சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு மருது சீமையான காளையார் கோவிலில் நடந்த நிகழ்ச்சி...!!!
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு காளையார் கோவில் பகுதியில் பலத்த மழை பெய்து வெள்ளம் வந்தது இதனால் காளையார் கோவில் தெப்பக்குளம் ஆனைமடு விரைவில் நிறைந்தது ஏனென்றால் காளையார் கோவில் அமைந்துள்ள பகுதி பள்ளமான இடமாகும் இதற்கு எடுத்துக்காட்டாக சுமார் 200 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியினை நினைவு கூற விரும்புகிறேன்...!!!
மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு காளையார் கோவிலில் உள்ள காளீஸ்வரருக்கு ஒரு ராஜகோபுரம் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளதைப் போல் கட்ட வேண்டும் என்ற ஆசை அதற்கான ஆயத்த வேலைகள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது அஸ்திவாரம் தோண்டும் போது பிரச்சனைகள் கட்டிடம் கட்ட முடியாமல் நீர் ஊற்று அதிகரித்து கட்டிடம் கட்ட தடைப்பட்டது அந்த சமயத்தில் சிறிய வயதுடைய ஒரு முகமதியர் பெயர் சுலைமான் பக்கிரி என்பவர் அந்த இடத்திற்கு வந்தார் அவர் யார் தெரியுமா...? ஆற்காட்டு நவாப் முகமதலியின் படையில் பணி ஆற்றிய ஒரு தலைசிறந்த வீரன் தான் சுலைமான் இவன் காளையார் கோயில் மீது படையெடுக்க சரியான தருணத்தை கணக்கிடுவதற்காகவும் மருது பாண்டியர்களின் படையின் வலிமையை அறிந்து கொள்ளவும் அங்குள்ள மக்களின் மனநிலையை அறிந்து சரியான நேரத்தில் படையெடுக்க ஆற்காடு நவாப்பால் அனுப்பப்பட்ட ஒற்றன் ஆவான் சந்தர்ப்பம் கிடைக்குமாயின் மருது பாண்டியரைக் கொலை செய்வதற்குக் கூட சுலைமானுக்கு யோசனை சொல்லப்பட்டதாம் அந்த சமயத்தில் அங்கு வந்த சுலைமான் மருது பாண்டியருக்கு வணக்கம் சொல்லிவிட்டு அதிகமாக வரும் நீர் ஊற்றை தான் தடுத்துவிடுவதாகச் சொல்கிறான் அதுகேட்டு மன்னர் மருதிருவர் மன மகிழ்ச்சி அடைகிறார்கள் உடனே சுலைமானுக்கு நீர் ஊற்றை அடைக்க தேவையானவற்றை கொடுக்க வேலையாட்களிடம் பணித்தார்கள் மருது பாண்டியர்கள்...!!!
சுலைமான் பத்து வண்டி அளவு அயிரை மீன்கள் வேண்டும் என்றார் அடுத்த நாள் காளையார் கோயிலுக்கு அருகில் உள்ள எல்லாப் பகுதிகளுக்கும் செய்தி அனுப்பி அயிரை மீன்களையும் அஸ்திவாரம் தோண்டிய நீர் தேக்கிய பகுதிகளில் சுலைமான் ஆற்று மணலுடன் சேர்த்துப் போட்டதால் ஒவ்வொரு மீனும் மணலைகளைக் கவ்விக்கொண்டு நீர் ஊற்றை அடைத்தது அதன் பின்னர் நீரின் கசிவு ஏற்படாததால் கோபுரம் கட்டும் வேலை சுணக்கம் இல்லாமல் தொடர்ந்து நடைபெற்றது இதனை கண்ட மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு மட்டற்ற மகிழ்ச்சி சுலைமானிடம் உனக்கு என்ன வேண்டும் என மருதரசன் கேட்டார் அதற்கு சுலைமான் எதுவும் வேண்டாம் என மறுத்துவிட்டார் இந்த சுலைமான் பல மொழி பேசும் திறமை பெற்றவர் அத்தோடு வானத்தில் பறக்கும் பறவையை குறிதவறாது வேட்டையாடும் கலையை நன்கறிந்தவர் அத்துடன் மல்யுத்தம், சிலம்பு ஆட்டம் கற்றறிந்தவர் மகா புத்திசாலி அப்படிப்பட்டவரை மருது பாண்டியர்கள் அவர்கள் தனது அரண்மனையிலேயே அதன் உள்ளே உள்ள குதிரை லாயத்தின் முழுப் பொறுப்பையும் கவனிக்க முழு அதிகாரத்தை சுலைமானுக்கு கொடுத்து கௌரவித்தார்...!!!
