தமிழ் மொழியை செம்மொழியாக்க முதன் முதலில் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்ற தீர்மானம்
![]() |
1919 ஆம் ஆண்டு தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்கள் கையெழுத்திட்டு முறைப்படி அரசுக்கு அனுப்பிய கடிதம்...!!! |
கருணாநிதி அவர்கள் 2010 ஆம் ஆண்டு தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவதற்கு சுமார் 91 ஆண்டுகளுக்கு முன்பே போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்களால் தமிழை செம்மொழியாக்க வேண்டுமென முதன் முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது...!!!
கரந்தை தமிழ் சங்கத்தின் சார்பில் 24.5.1919 மற்றும் 25.5.1919 ஆகிய இரு நாட்களில் கொண்டாடப்பட்ட ஏழு மற்றும் எட்டாம் ஆண்டு விழாவின் போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ''தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழியே'' என்னும் தீர்மானம் இயற்றப்பெற்றது தமிழ் மொழியானது தொன்மையும், சீர்மையும், செம்மையும் வாய்ந்து விளங்குகின்ற ஓர் உயர்தனிச் செம்மொழியென உறுதிபட பலராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதால் சென்னை பல்கலைக் கழகத்தார் தமிழ் என்பது உயர் தனிச் செம்மொழி என்பதை ஒப்புக்கொண்டு இத்தென்னாட்டுப் பல்கலைக் கழகத்தில் அதற்கு முறைப்படி முதலிடமும் உரிமைகளும் கொடுக்க வேண்டுமென்ற தீர்மானம் இயற்றப்பட்டது இந்த தீர்மானமானது கரந்தை தமிழ் சங்க உறுப்பினர்களான திரு டி.எஸ்.சபாபதி பிள்ளை அவர்களால் முன்மொழியப்பட்டு திரு எம்.அப்பாவு முதலியார் அவர்களால் வழி மொழியப் பட்டது...!!!
இத்தீர்மானமே தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென்று அமைப்பு ரீதியாக இயற்றப்பெற்ற முதல் தீர்மானமாகும் இத்தீர்மானமானது சென்னைப் பல்கலைக் கழகத் தலைவர் அவர்களுக்கும் துணைத் தலைவர் அவர்களுக்கும் சென்னை ஆட்சி அமைச்சர் அவர்களுக்கும் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை கையெழுத்திட்டு முறைப்படி அனுப்பப்பட்டது...!!!
ஆதார தரவுகள் உதவி :
அண்ணன் கரந்தை ஜெயக்குமார்
இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு
Comments
Post a Comment