Skip to main content

முருகனின் மறு அவதாரமான பாம்பன் சுவாமிகள்



பாம்பன் சுவாமிகள் 

முருகனின் மறு அவதாரமான பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் உதித்த பாம்பன் சுவாமிகள் தமிழ்நாட்டில் இராமேசுவரத்தில் அமைந்துள்ள பாம்பன் என்ற ஊரில் பிறந்து வடமொழி,தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார் திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார் தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும் சாத்திரங்களாலும் தொண்டாற்றினார் முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666 இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன இவரியற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது பாம்பன் சுவாமிகள் மே 30 1929 அன்று ஜீவசமாதி அடைந்தார் அவரது சமாதி கோவில் சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ளது...!!!

                   


வாழ்க்கைக் குறிப்பு:


பழந்தமிழ்க் குடியான அகம்படியர் குடியில் சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாக தோராயமாக 1850 ஆம் ஆண்டு இராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார் இவரது இயற்பெயர் அப்பாவு என்பதாகும் 1866 ஆம் ஆண்டு உள்ளூர் கிருத்துவப் பள்ளியில் பயின்றார் முனியாண்டிப் பிள்ளை என்பாரிடம் தமிழ் கற்றார் சிறுவயதில் இவருக்கு கந்தர் சஸ்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும் இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது சேது மாதவ அய்யர் என்பாரிடம் வடமொழியும் கற்கலானார் தமது 12,13 வயதிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்தார் இவருடைய முதல் பாடல் ஆசுகவியாக உருவாகிய "கங்கையைச் சடையில் பதித்து" எனத் தொடங்குவது...!!!

                 

அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட இவர் பின்னாளில் ''உபய அருணகிரிநாதர்'' என்ற பெயரும் பெற்றார் இவருக்கு அகவை 25 எட்டிய பொழுது மதுரை சின்னக்கண்ணு பிள்ளை மகளாகிய காளிமுத்தம்மாளை 1878 ஆம் ஆண்டு வைகாசித்திங்களில் இராமநாதபுரத்தில் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு முருகையபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாசபிள்ளை என மூன்று மகவுகள் பிறந்தனர் 1894 ஆம் ஆண்டு இராமநாதபுரத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் நிட்டையில் இறங்கினார் 35 நாட்கள் அருந்தவம் புரிந்த நிலையில் இவருக்கு முருகப் பெருமானே உபதேசம் நல்கியதாக இவரது சீடர்கள் நம்புகின்றனர் இவரது கனவுகளில் முருகன் வழிநடத்துவதாகவும் அவர்கள் நம்புகின்றனர் இவ்வாறான வழிகாட்டலில் அவர் சென்னை சென்றார் அங்கிருந்து பல தலங்களுக்கு சமயப் பயணங்கள் மேற்கொண்டார்...!!! 

அப்போது அவருடன் பழகிய திரு. வி. க இவ்வாறு கூறுகிறார் "குமரகுரு திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தபோது நாடோறும் மாலை வேளையில் கடற்கரை செல்வார் அவருடன் யானும் போவேன் அடிகள் வடமொழி உபநிடதக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவர் சாத்திர நுட்பங்களை எளிதில் வெளியிடுவர்"
திரு.வி.க வாழ்க்கை குறிப்பு பக்கம் 127 ல் இதனை காணலாம்...!!! 


1923ஆம் ஆண்டு திசம்பர் 27அன்று சென்னை தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது குதிரை வண்டிச்சக்கரம் இடது கணைக்கால் மீது ஏறியதால் கால் எலும்பு முறிந்து சுவாமிகள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் இந்த விபத்து நடந்த போது பாம்பன் சுவாமிகளின் வயது 73 ஆங்கிலேய மருத்துவர்களால் குணமடைவது கடினம் என்று கூறி கைவிடப்பட்டார் அங்கு தொடர்ந்து சண்முகக் கவசம் பாடிவந்தமையால் மயில் வாகனத்தில் வந்த முருகன் அருளால் கால் எலும்பு சேர்ந்ததால் அந்நாள் மயூர சேவன விழா என ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சிறப்பாக நடைபெறுகிறது...!!! 



சென்னை அரசு பொது மருத்துவமனையில் பாம்பன் சுவாமிகள் தங்கியிருந்த "மன்ரோ வார்டில்" பாம்பன் சுவாமிகள் நினைவாக அவரது  திருவுருவப்படம் மாட்டப்பட்டு மேலும் கல்வெட்டு வைக்கப்பட்டு நோயாளிகளால் தினமும் வழிபடப்படுகிறது அந்த படங்களை கீழே காணலாம்...!!!


