Skip to main content

பிப்ரவரி 11 மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் மகன் துரைசாமி உட்பட 73 விடுதலை போராட்ட தியாகிகளை பினாங்கு நாட்டிற்க்கு நாடு கடத்திய தினம்


வரலாற்றில் இன்று பிப்ரவரி 11 தாய் நாட்டின் விடுதலைக்காக தன்னுயிர் நீத்த மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் மகன் துரைசாமி உட்பட 73 விடுதலை போராட்ட தியாகிகளை வெள்ளையர்கள் பினாங்கு நாட்டிற்க்கு நாடு கடத்திய சோக தினம்...!!! 

மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் இறுதி நொடியை விளக்கும் படம்...!!! 

துரைச்சாமி என்பவர் சிவகங்கைச் சீமையில் ஆங்கிலக் கிழக்கந்தியக் கம்பெனியர்க்கு எதிராக போராடி தம் இன்னுயிர் நீத்த மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் இளைய மகன் ஆவார் அக்டோபர் 24 1801 அன்று மருது பாண்டியர்களையும் அவர்களது மொத்த குடும்பத்தையும் திருப்பத்தூரில் ஆங்கிலேயர் தூக்கிலிடப்பட்ட பின் எஞ்சியிருந்தவர்களையும் துரைசாமியையும் பினாங்கு நாட்டிற்க்கு நாடு கடத்த பிப்ரவரி 11 இந்த துயரமான நாளில் தூத்துக்குடி துறைமுகம் அழைத்து செல்லப்பட்டனர் அங்கு தான் ''எனது இராணுவ நினைவுகள்'' என்ற பெயரில் மருது பாண்டியர்களின் இறுதி காலத்தை முழுமையாக எழுதிய ஆங்கிலேய அதிகாரி கர்னல் வேல்ஸ் அவர்களுக்கு மேலிடத்திலிருந்து வேலை கொடுக்கப்பட்டிருந்தது...!!! 

என்னுடைய முன்னாள் நண்பர் சின்ன மருதுவின் இளைய மகன் போரில் எஞ்சிய மகன் 15 வயது ஆன துரைசாமியை தூத்துக்குடியில் சந்தித்தேன் என்று கர்னல் வேல்ஸ் தனது நாட்குறிப்பில் 477 ம் பக்கத்தில் கூறுகிறார் மேலும் 488 ஆம் பக்கத்தில் கைதியாக உள்ள #இளவரசர் என்று துரைசாமியை பற்றி மனமுருகி தனது நாட்குறிப்பில் கூறியுள்ளார்...!!! 

மருது பாண்டியர்களை எதிர்த்து போரிட்ட ஆங்கிலேய அதிகாரி கர்னல் வேல்ஸ் எழுதிய எனது இராணு நினைவுகள்...!!! 


அக்டோபர் 24 மற்றும் 27 மாமன்னர் மருது பாண்டியர்கள் குருபூஜையை நினைவு கூறுவது போல இனி வரும் காலங்களில் பிப்ரவரி 11 இந்த சோக தினத்தையும் நினைவு கூறுவோம் தனது தாய் மண்ணைவிட்டு அண்டை நாட்டிற்க்கு நாடு கடத்துவது என்பது மரணத்தை காட்டிலும் மிகவும் வேதனையானது தாய் நாட்டின் விடுதலைக்காக தனது வாழ்க்கை இழந்த மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் மகன் துரைசாமி உட்பட 73 தியாகிகளுக்கு வீரவணக்கங்கள்...!!! 

நாடு கடத்தப்பட்ட 73 விடுதலை போராட்ட தியாகிகளின் பெயர்களை கீழே காணலாம்...!!! 

1) வேங்கன் பெரிய உடையத்தேவர் - சிவகங்கை 

2) முத்துவடுகு என்ற துரைசாமி (மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் மகன்) 

3) சின்ன லக்கையா என்ற பொம்மை நாயக்கர் - வாராப்பூர் 

4) ஜெகநாத ஐயன் - இராமநாதபுரம் 

5) பாண்டியப்ப தேவன் - கருமாத்தூர்

6) சடையமான் - கருமாத்தூர் 

7) கோசிசாமி தேவர் - கருமாத்தூர் 

8) தளவாய் மாடசாமி நாயக்கர் - பாஞ்சாலங்குறிச்சி

9) குமாரத்தேவன் - முள்ளூர்

10) பாண்டியன் - பதியான்புத்தூர்

11) முத்துவீர மணியக்காரர் - ஆணைக்கொல்லம்

12) சாமி - மணக்காடு

13) ராமசாமி 

14) எட்டப்ப தேவர் - நான்குநேரி 

15) பாண்டிய நாயக்கர் - கோம்பை

16) மண்டைத் தேவர் 

17) மலையேழ்மந்தன்

18) வீரபாண்டிய தேவர்

19) கருப்ப தேவர் 

20) சுப்ரமணியம் 

21) மாடசாமி 

22) பெருமாள் 

23) உடையத்தேவர் (த/பெ : சின்னப்பிச்சை தேவர்) 

