Skip to main content

Posts

திருப்பத்தூர் படுகொலை

திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படத்தின் திறப்பு விழா

பேராசிரியர் ராஜையன்  மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நேரடி வாரிசுதார் திருப்பத்தூர் ராமசாமி சேர்வை  சிவகங்கை வரலாற்று ஆய்வாளர் குருசாமி மயில்வாகனன்  வரலாற்றில் மறைக்கபட்ட இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் படுகொலையான திருப்பத்தூர் படுகொலையில் வீரமரணம் அடைந்த முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து இன்னுயிர் நீத்த 500 க்கும் மேற்பட்ட போராளிகளின் தியாகத்தை உயிர்பிக்கும் வீர வரலாறு தான் திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படம்...!!! திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படத்தை YouTube வழியே காண https://youtu.be/OpDrspgrHng அக்டோபர் 24 2018 அன்று திருப்பத்தூரில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் அரசு மணி மண்டபத்தில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு மூலம் #திருப்பத்தூர் #படுகொலை ஆவணப்படத்தை பேராசிரியர் ராஜையன் அவர்களின் கைகளால் திறந்து வெற்றிகரமாக இவ்விழா இனிதே நிறைவடைந்தது...!!! ஆயிரம் ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் இருந்தும் தள்ளாத வயதில் உள்ள முதியவரான ஐயா ராஜையன் அவர்கள் கைகளால் தான் இந்த திர
Recent posts

HD Photos

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் வெளியிட்ட செம்பு நாணயங்கள்

மருது சீமையான சிவகங்கை சீமையினை 1780-1801 வரை சுமார் 21 ஆண்டுகள் நல்லாட்சி செய்த மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் அவர்களது ஆட்சி காலத்தில் வெளியிட்ட நாணயங்களை பற்றி  இந்த பதிவின் வழியே காணலாம்...!!!  ------------------------------------------------------------------- மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் வெளியிட்ட 3 வகையான நாணயங்கள் பற்றிய ஆதாரங்கள் நமக்கு கிடைத்துள்ளது அவற்றை 1,2,3 என அந்த நாணயத்தின் படத்துடன் வரிசைப்படி பார்போம்...!!!  1) 09/12/1989 அன்று தினமணி இதழின் நாணயவியல் கட்டுரையாளர் திரு.அளக்குடி ஆறுமுக சீதாராமன் அவர்கள் சிவகங்கை வரலாற்று பேரவை கருத்தரங்கத்தில் மருது பாண்டியர்கள் வெளியிட்ட நாணயத்தினை காட்சிக்கு வைத்து கீழ்காணும் விளக்கத்தை அளித்துள்ளார்...!!! மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் ஆட்சியில் இருக்கும் போது ஒரு வகையான செம்பு நாணயங்களை வெளியிட்டு உள்ளனர் இந்த நாணயத்தின் முன் பக்கத்தில் ஒரு கொடி காணப்படுகிறது அந்த கொடியின் உள்ளே ஒரு சூரியனும் ஒரு பிறை சந்திரனும் உள்ளன கொடியின் கீழே நான்கு புள்ளிகள் காணப்படுகிறது...!!!  செம்பு நாணயத்தின் பின் பக்கத்தில்

1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்

கி.பி 1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்  ----------------------------------------------------- பழந்தமிழர்களின் போர் ஆயுதமான வளரி ஆயுதத்தை 217 ஆண்டுகளுக்கு முன்பு போர்களங்களில் பயன்படுத்திய பெருமைக்குரியவர்கள் நமது சிவகங்கை சீமையின் மன்னர்கள் மருது பாண்டியர்கள் என்பது நாம் அறிந்த செய்தி ஆனால் அகமுடையார்கள் கி.பி 1500 களிலேயே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது...!!! ஆம் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வடகரை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கி.பி 1500 ஆண்டைச் சார்ந்த நடுகல் மூலம் இப்பகுதியில் அகமுடையார் சகோதர்கள் இருவர் வளரி ஆயுதத்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது இதுவே வளரி பற்றி தமிழகத்தில் கிடைத்துள்ள ஒரே பழமையான சிற்பம் ஆகும் இந்த நடுகல்லில் காணப்படுபவர்கள் திரு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களின் முன்னோர்களே ஆவார்கள் இந்நடுகல் பற்றியச் செய்தியை இவர் தனது “வடகரை-ஒர் வம்சத்தின் வரலாறு” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்...!!! மேலும் குறிப்பிட்ட இந்த சகோதரர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி ஆயுதம் மேற்குறிப்பிட்டவர்களின் ப

