![]() |
அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் வெளியிடும் காத்தியப்பத் தேவரின் திருஉருவ படம்...!!! |
அகமுடையார் குல வள்ளல் காத்தியப்ப தேவர் அவர்களின் நினைவு தினமான இன்று அவரது புதிய முழு உருவ திருஉருவ படத்தை நமது அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்...!!!
காத்தியப்பத் தேவர் வரலாறு :
குடகு மலையில் தோன்றி சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களை வளம் கொழிக்க செய்து தன் பயணத்தை நினைவு செய்ய நினைக்கும் காவிரி தாயின் கடைமடையான தஞ்சாவூர் அருகே மன்னார்குடி வட்டம் திருமக்கோட்டைக்கு 16 முறை சென்று வந்தால் காசிக்கு ஒரு முறை சென்றதற்கு சமம் என்பார்கள் திருமக்கோட்டைக்கு கிழக்கில் சோழபாண்டிக்கு தெற்கில் அமைந்துள்ள சிற்றூர் கடுக்காகாடு ஆகும் அக்கிராமத்தில் வாழ்ந்து வந்த சுப்பையா தேவரின் அருமை மகனாகப் பிறந்த கந்தசாமி தேவர் அவர்கள் செல்லத்தம்மாளை மணந்து வியாபார நிமித்தமாக சைகோனில் குடியேறி செல்வசீமானாக வாழ்ந்து வந்தனர்...!!!
வாழ்க்கை சுருக்கம் :
கந்தசாமி தேவருக்கும் செல்லத்தம்மாளுக்கும் 1879 ஆம் ஆண்டு சைகோன் நகரின் ருவிஸ்டார்ட் என்னுமிடத்தில் உள்ள கந்தவிலாஸ் மாளிகையில் செல்வசீமானாக பிறந்தவர் தான் அகமுடையார் வழித்தோன்றல் கொடை வள்ளல் காத்தியப்பத் தேவர் ஆவார் நமது இனத்தில் பிறந்த வையகம் போன்ற வாழ்வாங்கு வாழ்ந்தவர் தான் காத்தியப்பத் தேவர் இவர் அலமேலு அம்மாள் அவர்களை மணந்து செல்வ செழிப்பாக சைகோனில் வாழ்ந்து வந்தார்கள் அவர்கள் அந்த அண்டை நாட்டில் எப்படி செல்வ செழிப்பாக வாழ்ந்தார்கள் என்பதை ஒரு நிகழ்வின் மூலம் கூற விழைகிறேன்...!!!
அப்போது இந்தியாவின் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் இந்தியாவில் இருந்து சைகோனுக்கு அரசு சிறப்பு விருந்தினராக சென்றார் இந்திய பிரதமரை வரவேற்கும் சிறப்பு வரவேற்பு குழுவில் இடம் பெற்று முன்னின்று வரவேற்ற இரு இந்தியர்களில் ஒருவர் வீரத்திருமகன் பட்டுக்கோட்டை நாடிமுத்து பிள்ளை மற்றொருவர் காத்தியப்பத் தேவர் ஆவார் அப்படியென்றால் நமது கதாநாயகன் சைகோனில் எப்படியொரு சிறப்பாக வாழ்ந்தார் என்பதை இதை விட விளக்கி கூற தேவையில்லை...!!!
சமுதாய பணிகள் :
காத்தியப்பத் தேவர் அவர்கள் நமது சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைகள் ஏராளம் உதாரணம் ஒரு சிலவற்றை கூறுகிறேன் 1926 ல் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் மதுரையில் நடந்தது உலக முக்குலத்தோர் மாநாடு இம்மாநாட்டை பார்த்தவர்கள் விழிகள் வியப்பில் விரியும் அளவிற்கு பிரம்மாண்டமாக நடத்தி காட்டினார்கள் காத்தியப்பத் தேவர் அதோடு மட்டும் நின்று விடாமல் மாநாட்டின் மொத்த செலவையும் தானே ஏற்றுக் கொண்டார் காத்தியப்பத் தேவர்...!!!
