இரும்புதலை என்ற ஊரானது தஞ்சாவூர் அம்மாபேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது மேலும் இந்து ஊரின் சிறப்பு என்னவென்றால் அகமுடையார் பேரினத்தில் பல பட்டங்கள் பிரிவுகள் உள்ளன அதில் இரும்புதலை அகமுடையார் என்றானது பிரிவின் பெயரில் தான் இந்த ஊர் அமைந்துள்ளது #இரும்பிடர்தலை #அகமுடையார் என்ற பெயரானது காலப்போக்கில் பேச்சு வழக்கில் இரும்புதலை அகமுடையார் என்றானது மேலும் சோழ தேசத்தின் பூர்வீக குடி போர்க்குடியான இரும்புதலை அகமுடையார்கள் காலம் காலமாக தொண்றுதொட்டு இவ்வூரில் வசித்து வருகிறார்கள் தஞ்சை அருகே அமைந்துள்ள இரும்புதலை, கரந்தை, மானோங்கோரை போன்ற எண்ணற்ற ஊர்களில் பிள்ளை பட்டம் கொண்ட இரும்புதலை அகமுடையார் பெரும்பான்மையாக பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர் மேலும் இரும்புதலை அகமுடையார் வசிக்கும் ஊர்களை மற்றொரு பதிவில் காண்போம்...!!!
அகம்படி பிள்ளை
இரும்புதலை அகமுடையார்கள் பிள்ளை என்ற பட்டத்தை பெரிதும் பயன்படுத்துகின்றனர் மேலும் அகமுடையார்களே வரலாற்று ரீதியாக பிள்ளை என்ற பதத்தை முதலில் பயன்படுத்தியிருக்கிறார்கள் கி.பி 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்து சின்னமனூர் கல்வெட்டில் “பிள்ளை குலசேகர மாவலி வானாதிராய அகம்படிய முதலி சிங்க தேவன்” எனும் அகமுடையார் இனத்தைச் சேர்ந்தவர் பிள்ளை பதத்தோடு குறிக்கப்படும் செய்தியே பிள்ளை என்ற பட்டப்பெயரை தமிழக வரலாற்றில் முதலில் பயன்படுத்தியதற்கான சான்றாகும்...!!!
![]() |
கரந்தை தமிழ் சங்கத்தில் அமைந்துள்ள உமா மகேசுவரன் பிள்ளை திருஉருவ சிலை...!!! |
மேலும் பிள்ளை என்பதற்கு அர்த்தம் அரச வாரிசு என்று பொருள் கல்வெட்டு இலக்கியங்கள் வாயிலாக கிடைக்கும் தகவல் படி பிள்ளை என்பதன் முதல் பொருள் அரசனின் குழந்தைகள் என்பதாகும் அதாவது ஒரு அரசனுக்கு மூத்த மகன் பட்டத்து வாரிசாகி இளவரசர் என்று அழைக்கப்படும் போது இளையவர்கள் அல்லது மற்ற வாரிசுகள் பிள்ளை என்று அழைக்கப்பட்டு அரசனின் வாரிசுகளாக அங்கீகரிக்கப்படுவர் இந்த பிள்ளை என்ற பதமானது வடநாட்டில் உள்ள இராஜபுத்திரர்கள் அரசனின் வாரிசுகள் என்ற பொருள் போன்றதாகும்...!!!
இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு
Thuluva valler or agamudiyar sama
ReplyDelete