் தமிழ் நாடெங்கும் பரவியது என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள் சுருக்கமாக சொன்னால் அரசர்களை அரியணையில் அமர்த்தவும் அதிலிருந்து இறக்கவும் வல்லவன் #Kingmaker என்று குறிப்பிடுமளவு பெயரெடுத்தார்...!
1735 ல் கட்டையத்தேவன் என்ற முத்துவிஜயரகுநாத சேதுபதி காலமானார் இவரிடம் பிரதானியாக இருந்தவர் #வைரவன் #சேர்வை பாம்பன் போன்ற இடங்களில் சத்திரம் கட்டி பயணிகள் துயர் துடைத்தவர் கட்டையத்தேவருக்கு பின் சிவகுமார முத்துவிஜயரகுநாத சேதுபதி (1746-1748) இராமநாதபுரம் மன்னராக பதவியேற்றார் அதே போல வைரவன் சேர்வைகாரரை அடுத்து வீராதி வீரன் என்று புகழ் பெற்றிருந்த #வெள்ளயன் #சேர்வை தளவாயாகவும் பிரதானியாகவும் பொறுப்பேற்றார்...!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கடவுட் படிமங்களை வெள்ளையன் சேர்வை போன்ற வீரத்தளபதி இல்லாது போயிருப்பின் முகமதிய தளபதிகள் என்றோ கொண்டு சென்றிருப்பான்...!
வெள்ளையன் சேர்வை பொறுப்பேற்ற சில காலங்களிலேயே அவர் வாளுக்கு வேலை வந்துவிட்டது கி.பி 1739 வைகாசி திங்கள் கடைசியில் திண்டுக்கல்லை முகமதிய தளபதிகள் பிடித்து கொண்டார்கள் அதன் பிறகு மதுரை நாயக்க மன்னர்களுக்கு துணையாக வெள்ளையன் சேர்வை படை நடத்தி சென்றார் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிலைகளுக்கு ஆபத்து என்றதும் அவற்றை சேதுபதிக்கு உட்பட்ட மானாமதுரைக்கு அப்புறப்படுத்தினார் வெள்ளையன் சேர்வை அதன் பின்னர் மானாமதுரையில் இரண்டு ஆண்டுகள் மீனாட்சி சுந்தரேசுவரரும் இருந்து வந்தனர் அதன் பின்னர் ஆபத்து முற்றிலும் அகன்ற பின்னர் கடவுட் படிமங்களை மதுரைக்கு கொண்டு போய் சேர்த்தார் வெள்ளையன் சேர்வை...!
சைவத்துரை என்றழைக்கப்பட்ட சிவகுமார முத்துவிஜயரகுநாத சேதுபதி 1748 ல் பிள்ளையின்றி காலமானார் முந்தைய சேதுபதி கட்டயத் தேவரின் ஒன்று விட்ட சகோதரன் இராகத்தேவரை தளவாய் வெள்ளையன் சேர்வை சேதுபதியாக நியமனம் செய்தார் அந்த அளவுக்கு அந்த தளவாய்க்கு ஆட்சியில் செல்வாக்கு மிகுந்திருந்தது...!
கிழவன் சேதுபதி போன்ற வீரமறவர் மறைந்து விட்டனர் என்ற துணிச்சலில் இராக்கத்தேவர் என்ற சேதுபதி (1748-1749) என்ற காலத்தில் தஞ்சாவூர் அரசன் முகவை மீது படையெடுத்து வந்தான் ராமநாதபுரம் மண்ணில் இன்னும் வீரம் மறைந்துவிடவில்லை என்று மாற்றாருக்கு உயர்த்தினார் வெள்ளையன் சேர்வை தஞ்சை படையை முறியடித்து மறவர் சீமையிலே வெற்றி கொடியை ஏற்றினார் வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை...!