1958ல் துவங்கிய அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்திற்கு சென்னையில் ஒரு இடம் வேண்டும் என்று அப்போதைய சங்க தலைவர் திரு. சுப்ரமணிய பிள்ளை அவர்கள் காத்தியப்பத் தேவரிடம் ஆலோசனை கேட்டார்களாம் அதற்கு காத்தியப்பத் தேவர் அவர்கள் அடுத்தவர்களிடம் கேட்டு வசூல் செய்து இடம் வாங்குவதை காட்டிலும் தானே முன்னுதாரணமாக நின்று வழங்கி வழிகாட்ட வேண்டும் என்று நினைத்தார் அச்சமயத்தில் காத்தியப்பத் தேவரின் மகனான கந்தப்பாவுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது பேரன் பிறந்த சந்தோஷத்தில் நெற்மணிகள் காய்ந்து குலுங்கும் தன்னுடைய சொந்த நன்செய் பூமியில் 7 ஏக்கர் நிலத்தை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்திற்கு 19/4/1959 அன்று பட்டுக்கோட்டையில் நடந்த அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்தின் முதலாவது மாநாட்டில் அளித்தார் அவர் அளித்த அந்த 7 ஏக்கர் நிலத்தை விற்று அந்த தொகையில் வாங்கியது தான் தற்போது சென்னை எக்மோர் அருகில் அமைந்துள்ள ''அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் மற்றும் அறக்கட்டளை'' இருக்கும் அலுவலக கட்டிடம் ஆகும் இன்றும் காத்தியப்பத் தேவரின் புகழை நிலைநாட்டி நிற்கிறது இந்த கட்டிடம்...!!!
கல்வி பணிகள் :
கல்வி வளர்ச்சிக்கும் பலப்பல தொண்டாற்றினார் மன்னார்குடியில் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கீழராஜ வீதியில் அமைந்துள்ள தனது வீடான கந்தவிலாஸிற்கு அருகில் ஒரு வாசக சாலை கட்டி கொடுத்தார் சோழபாண்டிய பள்ளிக்கூடத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து பள்ளி கல்வி வளர்ச்சிக்காக பெரும் பொருளுதவிகள் செய்தார்...!!!
![]() |
மன்னார்குடி கீழ ராஜவீதியில் அமைந்துள்ள காத்தியப்பத் தேவரின் கந்த விலாஸ் இல்லம்...!!! |
பொதுப்பணிகள் :
அக்காலத்தில் திருமக்கோட்டையில் பெண்களுக்கு பிரசவ வலி என்றால் அழைத்து கொண்டு மன்னார்குடி ஓட வேண்டும் ஒழுங்கில்லா கப்பி சாலைகளாலும் நேரத்திற்கு கிடைக்காத பேருந்து மற்றும் வாகனத்தினால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டது இதனை கண்டு வேதனை அடைந்து உயிரிழப்புகளை தடுக்க காத்தியப்பத் தேவர் அவர்கள் திருமக்கோட்டையில் மகப்பேறு மருத்துவமனை ஒன்றை கட்டினார்...!!!
தனது சொந்த ஊரிலுள்ள குலதெய்வம் செல்லியம்மனுக்கு கோவில் கட்டி குடமுழுக்கு விழாவும் செய்தார் மேலும் மடப்பள்ளி, போர், பித்தளை பாத்திரம், வெள்ளி பாத்திரம் போன்றவற்றையும் வழங்கினார்...!!!
![]() |
காத்தியப்பத் தேவர் அவர்களால் திருப்பணி செய்யப்பட்ட செல்லியம்மன் கோவில்...!!! |
வள்ளல் காத்தியப்பத் தேவர் மேலும் திருமக்கோட்டை பொண்ணியம்மன் கோவிலை கட்டினார் அங்குள்ள குளக்கரைக்கு படிக்கட்டுகள் கட்டி கொடுத்தார் மேலும் திருமக்கோட்டை பாசன வசதிக்காக தன்னுடைய சொந்த இடத்தில் இரு புறமும் வாய்க்கால் விட்டு கொடுத்தார்...!!!
