மருது சீமையான சிவகங்கை சீமையினை 1780-1801 வரை சுமார் 21 ஆண்டுகள் நல்லாட்சி செய்த மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் அவர்களது ஆட்சி காலத்தில் வெளியிட்ட நாணயங்களை பற்றி இந்த பதிவின் வழியே காணலாம்...!!!
-------------------------------------------------------------------
மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் வெளியிட்ட 3 வகையான நாணயங்கள் பற்றிய ஆதாரங்கள் நமக்கு கிடைத்துள்ளது அவற்றை 1,2,3 என அந்த நாணயத்தின் படத்துடன் வரிசைப்படி பார்போம்...!!!
1) 09/12/1989 அன்று தினமணி இதழின் நாணயவியல் கட்டுரையாளர் திரு.அளக்குடி ஆறுமுக சீதாராமன் அவர்கள் சிவகங்கை வரலாற்று பேரவை கருத்தரங்கத்தில் மருது பாண்டியர்கள் வெளியிட்ட நாணயத்தினை காட்சிக்கு வைத்து கீழ்காணும் விளக்கத்தை அளித்துள்ளார்...!!!
மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் ஆட்சியில் இருக்கும் போது ஒரு வகையான செம்பு நாணயங்களை வெளியிட்டு உள்ளனர் இந்த நாணயத்தின் முன் பக்கத்தில் ஒரு கொடி காணப்படுகிறது அந்த கொடியின் உள்ளே ஒரு சூரியனும் ஒரு பிறை சந்திரனும் உள்ளன கொடியின் கீழே நான்கு புள்ளிகள் காணப்படுகிறது...!!!
செம்பு நாணயத்தின் பின் பக்கத்தில் நாணயத்தின் மேலே ''ரு'' என்ற எழுத்தும் அதன் கீழே ''து'' என்ற எழுத்தும் காணப்படுகிறது ''ம'' என்ற எழுத்து நாணயத்தின் பரப்புக்கு வெளியே அச்சு விழுந்ததால் ''ரு'' என்ற எழுத்தும் ''து'' என்ற எழுத்தும் நாணயத்தின் பரப்பில் காணப்படுகிறது இப்பதிவில் படம் 1 என குறிப்பிட்டுள்ள படத்தில் இந்த நாணயத்தினை நாம் காணலாம்...!!!
Coin Shape : Round
Material : Copper
Diameter : 15 Mm
Weight : 1.750 Gms
2) Studies In South Indian Coins என்ற புத்தகத்தில் Coins With The Image Of Marudhu Brothers Of Sivaganga என்ற தலைப்பில் சி.ஆர். ரெங்கசாமி என்பவர் இரண்டு நாணயங்களை வெளியிட்டு காட்சிப்படுத்தி உள்ளார் அந்த நாணயத்தில் மருது பாண்டியர்களின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது...!!!
நாணயத்தின் முன் பக்கத்தில் இரண்டு நபர்களின் உருவம் உள்ளது என்றும் அதில் முதல் நபரின் வலது கையில் வாளுடனும் இடது கையை உயர்த்தியபடி உள்ளது என்று கூறியுள்ளார் அடுத்ததாக இரண்டாவது நபர் முதல் நபரை விட சிறிது நகர்ந்தும் உயரத்தில் அவரை விட சிறிது குறைவாகவும் கையை மேலே உயர்த்தியபடி உள்ளது என்றும் கூறியுள்ளார் மேலும் நாணயத்தின் உள்ளவர்களின் தலைக்கு மேல் அறைவட்டத்தில் நாணயத்தின் பின் பக்கத்தில் ஒரு சிவ லிங்கமும் அதன் வலது இடது பக்கங்களில் இரண்டு புள்ளிகளும் இருக்கும் இடது பக்கத்தில் உள்ள புள்ளியானது வலது பக்கத்தில் உள்ள புள்ளியை விட பெரிதாக இருக்கும் என்று கூறியுள்ளார் மேலும் சிவலிங்கத்திற்கு கீழே அந்த புள்ளிகளை நோக்கியவாறு கம்பு போன்ற ஒன்று காணப்படுகிறது அது (Slanting Position) ஆக அதாவது சுவற்றில் சாய்த்து வைத்த ஏணியை போன்ற வடிவம் கொண்டது என்றும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார் மேலும் இப்பதிவில் படம் 2 என்று குறிப்பிட்டுள்ள படத்தில் இந்த நாணயத்தினை நாம் காணலாம்...!!!
Coin Shape : Round
Material : Copper
Diameter : 15 Mm
Weight : 2.502 Gms
3) Coins With The Image Of Marudhu Brothers Of Sivaganga என்ற தலைப்பில் இரண்டாவது நாணயமாக ஆசிரியர் கூறும் நாணயத்தின் முன் பக்கத்தில் இரண்டு நபர்கள் வலது பக்கம் பார்த்து நிற்பது போன்றும் அவர்களது கையை நீட்டியுள்ளவாறும் இடது பக்கம் உள்ள நபரின் வலது கையில் வளரி வைத்துள்ளவாறும் அவரின் இடது கையை சிறிது உயர்த்தியபடியும் உள்ளது என்று கூறியுள்ளார் மேலும் இந்த நாணயத்தின் இரண்டு நபர்களுக்கும் இடையில் நிழல் விழுமாறு அமைந்துள்ளது என்றும் புள்ளி வைத்த வரிசை உள்ளது என்றும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்...!!!
நாணயத்தின் பின் பக்கத்தில் சிவலிங்கமும் அதனை சுற்றி புள்ளி வைத்த வட்டமும் 80% நாணயத்தின் அளவில் அமைந்துள்ளது என்று ஆசிரியர் கூறியுள்ளார் மேலும் இப்பதிவில் படம் 3 என்று குறிப்பிட்டுள்ள படத்தில் நாணயத்தினை நாம் காணலாம்...!!!
Coin Shape : Round
Material : Copper
Diameter : 15 Mm
Weight : 3.128 Gms
பொதுவாக சிவகங்கை மன்னர்களினால் வெளியிடப்பட்ட 16 நாணயங்களிலும் சிவலிங்கம், சூரியன், சந்திரன், விநாயகர்,மயில்,சிங்கம்,சரஸ்வதி போன்றவை இடம் பெற்றுள்ளது என ஆய்வாளர் K.கனேசன் அவர்கள் எழுதிய Coins Of Tamilnadu என்ற நூலின் மூலம் அறியமுடிகிறது...!!!
21 ஆண்டுகள் சிவகங்கை சமஸ்தானத்தை நல்லாட்சி செய்த மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் புகழ் எட்டுதிக்கும் ஓங்குக...!!!
இந்த வரலாற்று பொக்கீஷத்தை அறிய உதவியாக இருந்த மதிப்பிற்குரிய அண்ணன் நாணயவியல் ஆய்வாளர் அளக்குடி ஆறுமுக சீதாராமன் அவர்களுக்கு நன்றிகள்...!!!
Super
ReplyDelete