Skip to main content

பெருமழைப்புலவர் சோமசுந்தரனார்


24 சங்க இலக்கிய நூல்களுக்கு உரைநடை எழுதிய அகமுடையார் வழித்தோன்றல் பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் 


திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள மேலைப் பெருமழை என்றும் சிறிய கிராமத்தில் வேலுத்தேவர்  சிவகாமியம்மாள் தம்பதிக்கு 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் சோமசுந்தரனார் பிறந்தார் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து அரிச்சுவடி, ஆத்திச்சூடி, வெற்றிவேற்கை, நிகண்டுகள், நைடதம், கிருட்டிணன் தூது, அருணாசலப் புராணம் முதலிய நூல்களைக் கற்றார் இவருடைய தந்தையார், தொடர்ந்து மகன் படிப்பதற்கு இடம் தராமல் உழவுத் தொழிலில் ஈடுபடுத்தினார் இருப்பினும் தந்தையாருக்குத் தெரியாமல் கோவில் மடம் முதலிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள நூல்களைப் பெற்று படித்து வந்தார்...!!! 

இவருடைய தாயார் இவரது பத்தாவது வயதில் காலமாகிவிட்டார் தந்தையார் மறுமணம் செய்து கொண்டார் பின்னர் சோமசுந்தரனார் தமது தாய்மாமன் இல்லத்தில் தங்கினார் இவரது கிராமத்துக்கு அருகில் உள்ள ஆலங்காடு என்னும் ஊரில் ‘சர்க்கரைப் புலவர்’ வாழ்ந்து வந்தார் அவரைக் கண்டு தமது கல்வி ஆர்வத்தை வெளிப்படுத்தினார் சர்க்கரைப் புலவர் சோமசுந்தரனாரை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்குச் சென்று பயிலுமாறு ஆர்வமூட்டி அப்பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றிய பூவராகம்பிள்ளை என்பவருக்கு அறிமுகக் கடிதம் கொடுத்து அனுப்பினார்...!!! 

சோமசுந்தரனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ்க் கல்வி கற்றார் அங்கு அவர் பயின்ற காலத்தில் சோழவந்தான் கந்தசாமியார், பண்டிதமணி கதிரேசச் செட்டியார், விபுலானந்த அடிகள் முதலிய தமிழ் அறிஞர்கள் ஆசிரியர்களாக பணிபுரிந்தனர் இவரது தமிழறிவு வளர்ச்சிக்கு அது நல்வாய்ப்பாக அமைந்தது...!!! 

‘புலவர்’ படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார் இருப்பினும் தமிழ் மொழி அறியாத ஆங்கிலேயே ஆளுநர் எர்ஸ்கின்பிரபு சோமசுந்தரனாரை கைகுலுக்கி  வழங்கிய சான்றிதழை கிழித்தெறிந்துவிட்டு தனது ஊர் போய்ச்சேர்ந்தார்...!!! 

தமது ஊரில் தங்கி உழவுத் தொழிலில் ஈடுபட்டார் தமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களை படிப்பதற்கும் எழுதுவதற்கும் தமது பல்கலைக் கழக ஆசிரியரான பண்டிதமணி கதிரேசச் செட்டியாரை சென்று சந்தித்து தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார் தாம் எழுதிக் கொண்டிருந்த திருவாசக உரையை சோமசுந்தரனாரிடம் அளித்து எதும்படி வேண்டினார் சோமசுந்தரனாரும் இந்தப் பணியை மேற்கொண்டு ‘திருவாசகத்துக்கு’ உரை எழுதி முடித்தார் இதுவே இவர் பின்னாளில் உரையாசிரியர் ஆவதற்குப் பயிற்சியாக அமைந்தது...!!! 

திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் எழுதிக் கொண்டிருந்த கருப்பக்கிளர் இராமசாமிப் புலவரின் தொடர்பால் சென்னை சென்று கழகத்துக்காக சங்க இலக்கியங்களுக்கு உரைகள் எழுதி வந்தார் சங்க இலக்கிய நூல்களான 24 நூல்களுக்கு சோமசுந்தரனார் உரையெழுதி அளித்துள்ளார்...!!!

