Skip to main content

தமிழ் நாடக தந்தை பம்மல் சம்பந்த முதலியார்


அகமுடையார் பேரினத்தில் பிறந்த தமிழ் நாடக தந்தையான பம்மல் சம்பந்த முதலியார் தமிழ் நாடகங்களை முதன் முதலில் உரைநடையில் எழுதியவர் வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர் சென்னையில் பம்மல் விஜயரங்க முதலியாருக்கும் மாணிக்கவேலு அம்மாளுக்கும் பிப்ரவரி 09 1873 அன்று பிறந்தார் விஜயரங்க முதலியார் முதலில் தமிழ் ஆசிரியராகவும் பின்னர் பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வாளராகவும் இருந்தவர் அவர் தானே தமிழ் நூல்களை வெளியிட்டு வந்தார் இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்த முதலியார் இந்த புத்தகங்களை ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார் பின்னர் சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் 1924 முதல் 1928 வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி செய்தார்...!!!

நாடக எழுத்துப்பணி :

சிறு வயதிலேயே ஆங்கில, தமிழ் நாடகங்களைப் பார்த்தவர் காலப்போக்கில் தமிழ் நாடகத்தின் இழி நிலையைக் கண்டு அதில் வெறுப்புற்றிருந்தார் 1891 இல் பெல்லாரியிலிருந்து வந்த கிருஷ்ணமாச்சார்லு என்ற ஆந்திர நடிகர் நடித்த நாடகங்கள் இவருக்கு தமிழ் நாடகங்கள் மேல் பற்றினை உண்டு பண்ணின அவரது நாடகக் குழுவில் வழக்கறிஞர்களும், மருத்துவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் சேர்ந்திருப்பதைக் கண்ட சம்பந்த முதலியார் தாமும் அது போல ஒரு நாடகக் குழு அமைக்கத் திட்டமிட்டார் சீரழிந்த நிலையில் அவதிப்படும் தமிழ் நாடகத்தை சீர்படுத்திட வேண்டும் என்ற இவரது ஆவலும் இவரை நாடக உலகிற்குள் புகுத்தியது நண்பர்கள் சிலருடன் சென்னை ஜார்ஜ் டவுனில் 1891 ஜூலை 1 ஆம் நாள் "சுகுண விலாச சபை" என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்...!!! 

தற்பொழுது அந்த சுகுண விலாச சபையில் ஐயா பம்மல் சம்பந்த முதலியார் திருவுருவசிலை அமைந்துள்ளது...!!! 

சுகுண விலாச சபையில் அமைந்துள்ள பம்மல் சம்பந்த முதலியார் திருவுருவசிலை 

நாடகம் என்றால் தெருக்கூத்து என்றும் சிற்றூர் மக்கள் மட்டுமே காண்பவர்கள் என்ற நிலையை மாற்றி நகரங்களிலே நல்ல மேடையமைத்து பல வகை நாடகங்களை நடத்திக் காட்டினார் உயர்குடியில் பிறந்தவர்களையும் கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார் இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம். கே. ராதாவின் தந்தை), சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்...!!!

பம்மல் சம்பந்த முதலியார் நாடகக் கலைக்கு தம் 81வது வயது வரை பெரும்பணி ஆற்றினார் கண்பார்வை மங்கிய நிலையிலும் தாம் சொல்லியே பிறரை எழுத வைத்தார்...!!!

விருதுகளும் சிறப்புகளும் :

22வது வயதில் அவருடைய முதல் நாடகம் 'லீலாவதி-சுலோசனா' என்ற பெயருடன் அரங்கேறியது மொத்தம் 80 நாடகங்கள் எழுதினார்

1959 இல் சங்கீத நாடக அகாதமி விருது

1916 இல் நாடகப் பேராசிரியர் என்ற விருது பெற்றார்

1963 இல் பத்மபூஷண் என்ற பட்டத்தையும் பெற்றார்

தன் நாடகங்களில் சிலவற்றில் செய்யுள்,கீர்த்தனை முதலியவற்றையும் அறிமுகப்படுத்தினார் தமிழ் நாடகம் மக்களின் பார்வையில் உயர்ந்த மதிப்புக்குரியதாகத் திகழ்வதற்கு முதற்காரணமானார்...!!!


