ஐந்தாம் தமிழ் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த அகமுடையார் வழித்தோன்றல் தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் 77 வது ஜெயந்தி விழா முதன் முறையாக அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் மூலம் தஞ்சாவூர் கரந்தையில் கொண்டாடப்பட்டது உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் படத்திறப்பு விழாவும் நடைபெற்றது...!!!
ஆங்கிலேயரின் ஆதிக்கம் இருந்த காலமான 1919 லேயே கரந்தை தமிழ் சங்கத்தின் மூலமாக தமிழ் மொழியை செம்மொழியாக்க வேண்டுமென முதன் முதலில் தீர்மானம் நிறைவேற்றியவர் உமா மகேசுவரன் பிள்ளை ஆவார் மேலும் அகமுடையார் பேரினத்தின் நலன் கருதி அகமுடையார்கென முதல் முறையாக 1926 ஆம் ஆண்டு சென்னை மாகாண அகமுடையார் மகாசன சங்கம் உருவாக முக்கிய காரணகர்த்தா ஆவார் இந்த வரலாற்றை நினைவு கூறும் வகையில் சுவரொட்டி தயார் செய்து அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் தஞ்சை பகுதியில் ஒட்டப்பட்டது...!!!
மே 7 உமா மகேசுவரன் பிள்ளை பிறந்த தினத்தன்று தஞ்சாவூர் கரந்தை தமிழ் சங்கத்தில் அமைந்துள்ள ஐயாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!!
உமா மகேசுவரன் பிள்ளை உதித்த நல்ல நாளில் அவரது கொள்கைகளை நினைவு கூர்ந்து குழந்தைகள் பயன்பெறும் வகையில் மதுரையில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் இனிப்புகள் மற்றும் நோட்டு புத்தகம் பென்சில் பேனா போன்றவை வழங்கப்பட்டது...!!!
உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் திருஉருவ படம் ஐயா கரத்தை ராமநாதன் அவர்களின் கைகளால் திறந்து வைக்கப்பட்டு மாலை அணிவித்து பூ தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மதுரை, ராமநாதபுரம், பழநி, வேதாரண்யம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் தஞ்சாவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வந்து உறவுகள் கலந்து கொண்டனர்...!!!
அதனை தொடர்ந்து விழாவுக்கு வந்த உறவுகளுக்கு நீர், மோர், தண்ணீர் பழம் போன்றவை வழங்கப்பட்டது பின்னர் நமது அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது...!!!
தற்பொழுது ஐயா தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் திருஉருவ படமானது கரந்தை தமிழ் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவும் அகமுடையார் இனத்திற்காகவும் உழைத்து உயிர் நீத்த உத்தம தலைவரை இனி வரும் காலங்களில் நினைவு கூர்ந்து வணங்குவாம்...!!!
Comments
Post a Comment