Skip to main content

Posts

Showing posts from February, 2018

ஐந்து இரண்டு உறவின் முறை

ஐந்து இரண்டு உறவின் முறை ஐந்து இரண்டு உறவின் முறை அகமுடையார் (தலை கனத்ததோர் அகமுடையர்) தேவர் பட்டம் கொண்டவர்கள் தஞ்சை மாவட்டம் பேராவூரணி சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சில பகுதிகளில் பரவிவாழ்கின்றனர் ஐந்து இரண்டு என பெயர் காரணங்ளாக சொல்லபடுபவை ஐந்து + இரண்டு = ஏழு ஊர்களில் கொண்டான் கொடுப்பான் உறவுமுறை கொண்டவர்கள் இந்த ஏழு ஊர்களும் சிவன் கோவில்களை மையமாக கொண்டு திருமண உறவை கொண்டிருந்தனர் வேறு ஊர்களில் இருந்து திருமண உறவு கொள்ளமாட்டார்கள் எனவே ஐந்து இரண்டு உறவின் முறை பெயர் வருவதற்கு காரணமாய் இருந்தது என சொல்லபடுகிறது...!!! ஏழு ஊர் சிவன் கோவில்கள் 1.காரக்கோட்டை 2.பெருமகளுர் 3.ஊமத்தநாடு 4.விளங்குளம் 5.கொரட்டூர் 6.அம்மையான்டி 7.ஒல்லனூர் இந்த ஏழு ஊர் அகமுடையார்களுக்கு காரக்கோட்டை தலைமை கிராமம் ஆகும் இவர்கள் பொருளாதர அடிபடையில் மேன்பட்டவர்களாகவும் இருந்து வருகின்றனர் இன்றைய சூழலில் சமூகம் பரந்து விரிந்து காணப்படுகிறது இங்கு விவசாயம் என்பதே முக்கிய தொழிலாகும்...!!! தகவல் உதவி : ஊமத்தநாடு ஐந்து இரண்டு உறவின் முறை இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு

நேதாஜியின் ஐ.என்.ஏ படையில் கேப்டனாக பணிபுரிந்த வீரஅகமுடையச்சி ஜானகி தேவர்

நேதாஜியின் INA படையில் கேப்டனாக பணிபுரிந்த வீரஅகமுடையச்சி ஜானகி தேவர்...!!! மலேசிய நாட்டில் கோலாலம்பூர் நகரில் பிப்ரவரி 25 ம் தேதி 1925 ஆம் ஆண்டு போர்க்குடி அகமுடையார் பேரினத்தில் வீரஅகமுடையச்சி ஜானகி தேவர் பிறந்தார் இவர் வசதியான அகமுடையார் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சிறு வயதில் இருந்து எந்த கஷ்டமும் இல்லாமல் வளர்ந்து வந்தார் அந்த காலத்தில் மலேசியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வந்து அங்குள்ள இந்தியர்களை சந்தித்து மலேசிய இந்திய விடுதலைக்காக பேசிய போது தமிழர்கள் வீடுகளில் உள்ள நகை மற்றும் பணத்தை நன்கொடையாக கொடுத்தனர் நேதாஜியின் வீர உரையை கேட்ட ஜானகி தேவர் சிறுவயதிலே தான் அணிந்திருந்த தங்க கம்மல்களை கொடுத்தார்...!!! இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து சேவையாற்ற முடிவு செய்தார் அவருடைய குடும்பத்தில் இருந்து பலமாக எதிர்ப்பு வந்தது இருந்தாலும் கடும் பிடிவாதமாக இருந்து இறுதியில் பெற்றோரின் சம்மதத்துடன் நேதாஜி படையில் சேர்ந்த பொழுது அவரது வயது 16 ஆகும் இராணுவத்தில் சேர்ந்த ஜானகி தேவர்க்கு அங்கு வழங்கப்பட்ட உணவு முதல் நாளிலே கலக்கத்தை ஏற்ப்படுத்தியது மேலும் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும்

இரும்புதலை அகமுடையார்

இரும்புதலை என்ற ஊரானது தஞ்சாவூர் அம்மாபேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது மேலும் இந்து ஊரின் சிறப்பு என்னவென்றால் அகமுடையார் பேரினத்தில் பல பட்டங்கள் பிரிவுகள் உள்ளன அதில் இரும்புதலை அகமுடையார் என்றானது பிரிவின் பெயரில் தான் இந்த ஊர் அமைந்துள்ளது #இரும்பிடர்தலை #அகமுடையார் என்ற பெயரானது காலப்போக்கில் பேச்சு வழக்கில் இரும்புதலை அகமுடையார் என்றானது மேலும் சோழ தேசத்தின் பூர்வீக குடி போர்க்குடியான இரும்புதலை அகமுடையார்கள் காலம் காலமாக தொண்றுதொட்டு இவ்வூரில் வசித்து வருகிறார்கள் தஞ்சை அருகே அமைந்துள்ள இரும்புதலை, கரந்தை, மானோங்கோரை போன்ற எண்ணற்ற ஊர்களில் பிள்ளை பட்டம் கொண்ட இரும்புதலை அகமுடையார் பெரும்பான்மையாக பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர் மேலும் இரும்புதலை அகமுடையார் வசிக்கும் ஊர்களை மற்றொரு பதிவில் காண்போம்...!!! தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை  அகம்படி பிள்ளை இரும்புதலை அகமுடையார்கள் பிள்ளை என்ற பட்டத்தை பெரிதும் பயன்படுத்துகின்றனர் மேலும் அகமுடையார்களே வரலாற்று ரீதியாக பிள்ளை என்ற பதத்தை முதலில் பயன்படுத்தியிருக்கிறார்கள் கி.பி 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்