காலப் போக்கில் மருது சகோதரர்களின் உண்மையான உணர்வுகளும் சிறந்த சிந்தனைகளும் அவர்களுக்கு மக்களிடத்தில் அவர்கள் காட்டும் அன்பையும் நேரில் பார்த்த பொழுது சுபேதார் சுலைமான் மனம் மாறினார் அவர் உளவாளியாக வந்த ஆற்காட்டருக்கு எந்த தகவலும் அனுப்பவில்லை இப்படிப் பல மாதங்கள் உருண்டோடின ஒரு நாள் பெரிய மருது பாண்டியர் சிவகங்கைக்கு அரசு வேலையாக சென்றிருந்தார் சின்ன மருது பாண்டியர் அவரின் நம்பிக்கைக்கு உரிய கரடிக் கறுத்தானைக் கூட்டிக் கொண்டு காளையார் கோயிலுக்கு சென்றார் (இந்தக் கரடி கறுத்தான் தான் பின்னாளில் வெள்ளையனின் பொருளுக்கு ஆசைப்பட்டு சின்ன மருது பாண்டியரை துப்பாக்கியால் சுட்டு காலை உடைத்து ஒரு மிருகம் போல வேட்டையாடி வெள்ளையனுக்கு காட்டிக் கொடுத்தவன்) அங்கு ஒரு வெள்ளை புறா பறந்து சென்றது சின்ன மருது பாண்டியர் தனது வளரியை எடுத்து பறந்து கொண்டிருந்த புறாவை நோக்கி வீசினார் குறிதவறாது புறா மீது வளரி தாக்கி புறா கீழே விழுந்து கொண்டிருந்தது அது தரையில் விழு முன் சுலைமான் புறாவை தனது கையில் பிடித்தார் அதை அருகில் இருந்து பார்த்த சின்ன மருது பாண்டியருக்கு ஒரே ஆச்சரியம் வளரியால் வீழ்த்திய புறாவை இடையிலேயே பிடிப்பவன் தனக்கு அடுத்து இந்த கரடி கறுத்தான் ஒருவனே ஆனால் இந்த வித்தை சுலைமானுக்கு எப்படித் தெரியும் என்று அப்பொழுது கறுத்தான் சுலைமானின் கையிலிருந்து புறாவைக் கவனித்தான் அதன் கால்களில் ஒரு துண்டுச் சீட்டு இருந்தது அதை உடனே சின்ன மருதுவும் நோக்கினார் அதன் எழுத்து உருது மொழியில் இருந்தது அதில் ஆற்காட்டான் எப்பொழுது காளையார் கோயிலுக்கு படையெடுத்து வரலாம் என சுலைமானின் யோசனையைக் கேட்டு எழுதி இருந்தது...!!!