பெருமழைப்புலவர் சோமசுந்தரனார்

24 சங்க இலக்கிய நூல்களுக்கு உரைநடை எழுதிய அகமுடையார் வழித்தோன்றல் பெருமழைப் புலவர் சோமசுந்தரனார்  திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள மேலைப் பெருமழை என்றும் சிறிய கிராமத்தில் வேலுத்தேவர்  சிவகாமியம்மாள் தம்பதிக்கு 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் சோமசுந்தரனார் பிறந்தார் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து அரிச்சுவடி, ஆத்திச்சூடி, வெற்றிவேற்கை, நிகண்டுகள், நைடதம், கிருட்டிணன் தூது, அருணாசலப் புராணம் முதலிய நூல்களைக் கற்றார் இவருடைய தந்தையார், தொடர்ந்து மகன் படிப்பதற்கு இடம் தராமல் உழவுத் தொழிலில் ஈடுபடுத்தினார் இருப்பினும் தந்தையாருக்குத் தெரியாமல் கோவில் மடம் முதலிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள நூல்களைப் பெற்று படித்து வந்தார்...!!!  இவருடைய தாயார் இவரது பத்தாவது வயதில் காலமாகிவிட்டார் தந்தையார் மறுமணம் செய்து கொண்டார் பின்னர் சோமசுந்தரனார் தமது தாய்மாமன் இல்லத்தில் தங்கினார் இவரது கிராமத்துக்கு அருகில் உள்ள ஆலங்காடு என்னும் ஊரில் ‘சர்க்கரைப் புலவர்’ வாழ்ந்து வந்தார் அவரைக் கண்டு தமது கல்வி ஆர்வத்தை வெளிப்படுத்தினார் சர்க்கரைப் புலவர் சோமசுந்தரனா

தமிழ் போராளி பேராசிரியர் இலக்குவனார்

பேராசிரியர் இலக்குவனார்  நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் வாய்மைமேடு என்னும் சிற்றூரில் குறுநிலக்கிழாராகவும் ஒரு மளிகைக்கடை உரிமையாளராகவும் விளங்கிய சிங்காரவேலர் இரத்தினத்தாச்சி ஆகியோருக்கு இரண்டாவது மகனாக சி.இலக்குவனார் அவர்கள் 1909 நவம்பர் 17ம் நாள் அன்று பழந்தமிழ்குடியான அகமுடையார் இனத்தில் பிறந்தார் தமது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்தார்...!!!  ஆரம்பம் கல்வி  வாய்மேட்டில் சுப்பையா ஆசிரியர் நடத்திய திண்ணை பள்ளியிலும் கண்ணுசாமி ஆசிரியர் நடத்திய திண்ணை பள்ளியிலும் பயின்றார் பின்னர் வாய்மேட்டில் இருந்த அரசு தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்த இலக்குவனாரின் பள்ளிப்படிப்பு தடைப்பட்டது தமது அண்ணன் நல்லபெருமாளுக்கு உதவியாக வயல் வேலைகளைக் கவனிப்பதும் மாடுகளை மேய்ப்பதுமே அவரது வேலையாயிற்று...!!!  நடுநிலைக் கல்வி தன் பிள்ளை படிக்க வேண்டும் என்று அவரது தாயார் விழைந்தமையால் தஞ்சாவூர் சரபோஜி மன்னரின் அறக்கட்டளை சார்பில் இராசாமடம் என்னுமிடத்தில் இருந்த நடுநிலைப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்து

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)