டாக்டர் நடேசன் முதலியார்

தமிழக அரசியல் வரலாற்றில் நீதிக்கட்சியை உருவாக்கிய அகமுடையார் வழித்தோன்றல் நடேசன் முதலியார்...!!! டாக்டர் நடேசன் முதலியார் நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராவார் சென்னை நகரத்தில் திருவல்லிக்கேணியில் பிறந்த இவர் சென்னை மாநிலக் கல்லூரியிலும், சென்னை மருத்துவக்கல்லூரியிலும் படித்து டாக்டர் பட்டம் பெற்றார்...!!! இவர் பிராமணரல்லாத ஜாதியனரின் நலனுக்காக குரல் கொடுக்க 1912 இல் ஐக்கிய சென்னை இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினார் பின்னர் இவ்வியக்கம் சென்னை திராவிடர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது அரசியலில் பங்கேற்காமல் சென்னையில் பிராமணரல்லாத மாணவர்களுக்காக ஒரு விடுதியை நடத்தி வந்தது...!!! டாக்டர் நடேசன் முதலியார்  நடேசன் முதலியார் 1916 இல் அரசியல் போட்டியாளர்களாக இருந்த தியாகராய செட்டியையும் டாக்டர் டி.எம்.நாயரையும் ஒருங்கிணைந்து செயல்பட வைத்தார் இதனால் ”தென்னிந்திய நல வாரியம்” எனப்படும் நீதிக்கட்சி உருவானது நடேசன் முதலியாரும் அதன் முன்னணி தலைவர்களுள் ஒருவரானார்...!!! 1921 இல் சென்னை மாகாணத்தில் திரு.வி.கலியாணசுந்தரனார் தலைமையில் நடைபெற்ற பங்கிங்காம்

பிப்ரவரி 11 மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் மகன் துரைசாமி உட்பட 73 விடுதலை போராட்ட தியாகிகளை பினாங்கு நாட்டிற்க்கு நாடு கடத்திய தினம்

வரலாற்றில் இன்று பிப்ரவரி 11 தாய் நாட்டின் விடுதலைக்காக தன்னுயிர் நீத்த மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் மகன் துரைசாமி உட்பட 73 விடுதலை போராட்ட தியாகிகளை வெள்ளையர்கள் பினாங்கு நாட்டிற்க்கு நாடு கடத்திய சோக தினம்...!!!  மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் இறுதி நொடியை விளக்கும் படம்...!!!  துரைச்சாமி என்பவர் சிவகங்கைச் சீமையில் ஆங்கிலக் கிழக்கந்தியக் கம்பெனியர்க்கு எதிராக போராடி தம் இன்னுயிர் நீத்த மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் இளைய மகன் ஆவார் அக்டோபர் 24 1801 அன்று மருது பாண்டியர்களையும் அவர்களது மொத்த குடும்பத்தையும் திருப்பத்தூரில் ஆங்கிலேயர் தூக்கிலிடப்பட்ட பின் எஞ்சியிருந்தவர்களையும் துரைசாமியையும் பினாங்கு நாட்டிற்க்கு நாடு கடத்த பிப்ரவரி 11 இந்த துயரமான நாளில் தூத்துக்குடி துறைமுகம் அழைத்து செல்லப்பட்டனர் அங்கு தான் ''எனது இராணுவ நினைவுகள்'' என்ற பெயரில் மருது பாண்டியர்களின் இறுதி காலத்தை முழுமையாக எழுதிய ஆங்கிலேய அதிகாரி கர்னல் வேல்ஸ் அவர்களுக்கு மேலிடத்திலிருந்து வேலை கொடுக்கப்பட்டிருந்தது...!!!  என்னுடைய முன்னாள் நண்பர் சின்ன மருதுவின் இளைய மகன் போரில் எ

தமிழ் நாடக தந்தை பம்மல் சம்பந்த முதலியார்

அகமுடையார் பேரினத்தில் பிறந்த தமிழ் நாடக தந்தையான பம்மல் சம்பந்த முதலியார் தமிழ் நாடகங்களை முதன் முதலில் உரைநடையில் எழுதியவர் வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர் சென்னையில் பம்மல் விஜயரங்க முதலியாருக்கும் மாணிக்கவேலு அம்மாளுக்கும் பிப்ரவரி 09 1873 அன்று பிறந்தார் விஜயரங்க முதலியார் முதலில் தமிழ் ஆசிரியராகவும் பின்னர் பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வாளராகவும் இருந்தவர் அவர் தானே தமிழ் நூல்களை வெளியிட்டு வந்தார் இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்த முதலியார் இந்த புத்தகங்களை ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார் பின்னர் சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் 1924 முதல் 1928 வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி செய்தார்...!!! நாடக எழுத்துப்பணி : சிறு வயதிலேயே ஆங்கில, தமிழ் நாடகங்களைப் பார்த்தவர் காலப்போக்கில் தமிழ் நாடகத்தின் இழி நிலையைக் கண்டு அதில் வெறுப்புற்றிருந்தார் 1891 இல் பெல்லாரியிலிருந்து வந்த கிருஷ்