24) தேவி நாயக்கர் 

25) முத்துக்கருப்ப தேவர் 

26) மண்டந்தேவர் (த/பெ : சங்கரநாராயண தேவர்) 

27) பேயன் (த/பெ : பால உடையாத் தேவர்) 

28) அழகிய நம்பி

29) ஒய்யக்கொண்ட தேவர் 

30) சிவனுத்தேவர்

31) காணி ஆழ்வார் 

32) மூப்பு உடையான் 

33) கொண்டவன் 

34) வீரபத்திரன் - நான்குநேரி 

35) சிலம்பன் - நான்குநேரி 

36) பேயன் - நான்குநேரி 

37) ராமசாமி - நான்குநேரி 

38) இருளப்பன் - நான்குநேரி 

39) மாடசாமி - நான்குநேரி 

40) வீரபாண்டியன் 

41) வெங்கட்டராயன் - நான்குநேரி 

42) உடையார் 

43) முத்துராக்கு - நான்குநேரி 

44) முத்துராக்கு - ஆனைக்கொல்லம்

45) சொக்கதலைவர் - நான்குநேரி 

46) இருளப்ப தேவர் - நான்குநேரி 

47) மல்லையா நாயக்கர் - இளவம்பட்டி

48) சுப்பிரமணி நாயக்கர் - கண்டநாயக்கன் பட்டி

49) மல்லைய நாயக்கன் - இலாம்பட்டி

50) சல்வமோனிய நாயக் - கட்ட நாயக்கன்பட்டி

51) தோமச்சி நாயக்

52) சுளுவமோனியா நாயக் - ஆடினூர்

53) இராமசாமி - குளத்தூர் பாலிகர் பேரன்

54) பிச்சாண்டி நாயக் - எருவுபோபரம்

55) தளவாய் கல்லுமடம்

56) சின்ன மாடன் - பசுவந்தனை

57) வைடியம் மூர்த்தி - கந்தீஸ்வரம்

58) தளவாய் பிள்ளை (தேசகாவல் மணிகர்)

59) சுளுவமணியம்

60) பெடன்ன நாயக் (சுளுவமணியம் மகன்) - தூத்துக்குடி போராட்ட தளபதி

61) கிருஷ்ணமா நாயக்

62) வாயுளன் - குளத்தூர்

63) மிளனன் - அறச்சேரி

64) வைல முத்து -கங்கராயகுறிச்சி

65) ராமன் - சுவளி

66) பாலையா நாயக் - நாஞ்சி நாட்டு சூரன்குடி

67) குமரன்

68) வெள்ளிய கொண்டான் வெள்ளியன்

69) இராமன்

70) அல்லேக சொக்கு

71) சேக் உசேன்

72) அப்பாவு நாயக்

73) குப்பன்னா பிள்ளை

என்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் பணியில் நமது அகமுடையார் வரலாறு மீட்புகுழு மீட்புகுழு இளைஞர்கள்...!!!

Comments

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்

கி.பி 1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்  ----------------------------------------------------- பழந்தமிழர்களின் போர் ஆயுதமான வளரி ஆயுதத்தை 217 ஆண்டுகளுக்கு முன்பு போர்களங்களில் பயன்படுத்திய பெருமைக்குரியவர்கள் நமது சிவகங்கை சீமையின் மன்னர்கள் மருது பாண்டியர்கள் என்பது நாம் அறிந்த செய்தி ஆனால் அகமுடையார்கள் கி.பி 1500 களிலேயே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது...!!! ஆம் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வடகரை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கி.பி 1500 ஆண்டைச் சார்ந்த நடுகல் மூலம் இப்பகுதியில் அகமுடையார் சகோதர்கள் இருவர் வளரி ஆயுதத்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது இதுவே வளரி பற்றி தமிழகத்தில் கிடைத்துள்ள ஒரே பழமையான சிற்பம் ஆகும் இந்த நடுகல்லில் காணப்படுபவர்கள் திரு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களின் முன்னோர்களே ஆவார்கள் இந்நடுகல் பற்றியச் செய்தியை இவர் தனது “வடகரை-ஒர் வம்சத்தின் வரலாறு” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்...!!! மேலும் குறிப்பிட்ட இந்த சகோதரர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி ஆயுதம் மேற்குறிப்பிட்டவர்களின் ப

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தின மா