01 நற்றிணை உரை
02 குறுந்தொகை உரை
03 அகநானூறு உரை
04 ஐங்குறுநூறு உரை
05 கலித்தொகை உரை
06 பரிபாடல் உரை
07 பத்துப்பாட்டு உரை
08 ஐந்திணை எழுபது உரை
09 ஐந்திணை ஐம்பது உரை
10 சிலப்பதிகாரம் உரை
11 மணிமேகலை உரை
12 சீவக சிந்தாமணி உரை
13 வளையாபதி உரை
14 குண்டலகேசி உரை
15 உதயணகுமார காவியம் உரை
16 நீலகேசி உரை
17 பெருங்கதை உரை
18 புறப்பொருள் வெண்பா மாலை உரை
19 கல்லாடம் உரை
20 திருக்கோவையார் உரை
21 பட்டினத்தார் பாடல்கள் உரை
22 செங்கோல் நாடகம்
23 மானநீகை நாடகம்
24 பண்டிதமணி வாழ்க்கை வரலாறு

மேலும் ‘செங்கோல்’, ‘மானனீசை’ முதலிய நாடக நூல்களும், பெருங்கதை உரைநடையில் அளித்துள்ளார் இவரது உரை விளக்கங்கள் யாவும் தமிழறிஞர்களையே வியக்க வைக்கும் பழைய உரையாசிரியர்களை மறுத்து எழுதும் புலமை பெற்றிருந்தார்...!!! 

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் 1008-வது நூல் வெளியீட்டு பொன்விழாவில் சோமசுந்தரனார் கேடயம் அளித்து போற்றிச் சிறப்பிக்கப்பட்டார்...!!! 

அவர் வாழ்ந்த மேலப் பெருமழை ஊராட்சியில் உள்ள நூலகத்துக்கு ‘பெருமழைப்புலவர் சோமசுந்தரனார் நூலகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது...!!! 

தன்னலமற்ற தமிழ்ப்பணி புரிந்த சோமசுந்தரனார் 03.01.1972 அன்று காலமானார் அவர் மறைந்தாலும் சங்க இலக்கியங்களுக்கு அவர் எழுதிய உரைகள் தமிழர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்...!!! 

அகதமிழன் புகழ் எட்டுதிக்கும் ஓங்குக 

வரலாறு படிப்போம்...!!!

வரலாறு படைப்போம்...!!!

இவண் : அகமுடையார் வரலாறு மீட்புகுழு 

Comments

  1. ஐயா எழுதிய உரைகளை மீட்பது நம் கடமையாகும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படத்தின் திறப்பு விழா

பேராசிரியர் ராஜையன்  மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நேரடி வாரிசுதார் திருப்பத்தூர் ராமசாமி சேர்வை  சிவகங்கை வரலாற்று ஆய்வாளர் குருசாமி மயில்வாகனன்  வரலாற்றில் மறைக்கபட்ட இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் படுகொலையான திருப்பத்தூர் படுகொலையில் வீரமரணம் அடைந்த முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து இன்னுயிர் நீத்த 500 க்கும் மேற்பட்ட போராளிகளின் தியாகத்தை உயிர்பிக்கும் வீர வரலாறு தான் திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படம்...!!! திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படத்தை YouTube வழியே காண https://youtu.be/OpDrspgrHng அக்டோபர் 24 2018 அன்று திருப்பத்தூரில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் அரசு மணி மண்டபத்தில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு மூலம் #திருப்பத்தூர் #படுகொலை ஆவணப்படத்தை பேராசிரியர் ராஜையன் அவர்களின் கைகளால் திறந்து வெற்றிகரமாக இவ்விழா இனிதே நிறைவடைந்தது...!!! ஆயிரம் ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் இருந்தும் தள்ளாத வயதில் உள்ள முதியவரான ஐயா ராஜையன் அவர்கள் கைகளால்...

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தி...