சென்னை மருத்துவமனையில் அமைந்துள்ள பாம்பன் சுவாமிகள் திருஉருவ படம் 

மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் பாம்பன் சுவாமிகளை வணங்கும் காட்சி 


பாம்பன் சுவாமிகள் அருளிய குமார ஸ்தவம் மிகவும் பிரசித்தி பெற்றது தமிழ் நாட்டில் அமைந்துள்ள அனைத்து முருகன் கோவிலிலும் மற்றும் முக்கிய பிரசித்தி பெற்ற ஆலயங்களில் குமார ஸ்தவம் கல்வெட்டாகவோ அல்லது எந்திர தகடு வடிவிலோ வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது மேலும் மலேசியாவில் உள்ள சில ஆலயங்களிலும் கூட பாம்பன் சுவாமிகள் அருளிய குமார ஸ்தவம் கல்வெட்டாக அமைந்துள்ளது...!!!

மலேசியாவில் உள்ள கோவிலில் கல்வெட்டாக அமைந்துள்ள பாம்பன் சுவாமிகள் அருளிய குமார ஸ்தவம் 

சுவாமிகள் இயற்றிய பாடல்கள்:


*சண்முக கவசம்
*பஞ்சாமிருத வண்ணம்
*குமரகுருதாச சுவாமிகள் பாடல் -1266
*ஸ்ரீமத் குமார சுவாமியம் (குமார நாயகன் திருவிளையாடல்) - 1192
*திருவலங்கற்றிரட்டு(பல சந்தப் பரிமளம்) - 1135
*திருப்பா (திட்ப உரை) -1101
*காசியாத்திரை(வடநாட்டு யாத்திரை அனுபவம்) - 608
*சிறு நூற்றிரட்டு (சண்முக கவசம் முதலிய பத்து) - 258
*சீவயாதனா வியாசம் (சீவகாருண்யம்- புலால் மறுப்பு) - 235
*பரிபூரணானந்த போதம்
(சிவசூரியப் பிரகாசம் உரை) - 230
*செக்கர் வேள் செம்மாப்பு - 198
*செக்கர் வேள் இறுமாப்பு - 64
*தகராலய ரகசியம் (சதானந்த சாகர
உரை)- 117
*குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி -100
*சேந்தன் செந்தமிழ்
(வடமொழி கலவாத் தனித் தமிழ்)- 50
*குமாரஸ்தவம் 44
*தென்னாட்டுத் திருத்தலதரிசனம்
(கட்டளைக் கலித்துறை) 35
*பத்துப் பிரபந்தம் (சித்திரக் கவிகள்) 30
*ஆனந்தக்களிப்பு 30
*சமாதான சங்கீதம் 1
*சண்முக சகச்சிர நாமார்ச்சனை 2

மொத்த பாடல்கள் 6666

1926 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 அன்று உயில் எழுதி மகா தேஜோ மண்டலசபை அமைப்பு நடைமுறையை ஏற்படுத்தினார் மே 30 1929 அன்று காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் ஜீவசமாதி அடைந்தார்கள் மேலும் பாம்பன் சுவாமிகள் திருமேனி அலங்கரிக்கப்பட்ட புஷ்பவிமானத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மே 31 1929 திருவான்மியூரில் ஜீவசமாதி அமைக்கப்பட்டது அந்த ஜீவசமாதி கோவில் படங்கள் மேலும் பல்வேறு இடங்களில் பாம்பன் சுவாமிகள் நினைவாக அமைந்துள்ள திருஉருவ சிலைகளை  கீழே காணலாம்...!!!

திருவான்மியூரில் அமைந்துள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி 








பாம்பன் சுவாமிகள் அருளிய சன்யாசியின் இலக்கணம்


பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி அடைந்த இந்த நாளில் அகமுடையார் வழித்தோன்றல் பாம்பன் சுவாமிகள் வரலாற்றை அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்...!!!

Comments

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்

கி.பி 1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்  ----------------------------------------------------- பழந்தமிழர்களின் போர் ஆயுதமான வளரி ஆயுதத்தை 217 ஆண்டுகளுக்கு முன்பு போர்களங்களில் பயன்படுத்திய பெருமைக்குரியவர்கள் நமது சிவகங்கை சீமையின் மன்னர்கள் மருது பாண்டியர்கள் என்பது நாம் அறிந்த செய்தி ஆனால் அகமுடையார்கள் கி.பி 1500 களிலேயே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது...!!! ஆம் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வடகரை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கி.பி 1500 ஆண்டைச் சார்ந்த நடுகல் மூலம் இப்பகுதியில் அகமுடையார் சகோதர்கள் இருவர் வளரி ஆயுதத்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது இதுவே வளரி பற்றி தமிழகத்தில் கிடைத்துள்ள ஒரே பழமையான சிற்பம் ஆகும் இந்த நடுகல்லில் காணப்படுபவர்கள் திரு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களின் முன்னோர்களே ஆவார்கள் இந்நடுகல் பற்றியச் செய்தியை இவர் தனது “வடகரை-ஒர் வம்சத்தின் வரலாறு” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்...!!! மேலும் குறிப்பிட்ட இந்த சகோதரர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி ஆயுதம் மேற்குறிப்பிட்டவர்களின் ப

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தின மா