இந்தச் செய்தியை படித்தமட்டில் சின்ன மருதுவுக்கு கோபம் எல்லை மீறிப் போய்விட்டது அடேய் ராஜதுரோகி உன்னை எனது அண்ணன் பெரிய மருது பாண்டியர் எப்படியெல்லாம் உயர்வாக நடத்துகிறார் அதற்கு நீ காட்டும் நன்றிக் கடனா இது...? என ஏக வசனத்தில் பேசிக் கொண்டிருந்தார் இது கண்டு சுலைமானுக்கு மிகுந்த மனவேதனை அடைந்தார் உடனே மன்னர் அவர்களே நான் சொல்லும் விளக்கத்தினை தயவுசெய்து செவிமடுத்துக் கேட்கவும் நான் ஒற்றனாய் வந்தது உண்மை ஆனால் இங்கு உங்களையும் பெரிய மன்னரையும் கண்டவுடன் அவர் ஆட்சியையும் அவர் நாட்டு மக்கள் மீது கொண்ட அன்பை பார்த்த பின்பு நான் வந்த வேலையை மறந்தேன் அத்தோடு ஆற்காட்டருக்கு எந்த பதிலும் அனுப்பவில்லை அதனால் தான் அவர்கள் எனது நோக்கம் அறிய புறா மூலம் தூதுவிட்டுள்ளனர் என்றார் சின்ன மருது பாண்டியர் எந்த விளக்கத்தையும் கேட்பதாக இல்லை உடனே அவருக்குத் தெரிந்த கத்திச் சண்டை, குத்துச் சண்டை, மல்யுத்தம் போன்ற வீர விளையாட்டில் எப்படியும் சுலைமானின் உயிரைப் போக்க வேண்டும் என முடிவு செய்தார் அதற்கு சுலைமானும் சளைக்காமல் சின்னமருதுவுக்கு சமமாக அவரும் ஈடு கொடுத்து சமாளித்தார் ஆனால் கடைசியில் சின்ன மருது பாண்டியர் அவர்களின் மர்ம அடி (தற்போது சொல்லுகிற குங்பூ) சுலைமானின் நெற்றியில் பட்டு அக்கணமே சுலைமானின் உயிர் பிரிந்தது...!!!
பட்டரை கண்மாய் கிராமத்தில் மாமன்னர் பெரிய மருது பாண்டியரால் கட்டப்பட்ட சுலைமான் சமாதி தற்போது அவர்களது வாரிசுதார்களின் வசம் உள்ளது அவர்கள் தான் பராமரிப்பு செய்கிறார்கள்...!!!
சிவகங்கையில் உள்ள பெரிய மருது பாண்டியருக்கு இந்த துயரமான செய்தி கிடைத்தவுடன் மிகவும் மன வேதனைப்பட்டார் மனம் மாறிய சுலைமானை சின்ன மருது கொன்றுவிட்டானே என அப்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலையில் அப்படி ஒரு செயலை சின்ன மருது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது போலும் தனது உண்மையான ஊழியன் என எண்ணப்பட்ட கரடிக் கறுத்தான் மருது பாண்டியரைக் காட்டிக் கொடுத்தான் ஆனால் ஒற்றனாய் வந்த சுலைமான மருதுவுக்கு அதரவாக இருந்துள்ளார் இது காலத்தின் கோலம் தானே பெரிய மருதுவின் மனம் அம்மாவீரனுக்கு அவரின் ஞாபகமாக பட்டரைக் கண்மாய் என்ற ஊரில் ஒரு பெரிய சமாதி ஒன்றைக் கட்டினார் அத்தோடு அவரின் சந்ததியினருக்கு பல நிலங்களை தானமாக கொடுத்தாராம் அந்த நினைவிடத்தில் இன்றும் விவசாய காலம் ஆரம்பிக்கும் பொழுதும் பின் அறுவடை நடைபெறும் காலத்திலும் சுபேதார் சுலைமானின் சமாதியில் காணிக்கை செலுத்தி அவரின் நினைவாக எல்லா சமூகத்தினரும் வணங்கிச் செல்வது அங்கு வழக்கமாக கொண்டுள்ளனர் இச்செய்தியை மறைந்த முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் அவர்கள் மருதுபாண்டியர் நினைவு நாளில் சொல்லக் கேட்டது...!!!
சரி இப்போது விஷயத்திற்கு வருவோம் வெள்ளத்தால் காளையார் கோவில் தெப்பக்குளம் நிறைந்து தண்ணீர் வெளியேறி சொர்ண காளீஸ்வரர் கோவில் உள்ளே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது கருவறையில் வீற்றிருக்கும் சிவலிங்கமும் மூழ்கும் நிலை வந்தது அந்த நேரத்தில் அங்கு ஒரு சித்தர் வந்து கோவிலை வெள்ளத்திலிருந்து காக்க ஒரு யோசனை கூறினார்...!!!
காளையார் கோவில் பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது உற்று கவனித்தால் தெரியும் சிறு சிறு இடுக்குகளை கல்லை வைத்து அடைத்து இருப்பார்கள் மேலும் தண்ணீர் செல்ல ஏதுவான சில வழிகளும் இருக்கும் அந்த சித்தரின் அறிவுறுத்தல்படி அந்த கற்களை தூக்கினால் காளையார் கோவிலில் இருந்து அருகில் உள்ள நாராயண யோகீஸ்வரர் ஜீவசமாதி அமைந்துள்ள மடத்திற்கு தண்ணீர் வெளியேறும் என்றார் அக்காலத்திலே தண்ணீர் செல்ல ஏதுவாக வடிவமைத்துள்ளனர் இந்த நாராயண யோகீஸ்வரர் யார் என்பதையும் அறிந்து கொள்வோம்...!!!
