தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னனி தலைவர்களில் ஒருவரான மேலும் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களின் உரிமைக்காக அயராது உழைத்த அகமுடையார் வழித்தோன்றல் மணலி கந்தசாமி பிள்ளை
முன்பு தஞ்சாவூர் மாவட்டமான திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிற்றூர் தான் மணலி இந்த ஊரின் விவசாய குடும்பத்தை சேர்ந்த சிதம்பர தேவர் புனிதவதி அம்மையாருக்கு 12/03/1911 அன்று தலை மகனாகப் பிறந்தவர் தான் அகமுடையார் வழித்தோன்றல் மணலி கந்தசாமி பிற்காலத்தில் தமிழகம் அறிந்த மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவராக புகழ் பெற்று விளங்கினார்...!!!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் செயலாளராகவும் இரண்டு முறை சட்டப்பேரவை உறிப்பினராகவும் தேர்ந்துதெடுக்கப்பட்டவர் விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்தவர் நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு எதிராக பெரு நில முதலாளிகள் செய்த அடக்கு முறைகளை எதிர்த்து நின்றவர் விடுதலைப் போராட்டத்தில் அதன் வெற்றியில் அடித்தட்டு மக்களின் விடுதலைக்காக மேம்பாட்டுக்காகக் பாடுபட்டவர்களில் மணலி கந்தசாமியின் வாழ்வும் போராட்ட பணியும் குறிப்பிடத்தக்கது பள்ளிப் பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தின் பால் ஈர்க்கப்பட்டவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருந்த போது விடுதலை இயக்கத்தில் படிப்பை உதறித்தள்ளுமளவுக்கு அவரது ஈடுபாடு தீவிரத்தன்மை பெற்றது மிக விரைவில் திருத்துறைப்பூண்டி தாலுகா காங்கிரஸ் கமிட்டியிலும் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியிலும் முக்கியப் பொறுப்புகளை அவர் ஏற்றார்...!!!
காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகி பொது வாழ்வில் அடியெடுத்து வைத்து விடுதலை போராட்ட இயக்கத்தில் கலந்து கொண்டார் சமதர்ம கொள்கையால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்து அரசியல் பணிகளை தொடர்ந்தார் 1940 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் அமைப்பு ரீதியாக தொடங்கிய போது அந்த இயக்கத்தில் சேர்ந்து கீழ் தஞ்சை பகுதியில் கிராமம் கிராமமாக விவசாய சங்கம் அமைப்பதில் தீவிரமாக செயல்பட்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு அப்பகுதியில் வலு சேர்த்தார் 1948 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட பின்பு தலைமறைவாகி கட்சியின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டார் அந்த சமயத்தில் அதே காங்கிரஸ் அந்த காலத்திலே மணலி கந்தசாமி தலைக்கு பத்தாயிரம் ரூபாய் விலை வைத்தார்கள் அவர் குடும்பம் முழுவதும் கடும் அடக்குமுறைக்கு உள்ளானது அவரது வீடும் காவல் துறையினரால் நிரந்தரமாக முற்றுகைக்குள்ளானது சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது தேர்தல் சமயத்தில் தலைமறைவாக இருந்த வண்ணமே சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடி மாபெரும் சாதனை படைத்தார்...!!!
1962 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1967 வரை அப்பதவியில் நீடித்தார் மேலும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பொறுப்புகளில் இருந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கட்சியில் இருந்து விலகி தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார் அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கு எதிராக சாணிப்பாலும் சவுக்கடியும் என்ற கடுமையான தண்டனை இருந்தது அதனை எதிர்த்து போராடியதில் மணலி கந்தசாமி முக்கியமானவர் ஆவார்...!!!
அன்றைய நிலையில் விவசாயத் தொழிலாளரும் அவர்கள் வீட்டுப் பெண் மக்களும் பட்டபாடு சொல்லில் அடங்காது அப்போது தான் ‘நீயும் அடி திருப்பி அடி’ எனும் இடி முழக்கம் எழுந்தது சீனிவாசராவ், மணலி கந்தசாமி பிள்ளை போன்றோர் அந்த ‘அடி’மக்கள் பக்கம் நின்றனர் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்கிய தஞ்சை மாவட்ட விவசாயிகள் போராட்டம் தெளிவான உருவினைப் பெற்றது தஞ்சை மாவட்ட விவசாயிகளின் வீரமரணப் போராட்டம் அதன் விளைவாக மணலி கந்தசாமிக்கு போடப்பட்ட ‘வாய்ப்பூட்டு’ சட்டம் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் எதிரலைகளை எழுப்பியது சென்ற நூற்றாண்டின் நாற்பதுகளில் செங்கொடியின் கீழ் தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர்களைத் திரட்டி அவர்களைப் போராளிகளாகவும் தியாக சீலர்களாவும் உருவாக்கியதில் மணலி கந்தசாமிக்கு சிறப்பான இடம் உண்டு அவர் இறுதி வரை விவசாயத் தொழிலாளர்கள் பற்றியே சிந்தித்தார்...!!!