அது மட்டுமா தஞ்சாவூர் மதுரை முதலிய மாவட்டத்தில் உள்ள பாளையக்காரர்களை எல்லாம் ராமநாதபுரத்திற்கு அடங்கியவர்கள் என்று ஏகோபித்து ஒத்துக் கொள்ளும்படி செய்தார் தளவாய் வெள்ளையன் சேர்வை இன்னும் கொஞ்சம் தொல்லைகள் வந்தது எங்கே... ? நெல்லையில் தான் நெல்லை மாவட்டத்திலே இராமநாதபுரம் சமஸ்த்தானத்திற்கு உட்பட்ட பாளையக்காரர்கள் சிலர் கலகம் செய்தனர் அந்த நேரத்தில் நெப்போலியன் போல கிளம்பினார் நெல்லையை நோக்கி நமது வெள்ளையன் சேர்வை யாரோ ஒரு பாளையக்காரரை அடங்குவது என்ற குறிக்கோளில் அல்ல படியாத பல பாளையக்காரர்களை படிய வைப்பதற்காகவே புறப்பட்டார் வெள்ளையன் சேர்வை...!
வெள்ளையன் சேர்வையின் வீரத்தின் முன்னே பல பாளையங்கள் வீழ்ந்தன நெல்லையில் எல்லையற்ற பல வெற்றிகளை அறுவடை செய்து கொண்டிருந்தார் வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை இனி எட்டயபுரம் மட்டுமே பாக்கி...!
"எட்டுக்கண் விட்டெரிகிறது" என்பார்களே அது போல வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வையின் புகழ் எட்டு திசைகளிலும் பரவியது இது எங்கு போய் முடிய போகிறதோ ஒரு வேளை தன்னை மீறும் அளவு புகழை சம்பாதித்து விடுவானோ வெள்ளையன் சேர்வை என்று சேதுபதி மன்னர் அஞ்சினார்... விளைவு...?
உடனே போரை நிறுத்தி விட்டு திரும்பி வரும்படி தன் தளவாய்க்கு ஓலை அனுப்பினார் இது விருந்தை பரிமாறிவிட்டு வாயை கட்டியது போல இருந்தது வெள்ளையன் சேர்வைக்கு மேலும் இராமநாதபுரம் சீமையின் பெரும் புகழை திரும்பக் கொண்டு வரப்பாடுபடும் வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வைக்கு சேதுபதியின் மனப்போக்கு மிகுந்த எரிச்சலை உண்டாக்கியது...!
வெள்ளையன் சேர்வையின் ஆத்திரப்பகை பாளையக்காரர்களை விட்டு சேதுபதி மன்னர் மேலேயே திரும்பியது தன் தளவாய் வெள்ளையன் சேர்வை தன்னையே எதிர்த்து வருகிறார் என்ற செய்தி சேதுபதிக்கு எட்டியது உடனடியாக பாம்பன் நோக்கி பறந்தார் ஆனால் வழியிலேயே கைது செய்யப்பட்டார் விரைவில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் அவர் பதவிக்கு வந்ததில் உண்மையில் மக்களுக்கு விருப்பம் இல்லாமல் தான் இருந்தது இராமநாதபுரதின் ஆளுமையாக வெள்ளையன் சேர்வை விளங்கினார்...!
இராக்கத்தேவருக்கு முந்தைய சேதுபதியின் அத்தை பேரன் செல்லத்தேவர் அவரை அடுத்த சேதுபதி மன்னராக்கினார் தளவாய் வெள்ளையன் சேர்வை...!
செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி எனும் பெயரில் பட்டத்திற்கு வந்த இவர் கிழவன் சேதுபதி குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்...!
இச்சேதுபதியிடம் வெள்ளையன் சேர்வை தளவாயாக பணியாற்றிய காலத்தில் தான் ஆங்கிலேயரை எதிர்த்து விடுதலை போர் நடத்திய சிவகங்கை சீமை மாமன்னர்கள் மருது பாண்டியரின் தந்தையார் மொக்கைபழநியப்பன் சேர்வையும் ஒரு படை தலைவராக சேது நாட்டுப் படையில் பணியாற்றி வந்தார் பெரிய மருதுவின் இயற்பெயரும் வெள்ளையன் என்பது தான்...!
மருது பாண்டியரின் தந்தையாருக்கு தளவாய் வெள்ளையன் சேர்வை இலட்சிய வீரனாக தோன்றிய காரணத்தால் 1748 இல் தனக்கு முதல் ஆண் குழந்தை பிறந்த உடன் அதற்கு வெள்ளை மருது என்று பெயரினை வைத்தார்...!
செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதியின் ஆட்சி பதிமூன்றரை ஆண்டுகள் ஒன்பது நாட்கள் நீடித்தது இவரது ஆட்சியில் தஞ்சை மீண்டும் முகவை மீது படையெடுத்து வந்தது ஆனால் வெள்ளையன் சேர்வை இருக்கும் வரை முகவையை வெல்ல முடியுமா...? தஞ்சை தோல்வியை தழுவியது...!
மைசூர் மன்னருக்காக மதுரையை பிடித்துக் கொண்டிருந்த காப்டன் கோப் என்ற வெள்ளை தளபதியை விரட்டி மதுரையை மீட்டெடுக்க சேதுநாட்டின் உதவி கோரப்பட்டது 1752 ல் தளவாய் வெள்ளையன் சேர்வையும் சிவகங்கை சமீனின் அமைச்சர் தாண்டவராயப் பிள்ளையும் தங்கள் நாட்டு படைகளுடன் மதுரையை ஆறு மாதங்கள் முற்றுகையிட்டனர் இந்த போரில் தான் தளவாய் வெள்ளையன் சேர்வை இறந்து போனதாக மதுரை தல வரலாறு தெரிவிக்கின்றன ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் அவ்வாறு குறிப்பிடவில்லை...!
முகவை வெற்றியில் முடிந்தது வெள்ளையன் சேர்வைக்கும் தாண்டவராயருக்கும் அவர்கள் மதுரையை மீட்டு நாயக்க அரசியின் மகனை மணக்கிறார் முகமது அலியின் ஆட்களால் 16 நாட்களுக்குள் அந்த நாயக்க மன்னன் பதவியிலிருந்து நீக்கப்பட்டான் அதன் பிறகு தளவாய் வெள்ளையன் சேர்வை மதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தினார் முகமதிய தளபதிகள் வீழ்ந்தனர் பின்னர் இராமநாதபுரம் அரசுக்கு கப்பம் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மதுரை அவர்களிடம் விடப்பட்டது...!
தளவாய் வெள்ளையன் சேர்வை யோசனைபடி சேதுபதி மன்னர் முகமது அலிக்கு எதிராக மைசூர் அரசர் சந்தாசாகிப் ஆகியோர் அணியில் நின்றார் ஆனால் 1755 இல் இந்த அணியில் இருந்து விலகினார்...!
செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி 1762 இல் காலமானார் அவரது சகோதரியின் மைந்தன் முத்துராமலிங்கத்திற்கு முடிசூட்ட வேண்டும் என்றும் முத்துராமலிங்கம் குழந்தையாய் இருந்ததால் தாயார் முத்திருவை அவர்கள் ஆட்சி பொருப்பை கவனித்து கொள்ள வேண்டும் என்று தளவாய் வெள்ளையன் சேர்வை முடிவு செய்தார்...!
குழந்தை முத்துராமலிங்கத்திற்கு முடிசூட்டியவுடன் நான்கு சேதுபதிகள் காலத்தில் தளவாயாக இருந்த வெள்ளையன் சேர்வை 1763 ல் நிம்மதியாக கண் மூடினார்...!
வெள்ளையன் சேர்வை திருப்புல்லானியில் பயணிகளுக்கு ஒரு சத்திரம் கட்டினார் அது வெள்ளையன் சேர்வை சத்திரம் என்றே அழைக்கப்பட்டது இந்த சத்திரம் நன்கு செயல்பட கட்டயதேவர் என்ற முத்து விஜயரகுநாத சேதுபதி காஞ்சிரங்குளம் என்ற கிராமத்தை அளித்து தன் தளவாயின் செயலை ஆதரித்தார் மேலும் தளவாய் ஆலோசனைக்கிணங்க செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி முகவை லட்சுமிபுரத்தில் ஒரு சத்திரம் கட்டினார் அது செல்ல பூபால சத்திரம் என்றே அழைக்கப்பட்டது...!
வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வையின் வீர வரலாறு என்றும் மறையாது...!!!
இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு
Migavum arumai uravugale
ReplyDelete