![]() |
தண்ணீர் வெளியேற ஏதுவாக காளையார் கோவிலில் அமைந்துள்ள வழிகள்...!!! |
![]() |
காளையார் கோவிலில் இருந்து வரும் தண்ணீர் நாராயண யோகீஸ்வரர் மடத்திற்கு வரும் பாதை...!!! |
காளையார் கோவிலில் 3 சிவலிங்கங்கள் உண்டு பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இவ்வூர் திருக்கானப்பேர் என அறியப்படுகிறது இவ்வூரில் 2000 ஆண்டு காலமாக சித்த நிலை அடைந்த ஒரு யோக புருஷர் ஜீவ சமாதியில் இருந்து வந்தார் அவர் பெயர் நாராயண யோகீஸ்வரர் ஆகும் 1801ம் ஆண்டு ஜூலை வாக்கில் சிவன் கோயில் அர்ச்சகர்கள் ஒரு அதிர்ச்சியான சம்பவத்தைக் கண்டனர் நள்ளீரவு அர்த்த ஜாம பூஜை முடிந்து கதவுகள் மூடப்படும் வெளியிலிருந்து ஒருவரும் கோவிலிக்குள் செல்ல இயலாது ஆனால் மறு நாள் காலையில் கதவுகள் திறந்ததும் சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் மாமிச துண்டுகள் மற்றும் எலும்புத் துண்டுகள் இறைந்து கிடக்கும் பல நாட்கள் இவ்வாறு நடக்கவே அர்ச்சகர்கள் ஆச்சர்யம் அதிர்ச்சி அடைந்து இந்த செய்தியை மருதரசர்களிடம் தெரிவித்து ஆகம விதிகளுக்குப் புறம்பான கருவறைக்குள் மாமிச பண்டங்கள் சிதறுதலைத் தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர் இதனை கேட்ட மருதரசர்கள் ஆச்சரியம் அடைந்து சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் அர்த்த ஜாம காலத்திற்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகளை ஆராய ஓர் ஓற்றரை நியமித்தார்...!!!
மாமன்னர் மருதிருவரின் ஆணைப்படி கருவறைக்குளிருந்த ஓர் ஓற்றர் கதவுகள் அடைக்கப்பட்ட பின்னும் கருவறைக்குள் ஒரு சுரங்கப்பாதை வழியே முதியவர் ஒருவர் வந்து சிவலிங்கத்திற்கு மாமிசம் கொண்டு பூஜை செய்வதை அவ்வொற்றர் கண்டு அப்பெரியவைக் கைது செய்து மருதிருவர் முன் நிறுத்தினர் மருதிருவர் அப்பெரியவரின் செயல் பற்றி வினவ அப்பெரியவர் தான் ஒரு சித்தபுருஷர் என்றும் கடந்த 2000 ஆண்டு காலமாக நிண பூஜை செய்து வருவதாகவும் இன்னிண பூஜை முறை சித்தர் சாத்திரப்படி சரியானது என்றும் பதிலளித்தார் அப்பெரியவரின் கூற்றில் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் அவர் ஒரு சித்தபுருஷர் என்பதை முறைப்படி நிறுவும்படி கூற அப்பெரியவர் அர்ச்சகர்களின் சவாலினை ஏற்றார்...!!!