விவசாய தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காகக் கடுமையான அடக்கு முறைகளைப் பெரும் இழப்புகளை எதிர்கொண்டார் அவருடைய தலைக்கு விலை வைத்தது காங்கிரஸ் ஆட்சி அவர் தலைமையை ஏற்றுப் போராடிய மக்களை அவர்கள் படுத்தியபாடு கொஞ்ச நஞ்சமல்ல தலைமறைவு வாழ்க்கையை மணலி இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொண்டார் பல சோதனைகள் பல வேடங்கள் அவருடைய தந்தையார் இறந்த போது இறுதி சடங்குகளில் கலந்து கொள்ளவும் இயலாத நிலையில் அவருடைய அம்மாவுக்கு எழுதிய கடிதம் இலக்கிய நயம் மிக்கது அக்கடிதத்தில் கூட அவர் மாவீரன் சிவராமனை நினைவுக்கூர்கிறார் சாவுச் சடங்கு பற்றிப் பேசுகிறார் விடுதலை பெற்ற இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது தலைமறைவாக வாழ்ந்த மணலியின் தலைமையில் தஞ்சை மாவட்டத் திலிருந்து ஐந்து கம்யூனிஸ்டுகள் சென்னை சட்டமன்றத்துக்குத் தேர்தெடுக்கப்பட்டனர் மணலி கந்தசாமி பற்றி எண்ணும் போது வாட்டாக்குடி இரணியன், சாம்பவனோடை சிவராமன் ஜீவா, சீனிவாசராவ், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் கோட்டூர் ராஜு போன்றோரையும் நினைவு கூற தான் வேண்டும்...!!!
மணலி 1971 ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டாவது முறையாகத் தமிழகச் சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கபட்டார்
மணலி என்னும் போராளி தியாகங்களுக்குத் தயாராக இருந்தவர் தமிழ்நாட்டின் தமிழ் மக்களின் மாண்புகளைக் கற்று அறிந்து அவற்றைப் பெருமிதத்துடன் போற்றியவர் தமிழ்நாட்டுக்கே உரிய வீரவிளையாட்டுகள், அறிவியல் (மருத்துவம், இசை, நாட்டியம், சிற்பம், கட்டடக்கலை) ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர் சித்தமருத்துவத்தில் சிறந்த புலமை பெற்று இருந்தார் நோய்வாய்ப்பட்டபோது அதில் நம்பிக்கை வைத்து அந்த வழி மருத்துவத்தை ஏற்றார் சட்டமன்ற உறுப்பினராகத் தமது கடமைகளை அவர் சரியான வழியில் திறம்பட நிறைவேற்றினார் இந்திரா காந்தியின் அரசியலை அவர் விமர்சித்தார் மக்களாட்சி முறைக்கு எதிராக நடந்து வருவதைச் சட்டசபையில் மணலி கந்தசாமி எடுத்துரைத்தார் இருபது அம்ச திட்டம் பற்றியும், ஏகாதிபத்தியங்கள் இந்திய முதலாளிகளின் கூட்டுச்சுரண்டல் பற்றியும் அவர் தெளிவுபட பேசினார் சுரண்டிக் கொடுக்கும் அன்னிய நிறுவனங்களை அன்னிய மூலதனச் சுரண்டலை அம்பலப்படுத்திய அவர் அவற்றைத் தேசவுடைமை ஆக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்தினார்...!!!
தாழ்த்தப்பட்ட மற்றும் உழைக்கும் மக்களின் விடுதலை ஆரவார வெற்று முழக்கங்களால் சாத்தியமாகாது என்றார் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களின் உரிமைக்காக அயராது உழைத்த இவர் 28/09/1977 ல் மறைந்தார் மறைக்கபட்ட இவரின் வரலாற்று புகழ் மீட்கபட்டு இம்மண்ணில் நிலை பெற்று வாழட்டும் அவரது அவரது தியாகத்தை என்றும் நினைவு கூறுவோம்...!!!
Comments
Post a Comment