திருமக்கோட்டை பிடாரி குளம் படித்துரரை, மாட்டு ஆஸ்பத்திரி கட்டிய செலவுக்காக சில குழி நிலம் குட்டைகள் போன்றவற்றை தானமாக அளித்துள்ளார் தற்போது மாட்டு ஆஸ்பத்திரி சந்தை பேட்டைக்கு போய்விட்டது மருத்துவமனை இடம் காலியாக இருந்ததால் சொசைட்டியை விரிவு படுத்த வேண்டும் என்று கிராமத்தினர் காத்தியப்பத் தேவரின் வாரிசுதார்களிடம் கேட்க இவர்களும் இடத்தை தானமாக அளித்தனர் ஆனால் காத்தியப்பத் தேவரின் பெயர் உள்ள கல்வெட்டை மட்டும் எடுத்து கட்டிடத்தில் வைத்து கட்டுங்கள் என்று கூறியுள்ளனர் சரி என்று ஒப்புக்கொண்ட கிராமத்தினர் இரண்டு வருடங்கள் ஆகியும் இன்றளவும் கல்வெட்டை அந்த கட்டிடத்தில் வைக்கவில்லை தற்போது அந்த கல்வெட்டு காத்தியப்பத் தேவரின் வீட்டில் உள்ளது...!!!
![]() |
காத்தியப்பத் தேவரின் மருத்துவ விடுதி தர்மம் பற்றிய கல்வெட்டு...!!! |
மன்னார்குடியில் மூன்றாம் தெருவில் சாரதா சமாதி என்ற பெயரில் கட்டிடம் வாங்கி அளித்துள்ளனர் அதில் ஏழை பிராமண குழந்தைகள் இன்றும் தங்கி படித்து வருகிறார்கள்...!!!
இறுதிக்காலம் :
![]() |
திருமக்கோட்டையில் அமைந்துள்ள வள்ளல் காத்தியப்பத் தேவரின் நினைவிடம்...!!! |
![]() |
வள்ளல் காத்தியப்பத் தேவரின் பேரனான ஆறுமுகம் தேவர் |
காத்தியப்பத் தேவர் அவர்கள் தந்தை பெரியாரின் கழகத்திற்கு 10 ஏக்கர் இடத்தை தானமாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது தனது பூதவுடல் தீயிலிடுவதை விரும்பாத காத்தியப்பத் தேவர் தனது உயிர் பிரிந்த பின்னர் தனது உடலை அடக்கம் செய்ய வேண்டிய இடம் தனது உடலை வைக்க வேண்டிய ரோஸ்வுட் பெட்டி மற்றும் தனது சமாதியை எப்படி கட்ட வேண்டும் போன்ற வழிமுறைகளை எல்லாம் காத்தியப்பத் தேவர் அவர்களே தயார் செய்து வைத்துவிட்டார் இவருடைய இறுதி சடங்கில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளத்தில் திராவிட இயக்கத்தின் தலைவர் பெரியாரும் கலந்து கொண்டார் அவரது பூதவுடல் மறைந்தாலும் அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்...!!!
சமுதாயப்பணி, கல்விப்பணி, பொதுப்பணி என்று அனைத்திற்கும் தனது சொத்துகளை அள்ளி அள்ளி தந்த வள்ளல் காத்தியப்பத் தேவர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி அகமுடையார் வரலாறு மீட்புகுழு மூலம் காத்தியப்பத் தேவரின் பேரனான திருமக்கோட்டை ஆறுமுகம் தேவர் மற்றும் திருமக்கோட்டை ஊர் பெரியவர்களை அழைத்து தஞ்சாவூர் அருகே மன்னார்குடி வட்டம் திருமக்கோட்டையில் அமைந்துள்ள காத்தியப்பத் தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது....!!!
![]() |
திருமக்கோட்டை பெரியவர் கோ.வீ.ஜெயராமன் மற்றும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள்...!!! |
![]() |
காத்தியப்பத் தேவரின் நினைவிடத்தில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள்...!!! |
திரைகடல் பல ஓடி...!!!
திரவியம் பல தேடி...!!!
அலைகடல் மீண்டு...!!!
அகம்பல போற்ற வாழ்ந்து...!!!
அகமுடையார் சங்கம் வாழ...!!!
அள்ளி தந்த சிங்கமகன்...!!!
காத்தியப்பத் தேவர் புகழ்...!!!
என்றென்றும் வாழியவே...!!!
![]() |
நன்றி : இந்த தகவலை நமக்கு அளித்த காத்தியப்பத் தேவரின் பேரனான ஆறுமுகம் தேவர் அவர்களுக்கும் அகச்சுடர் இதழுக்கும் நன்றி...!!!
இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு
மிக்க மகிழ்ச்சி அகமுடையார் வரலாற்று மீட்புக்குழுவினர்க்கு❤️ அகமுடையார என்பதில் பெருமை அடைகிறேன் ❤️
ReplyDelete