![]() |
காளையார் கோவிலில் அமைந்துள்ள நாராயண யோகீஸ்வரர் மடம்...!!! |
அதன்படி அப்பெரியவர் மண்ணுக்குள் ஆழப்புதைக்கப்படுவார் அதன் பின்னர் அப்பெரியவர் வேறு எங்காவது தோன்ற வேண்டும் இதன்படி ஓர் ஒற்றர் ராமேஸ்வரம் அனுப்பப்பட்டார் அப்பெரியவர் மண்ணுக்குள் புதைக்கப்பட்டார் அப்பெரியவரின் கூற்றில் மீண்டும் மீண்டும் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் மருதிருவரைக் கொண்டு அப்பெரியவர் புதையுண்ட இடத்தினைத் தோண்டச் செய்தனர் அவ்விடம் தோண்டப்பட்டவுடன் அக்குழிக்குள் அப்பெரியவர் இன்னும் தவ நிலையிலிருந்ததையும் ராமேஸ்வரத்திற்கு அனுப்பட்ட ஒற்றனிடமிருந்து அப்பெரியவர் தற்சமயம் ராமேஸ்வரத்தில் தான் உள்ளார் என்ற செய்தி வந்ததையும் கண்டு திகைப்படைந்த அர்ச்சகர்கள் பின் வாங்கினர்...!!!
![]() |
தவ நிலை கலைந்த அப்பெரியவர் சித்தர் நாராயண யோகீஸ்வரர் தன் கூற்றினை நம்பாத அர்ச்சர்களை நம்பிய மருதிருவர்களுக்கு ஒரு சாபம் இட்டார் அதன்படி அன்றிலிருந்து 90 நாட்கள் கழித்து மருதிருவரின் முடிவு அமையும் என்பது யோகீஸ்வரரின் சாபமாகும் யோகீஸ்வரரின் சாபத்திற்குள்ளான மாமன்னர் மருது பாண்டியர்கள் மிகச்சரியாக 90 நாட்கள் கழித்து 24-10-1801 அதிகாலை ஆங்கிலேயர்களால் திருப்புத்தூரில் தூக்கு மேடையில் வீர மரணம் அடைந்தார்கள்...!!!
![]() |
துரோகத்தால் வீழ்த்தப்பட்டு மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் வீர மரணம் அடைந்த வரலாற்று படம்...!!! |
சித்தர் நாராயண யோகீஸ்வரரின் ஜீவ சமாதி சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னர் மருது பாண்டியர்களால் அமைக்கப்பட்டது இன்றும் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தினரால் காளீஸ்வரர் கோவிலில் நாராயண யோகீஸ்வரர் சித்தரின் ஜீவசமாதி பேணப்பட்டு வருகிறது மேலும் சொர்ண காளீஸ்வரர் பீடமும் நாராயண யோகீஸ்வரர் பீடமும் பூமியில் இருந்து சம உயர அளவில் அமைந்துள்ளது மற்றொரு சிறப்பாகும் காளையார் கோவிலில் இருந்து நாராயண யோகீஸ்வரர் மடத்திற்கு தண்ணீர் வந்தது இங்கும் காளையார் கோவிலில் உள்ளது போன்று தண்ணீர் வெளியேற ஒரு பாதை போன்று இருக்கும் அந்த பாதையின் வழியே அங்கிருந்து மாமன்னர் மருது பாண்டியர் நினைவாலயத்திற்கு பின்னால் அமைந்துள்ள பொன்னாத்தாள் ஊரணியில் (ஆத்தா ஊரணிக்கு) தண்ணீர் சென்று கலந்து அதன் பின்னர் ஊரணி முழுவதும் நிறைந்து அங்கிருந்து சருகணி ஆற்றில் சென்று அந்த தண்ணீர் கலந்தது அதன் பின்னரே காளையார் கோவிலில் நின்ற மொத்த நீரும் வடிந்தது...!!!
மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் தன் கண்ணை போல கட்டி காத்த காளையார் கோவிலுக்கு ஒரு பிரச்சினை என்றால் எந்த உருவத்திலும் வந்து அதனை சரி செய்வார்கள் என்பதற்கு இந்த நிகழ்ச்சியும் ஒரு சான்றாகும்...!!!
இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு
தகவல் உதவி : மாரி சேர்வை
புகைப்படம் உதவி : ஜெராம் அகமுடையார்
நாடக சக்கரவர்த்தி நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களும் அகமுடையார் இனத்தை சேர்ந்தவரே ஆகையால் அவரது வாழ்க்கை வரலாற்றை இதில் சேர்க்க முயற்சிக்கவும் www. tamilartiste.com இந்த வலைதள முகவரியில் நாடக சக்கரவர்த்தி நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பதிவிட்டுள்ளேன் அதனை தாங்கள் பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி வணக்கம்.
ReplyDelete