Skip to main content

நேதாஜியின் ஐ.என்.ஏ படையில் கேப்டனாக பணிபுரிந்த வீரஅகமுடையச்சி ஜானகி தேவர்


நேதாஜியின் INA படையில் கேப்டனாக பணிபுரிந்த வீரஅகமுடையச்சி ஜானகி தேவர்...!!!

மலேசிய நாட்டில் கோலாலம்பூர் நகரில் பிப்ரவரி 25 ம் தேதி 1925 ஆம் ஆண்டு போர்க்குடி அகமுடையார் பேரினத்தில் வீரஅகமுடையச்சி ஜானகி தேவர் பிறந்தார் இவர் வசதியான அகமுடையார் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சிறு வயதில் இருந்து எந்த கஷ்டமும் இல்லாமல் வளர்ந்து வந்தார் அந்த காலத்தில் மலேசியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வந்து அங்குள்ள இந்தியர்களை சந்தித்து மலேசிய இந்திய விடுதலைக்காக பேசிய போது தமிழர்கள் வீடுகளில் உள்ள நகை மற்றும் பணத்தை நன்கொடையாக கொடுத்தனர் நேதாஜியின் வீர உரையை கேட்ட ஜானகி தேவர் சிறுவயதிலே தான் அணிந்திருந்த தங்க கம்மல்களை கொடுத்தார்...!!!

இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து சேவையாற்ற முடிவு செய்தார் அவருடைய குடும்பத்தில் இருந்து பலமாக எதிர்ப்பு வந்தது இருந்தாலும் கடும் பிடிவாதமாக இருந்து இறுதியில் பெற்றோரின் சம்மதத்துடன் நேதாஜி படையில் சேர்ந்த பொழுது அவரது வயது 16 ஆகும் இராணுவத்தில் சேர்ந்த ஜானகி தேவர்க்கு அங்கு வழங்கப்பட்ட உணவு முதல் நாளிலே கலக்கத்தை ஏற்ப்படுத்தியது மேலும் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் வலி வேதனை ஏற்றப்பட்டது இருந்த போதிலும் தன் தாய் நாட்டிற்க்காக போராட வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் தனக்கு ஏற்பட்ட வலி வேதனைகளை மறந்து கடுமையான பயிற்சிகளை பெற்று இராணுவ அதிகாரிகளுக்கான தேர்வில் முதல் இடம் பிடித்தார் ஜானகி தேவர்...!!!


இந்திய தேசிய ராணுவத்தில் ஆரம்ப நிலையில் இருந்து ஜான்சி ராணி படையில் இரண்டாவது மூத்த அதிகாரியாக 18 வயதிலே நியமிக்கப்பட்டார் இந்திய தேசிய ராணுவத்தில் பெண்களின் சேவை அப்பொழுதே தொடங்கிவிட்டது எனலாம் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற பொழுது பிரிட்டன் படைகளுக்கு எதிராக ஜானகி அவருடைய படையில் இருந்தவர்கள் உக்கிரமாக போர் செய்தனர் ஜான்சி ராணி படையில் சுமார் 80 சதவீதம் மேல் இருந்தவர்கள் தமிழ் பெண்களே என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார் நேதாஜி...!!!

இந்திய தேசிய ராணுவத்தில் தனது மகத்தான பங்களிப்பை செலுத்திய ஜானகி தேவர் இந்திய விடுதலை போராட்டத்திற்காக நேரடியாக பிரிட்டிஷ் இராணுவத்திற்கு எதிரான யுத்தத்தில் பர்மா - இந்தியா எல்லை பகுதிகளில் பல நாட்களாக தங்கி இருந்து போர் செய்து பல வெற்றிகளை கண்டார் ஜானகி தேவரின் வீரத்தையும் தேசபக்தியையும் நேரடியாக பார்த்து நேதாஜி அவர்கள் வியந்துள்ளார்...!!!

இந்திய தேசிய இராணுவ பணிகள் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் போது திடீரென நேதாஜி மரணமடைந்தார் என்ற தகவல் கிடைத்தது அதன் பிறகு படையில் பணியாற்றிய பல முக்கிய தலைவர்கள் ஜானகி உட்பட தன் தாய் நாட்டிற்க்கு திரும்பிய உடன் இங்கு வாழும் இந்தியர்களுக்கென்று மலேசிய இந்திய காங்கிரஸ் என்ற புதிய அரசியல் கட்சியை ஏற்படுத்தினார்கள் இந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகளில் ஜானகி தேவர் ஒருவர் ஆவார் இந்த அமைப்பின் முதல் மாநாட்டிலே தலைமை தாங்கி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன...!!!


மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1980 முதல் 1986 வரை மலேசிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக சிறப்பாக செயல்பட்டு வந்தார் மேலும் மலேசிய நாடாளுமன்றத்தின் முதல் இந்திய பெண் உறுப்பினர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு...!!! 

இந்திய அரசு ஜானகி தேவரின் விடுதலை போராட்ட பங்களிப்புக்காக ''பத்ம ஸ்ரீ'' விருதை குடியரசுத் தலைவர் கே.ஆர் நாராயணன் கைகளால் பெற்றார் இந்தியாவின் பத்ம ஸ்ரீ விருது பெறும் முதல் மலேசியாவில் வாழும் தமிழ் பெண் என்ற பெருமை ஜானகி தேவரை சேரும்...!!!

இத்தகைய பல உயர் பதவியில் இருந்த ஜானகி தேவர் பல்வேறு மகளிர் அமைப்புகளிலும் சேர்ந்து சமூக சேவையை தொடர்ந்து செய்து வந்தார் மலேசிய மக்களின் ஒட்டுமொத்த தமிழர்களின் அன்பையும் மரியாதையையும் பெற்று மகாராணியாக விளங்குவது ஜானகி தேவர் மட்டுமே மலேசிய தேசிய காங்கிரஸ் மூலமாக அங்கு வாழ்ந்து வந்த இந்தியர்களின் முன்னேற்றத்திற்காகவும் நல்வாழ்வுக்காகவும் மேலும் அரசியலில் தனியிடம் பெறுவதற்காக ஜானகி தேவர் முன் நின்று போராடினார்...!!! 

இவரது போராட்டத்தின் பலனாக மலேசியாவில் உள்ள இந்தியர்களுக்கு சிறப்பு சலுகையும் அந்தஸ்தும் மற்றும் தமிழ் மொழிக்கென முன்னுரிமை அளிக்கப்பட்டது மலேசியாவில் ரப்பர் தோட்டத்தில் கருகி கொண்டிருந்த இந்தியர்களின் வாழ்க்கையை மீட்டெடுத்த பெருமைக்குரியவர் ஜானகி தேவர் இத்தகைய பல உயர்த்த சிறப்பு அம்சங்களும் விடுதலை போராட்ட வரலாற்றுக்கு சொந்தமான கேப்டன் ஜானகி தேவர் அவர்கள் தனது 89 வயதில் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் 09/05/2014 அன்று காலமானார் ஜானகி அம்மையாருக்கு ஈஸ்வர் என்ற மகனும் கவுரி என்ற மகளும் உள்ளனர் ஜானகி அம்மையாரின் இறப்பு செய்தி மலேசிய மற்றும் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது...!!! 

தனது வாழ்நாள் முழுவதும் தாய் நாட்டிற்க்காக உழைத்த வீர பெண்மணி ஜானகி தேவர் நமது இனத்திற்கு கிடைத்த வரம் என்றும் மறையாது அழியாது ஜானகி தேவர் புகழ்...!!! 

இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு 

Comments

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படத்தின் திறப்பு விழா

பேராசிரியர் ராஜையன்  மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நேரடி வாரிசுதார் திருப்பத்தூர் ராமசாமி சேர்வை  சிவகங்கை வரலாற்று ஆய்வாளர் குருசாமி மயில்வாகனன்  வரலாற்றில் மறைக்கபட்ட இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் படுகொலையான திருப்பத்தூர் படுகொலையில் வீரமரணம் அடைந்த முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து இன்னுயிர் நீத்த 500 க்கும் மேற்பட்ட போராளிகளின் தியாகத்தை உயிர்பிக்கும் வீர வரலாறு தான் திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படம்...!!! திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படத்தை YouTube வழியே காண https://youtu.be/OpDrspgrHng அக்டோபர் 24 2018 அன்று திருப்பத்தூரில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் அரசு மணி மண்டபத்தில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு மூலம் #திருப்பத்தூர் #படுகொலை ஆவணப்படத்தை பேராசிரியர் ராஜையன் அவர்களின் கைகளால் திறந்து வெற்றிகரமாக இவ்விழா இனிதே நிறைவடைந்தது...!!! ஆயிரம் ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் இருந்தும் தள்ளாத வயதில் உள்ள முதியவரான ஐயா ராஜையன் அவர்கள் கைகளால்...

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தி...