Skip to main content

இரும்புதலை அகமுடையார்


இரும்புதலை என்ற ஊரானது தஞ்சாவூர் அம்மாபேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது மேலும் இந்து ஊரின் சிறப்பு என்னவென்றால் அகமுடையார் பேரினத்தில் பல பட்டங்கள் பிரிவுகள் உள்ளன அதில் இரும்புதலை அகமுடையார் என்றானது பிரிவின் பெயரில் தான் இந்த ஊர் அமைந்துள்ளது #இரும்பிடர்தலை #அகமுடையார் என்ற பெயரானது காலப்போக்கில் பேச்சு வழக்கில் இரும்புதலை அகமுடையார் என்றானது மேலும் சோழ தேசத்தின் பூர்வீக குடி போர்க்குடியான இரும்புதலை அகமுடையார்கள் காலம் காலமாக தொண்றுதொட்டு இவ்வூரில் வசித்து வருகிறார்கள் தஞ்சை அருகே அமைந்துள்ள இரும்புதலை, கரந்தை, மானோங்கோரை போன்ற எண்ணற்ற ஊர்களில் பிள்ளை பட்டம் கொண்ட இரும்புதலை அகமுடையார் பெரும்பான்மையாக பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர் மேலும் இரும்புதலை அகமுடையார் வசிக்கும் ஊர்களை மற்றொரு பதிவில் காண்போம்...!!!

தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை 


அகம்படி பிள்ளை

இரும்புதலை அகமுடையார்கள் பிள்ளை என்ற பட்டத்தை பெரிதும் பயன்படுத்துகின்றனர் மேலும் அகமுடையார்களே வரலாற்று ரீதியாக பிள்ளை என்ற பதத்தை முதலில் பயன்படுத்தியிருக்கிறார்கள் கி.பி 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்து சின்னமனூர் கல்வெட்டில் “பிள்ளை குலசேகர மாவலி வானாதிராய அகம்படிய முதலி சிங்க தேவன்” எனும் அகமுடையார் இனத்தைச் சேர்ந்தவர் பிள்ளை பதத்தோடு குறிக்கப்படும் செய்தியே பிள்ளை என்ற பட்டப்பெயரை தமிழக வரலாற்றில் முதலில் பயன்படுத்தியதற்கான சான்றாகும்...!!!

கரந்தை தமிழ் சங்கத்தில் அமைந்துள்ள உமா மகேசுவரன் பிள்ளை திருஉருவ சிலை...!!! 



மேலும் பிள்ளை என்பதற்கு அர்த்தம் அரச வாரிசு என்று பொருள் கல்வெட்டு இலக்கியங்கள் வாயிலாக கிடைக்கும் தகவல் படி பிள்ளை என்பதன் முதல் பொருள் அரசனின் குழந்தைகள் என்பதாகும் அதாவது ஒரு அரசனுக்கு மூத்த மகன் பட்டத்து வாரிசாகி இளவரசர் என்று அழைக்கப்படும் போது இளையவர்கள் அல்லது மற்ற வாரிசுகள் பிள்ளை என்று அழைக்கப்பட்டு அரசனின் வாரிசுகளாக அங்கீகரிக்கப்படுவர் இந்த பிள்ளை என்ற பதமானது வடநாட்டில் உள்ள இராஜபுத்திரர்கள் அரசனின் வாரிசுகள் என்ற பொருள் போன்றதாகும்...!!!

இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு 

Comments

Post a Comment

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படத்தின் திறப்பு விழா

பேராசிரியர் ராஜையன்  மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நேரடி வாரிசுதார் திருப்பத்தூர் ராமசாமி சேர்வை  சிவகங்கை வரலாற்று ஆய்வாளர் குருசாமி மயில்வாகனன்  வரலாற்றில் மறைக்கபட்ட இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் படுகொலையான திருப்பத்தூர் படுகொலையில் வீரமரணம் அடைந்த முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து இன்னுயிர் நீத்த 500 க்கும் மேற்பட்ட போராளிகளின் தியாகத்தை உயிர்பிக்கும் வீர வரலாறு தான் திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படம்...!!! திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படத்தை YouTube வழியே காண https://youtu.be/OpDrspgrHng அக்டோபர் 24 2018 அன்று திருப்பத்தூரில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் அரசு மணி மண்டபத்தில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு மூலம் #திருப்பத்தூர் #படுகொலை ஆவணப்படத்தை பேராசிரியர் ராஜையன் அவர்களின் கைகளால் திறந்து வெற்றிகரமாக இவ்விழா இனிதே நிறைவடைந்தது...!!! ஆயிரம் ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் இருந்தும் தள்ளாத வயதில் உள்ள முதியவரான ஐயா ராஜையன் அவர்கள் கைகளால்...

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தி...