தமிழில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் :

ஷேக்ஸ்பியரின் Hamlet, As You like it, Macbeth, Cymbeline, Merchant of Venice என்ற நாடகங்களை அவைகளின் சுவையோ நயமோ குறையாமல் 'அமலாதித்யன்', 'நீ விரும்பியபடியே', 'மகபதி', 'சிம்மளநாதன்', 'வணிபுர வானிகன்' என்ற பெயர்களில் தமிழ் நாடகங்களாக மொழிபெயர்த்தார்...!!!

பம்மல் சம்பந்த முதலியாரின் பல நாடகங்கள் திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன அவற்றில் சில...!!!

காலவா ரிஷி (1932)
சதி சுலோச்சனா (1934, கதை, வசனம், இயக்கம், நடிப்பு)
மனோகரா (1936, கதை, வசனம், இயக்கம், நடிப்பு)
ரத்னாவளி (1935)
யயாதி (1938)
ராமலிங்க சுவாமிகள் (1939)
சந்திரஹரி (1941)
ஊர்வசி சாகசம் (1940)
தாசிப் பெண் (1943)
சபாபதி (1941)
வேதாள உலகம் (1948)


பம்மல் சம்பந்த முதலியார் இயற்றிய பல நூல்களை தமிழ் நாடு அரசு நாட்டுடமையாக்கியுள்ளது அதன் பட்டியல்...!!!

இந்தியனும்-ஹிட்லரும்
இல்லறமும் துறவறமும்
என் சுயசரிதை
என் தந்தை தாயர்
ஒன்பது குட்டி நாடகங்கள்
ஓர் விருந்து அல்லது சபாபதி நான்காம் பாகம்
கலையோ-காதலோ? அல்லது நட்சத்திரங்களின் காதல்
கள்வர் தலைவன்
காதலர் கண்கள்
காலக் குறிப்புகள்
சபாபதி
சபாபதி முதலியாரும்-பேசும் படமும்
நான் குற்றவாளி
சாதாரண உணவுப் பொருள்களின் குணங்கள்
தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (முதல் பாகம்)
தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (இரண்டாம் பாகம்)
தீபாவளி வரிசை
தீயின் சிறு திவலை
நாடகத் தமிழ்
நான் கண்ட நாடகக் கலைஞர்கள்
நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்
பலவகை பூங்கொத்து
மனை ஆட்சி
மனோகரா
மூன்று நகைச்சுவை நாடகங்கள்
யயாதி
வாணீபுர வணிகன்
விடுதிப் புஷ்பங்கள்

அகமுடையார் வழித்தோன்றல் பம்மல் சம்பந்த முதலியார் பிறந்த தினமான இன்று அவரை போற்றி வணங்குவோம் இவரை பெற்றதால் எமது அகமுடையார் இனம் பெருமை கொள்கிறது...!!! 

இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு 

Comments

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்

கி.பி 1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்  ----------------------------------------------------- பழந்தமிழர்களின் போர் ஆயுதமான வளரி ஆயுதத்தை 217 ஆண்டுகளுக்கு முன்பு போர்களங்களில் பயன்படுத்திய பெருமைக்குரியவர்கள் நமது சிவகங்கை சீமையின் மன்னர்கள் மருது பாண்டியர்கள் என்பது நாம் அறிந்த செய்தி ஆனால் அகமுடையார்கள் கி.பி 1500 களிலேயே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது...!!! ஆம் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வடகரை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கி.பி 1500 ஆண்டைச் சார்ந்த நடுகல் மூலம் இப்பகுதியில் அகமுடையார் சகோதர்கள் இருவர் வளரி ஆயுதத்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது இதுவே வளரி பற்றி தமிழகத்தில் கிடைத்துள்ள ஒரே பழமையான சிற்பம் ஆகும் இந்த நடுகல்லில் காணப்படுபவர்கள் திரு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களின் முன்னோர்களே ஆவார்கள் இந்நடுகல் பற்றியச் செய்தியை இவர் தனது “வடகரை-ஒர் வம்சத்தின் வரலாறு” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்...!!! மேலும் குறிப்பிட்ட இந்த சகோதரர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி ஆயுதம் மேற்குறிப்பிட்டவர்களின் ப

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தின மா