![]() |
தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை |
முதற் இடை கடை சங்கங்களின் அழிவிற்கு பின்னர் ஐந்தாம் தமிழ் சங்கத்தினை தஞ்சையில் உருவாக்கி தமிழை வளர்த்த அகமுடையார் வழித்தோன்றல் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை மேலும் முற்பட்டோர் பட்டியலில் இருந்த அகமுடையார் இனத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அதாவது BC பட்டியலில் இணைத்த உத்தம தலைவர் இவரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது...!!!
![]() |
பொதுவுடைமை போராளி வாட்டாக்குடி இரணியன் |
தமிழ்நாட்டின் நேதாஜி என்று அழைக்கப்படும் அகமுடையார் வழித்தோன்றல் பொதுவுடைமை போராளி வாட்டாக்குடி இரணியன் தனது வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களின் உரிமைக்காக அயராது உழைத்து உயிர் நீத்த மாவீரனின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் வாட்டாக்குடி இரணியன் நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது...!!!
![]() |
பெரியகோட்டை மன்னப்பதேவர் ஆலயம் |
சோழர்களின் ஆட்சிக்கு பிறகு மராட்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தில் தஞ்சை பகுதி அரசர்களின் கோட்டை கொத்தளங்களை காவல் காக்கும் தொழில் முறையை செய்து வந்து இன்று காவல் தெய்வமாக விளங்கும் அகமுடையார் வழித்தோன்றல் பெரியகோட்டை மன்னப்பதேவருக்கு அவரது 38 வகையறா இணைந்து கோவில் எழுப்பி முதன் முதலாக 2018 ஆம் ஆண்டு கன்னிப்பொங்கல் அன்று பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்...!!!
![]() |
மன்னப்பதேவர் குட்டை |
பெரியகோட்டை மன்னப்பதேவருக்கு சொந்தமான அவரது பெயரில் அமைந்துள்ள மன்னப்பதேவர் குட்டை இன்று இது ஊருக்கு பொதுவாக உள்ளது வருடம் ஒரு முறை குத்தகை விடப்படுகிறது அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் இணைந்து மன்னப்பங்குட்டையை பார்வையிட்ட போது...!!!
![]() |
மன்னப்பதேவர் ஆலயம் முன்பு அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் |
பெரியகோட்டை மன்னப்பதேவர் வாரிசுதார்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்த போது அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் மன்னப்பதேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கி வந்தோம் இனியும் தொடர்ந்து அகமுடையார் வழித்தோன்றல்கள் வரலாற்றை மீட்டெடுப்போம் அனைவரும் ஆதரவு தாருங்கள்...!!!
இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு
Comments
Post a Comment