Skip to main content

அகமுடையார் வழித்தோன்றல் நாட்குறிப்பேடு


பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் நூற்றுக்கணக்கான வழித்தோன்றல்கள் உள்ளனர் அதனால் இவர்களின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினம் மேலும் அவர்களின் வாழ்வில் முக்கியமான நாட்களை நினைவு கூற மறந்துவிடுகிறோம் எனவே தற்போது அகமுடையார் வரலாறு மீட்புகுழுவின் முயற்சியால் அகமுடையார் வழித்தோன்றல்களின் நாட்குறிப்பேடு வெளியிடப்படுகிறது...!!!

ஜனவரி

3. பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் அவர்களின் நினைவு தினம்

10. பெரியவர் சீனிவாச பிள்ளை அவர்களின் பிறந்த தினம்

15. உலகில் தோன்றிய முதல் அகமுடையார் சிவபெருமானின் காவலரான நந்தி தேவருக்கு உகந்த மாட்டு பொங்கல் 

17. தேசிய தலைவர் ஏ.ஆர். பெருமாள் தேவர் அவர்களின் பிறந்த தினம்

16. சோழ தேசத்தின் அகம்படி காவலரான தஞ்சாவூர் பெரியகோட்டை மன்னப்பதேவர் திருவிழா 

தைப்பூசம் திருநாள் : அம்மணி அம்மாள் ஜீவமுக்தி அடைந்த தினம்

22. சாத்தப்பன் சேர்வை ஞானியாரால் சிவகங்கை சீமை உருவான தினம் 22/1/1730

23. தியாகி சுந்தர்ராஜன் சேர்வை அவர்களால் சிவகங்கை சீமையில் உலகில் முதன் முறையாக நேதாஜி சிலை நிறுவிய தினம் 23/1/1946

பிப்ரவரி 

02. பாகல்பட்டி ஜமீன்தார் பா.வே.மாணிக்க நாயக்கர் அவர்களின் பிறந்த தினம் 2/2/1871

9. தமிழ் நாடக தந்தை பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் பிறந்த தினம்

11. துரைசாமி உட்பட 73 போராளிகள் நாடு கடத்தப்பட்ட தினம்

18. நீதிக்கட்சியை உருவாக்கிய நடேசன் முதலியார் அவர்களின் நினைவு தினம்

25. வீர மங்கை ஜானகி தேவர் அவர்களின் பிறந்த தினம் 25/2/1925

26. சுயமரியாதை வழக்கறிஞர் இராமச்சந்திரன் சேர்வை அவர்களின் நினைவு தினம் 26/2/1933

மார்ச் 

வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை மண்டகபடி திருவிழா

3. மாவீரர் மாயாண்டி சேர்வை அவர்களின் பிறந்த தினம்

3. மாவீரர் ஜெயராமன் முதலியார் அவர்களின் பிறந்த தினம் 21/3/1921

9. இரத்தின சபாபதி முதலியார் அவர்களின் பிறந்த தினம்

12. மாவீரர் மணலி கந்தசாமி பிள்ளை அவர்களின் பிறந்த தினம் 12/3/1911

21. சுதந்திர போராட்ட தியாகி ஜெயராமன் முதலியார் பிறந்த தினம்

31. கொடை வள்ளல் பச்சையப்ப முதலியாரின் நினைவு தினம் 31/3/1794

ஏப்ரல் 

20. மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் பிறந்த தினம்

21. தேசிய தலைவர் ஏ.ஆர். பெருமாள் தேவர் அவர்களின் நினைவு தினம் 21/4/1998

மே

03. மாவீரர் சாம்பவனோடை சிவராமன் அவர்களின் நினைவு தினம் 3/5/1950

04. மாவீரர் மலேயா கணபதி அவர்களின் நினைவு தினம் 4/5/1949

05. மாவீரர் வாட்டாக்குடி இரணியன் அவர்களின் நினைவு தினம் 5/5/1950

05. தென்னிந்திய இரயில்வே தொழிலாளர் சங்கம் தொடங்கிய தினம் தலைவர் தியாகி பரமசிவம் பிள்ளை

05. பி யூ சின்னப்பா பிள்ளை அவர்களின் பிறந்த தினம்

07. தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் பிறந்த தினம் 7/5/1883

09. தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் நினைவு தினம் 9/5/1941

09. வீரமங்கை ஜானகி தேவர் அவர்களின் நினைவு தினம் 9/5/2014

17. தேசிய தலைவர் ஏ.ஆர். பெருமாள் தேவர் அவர்களின் பிறந்த தினம் 17/5/1925

26. சிவகங்கை சீமையின் வமீது போர் தொடுக்க ஆங்கிலேயர்கள் படை புறப்பட்ட தினம்

26. அகமுடையார் வள்ளல் காத்தியப்பத் தேவர் அவர்களின் நினைவு தினம் 26/5/1963

28. வரலாற்று ஆய்வாளர் மீ. மனோகரன் அவர்களின் பிறந்த தினம்

30. முருகனின் மறு அவதாரமான பாம்பன் சுவாமிகள் மறைந்த தினம் 30/5/1929

ஜீன் 

2. சிவகங்கை சீமை மீது போர் தொடுக்க ஆங்கிலேயர்கள் சிவகங்கை வந்தடைந்த தினம்

16. ஜம்பு தீவு பிரகடனம்

20. சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் எல்லை போர் தொடங்கிய தினம்

24. வலிவலம் தேசிகர் அவர்களின் நினைவு தினம் 24/6/1984

28. சாண்டோ சின்னப்பா தேவர் அவர்களின் பிறந்த தினம் 

ஜீலை 

3. ஜனாதிபதி SR நாதன் அவர்களின் பிறந்த தினம்

8. மிராசுதார் பெரியவர் எம். ஆர். எஸ். சீனிவாச பிள்ளை அவர்களின் நினைவு தினம்

18. எத்திராஜ் முதலியார் அவர்களின் பிறந்த தினம் 18/7/1890

25. மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் ராக்கெட் குண்டுகளை பயன்படுத்திய தினம்

26. சித்தர் நாராயண யோகீஸ்வரர் மருது பாண்டியர்களுக்கு சாபம் அளித்த தினம் 

ஆகஸ்ட் 

18. எத்திராஜ் முதலியார் அவர்களின் நினைவு தினம் 18/8/1960

22. முன்னாள் ஜனாதிபதி எஸ் ஆர் நாதன் நினைவு தினம் 

24. அரசவைக் கவிஞரான நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களின் நினைவு தினம்

30. வலிவலம் தேசிகர் அவர்களின் பிறந்த தினம் 30/8/1904

செப்டம்பர் 

ஆவணி ரேவதி நட்சத்திரம் பதினென் சித்தர்களுள் ஒருவர் சுந்தரானந்தர் உதித்த தினம்


3. தமிழ் போராளி பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் நினைவு தினம்

5. பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் அவர்களின் பிறந்த தினம்

8. சிங்கத்தையே செல்ல பிராணியாக வளர்த்த வீர தமிழன் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்களின் நினைவு தினம்

16. சுயமரியாதை வழக்கறிஞர் இராமச்சந்திரன் சேர்வை அவர்களின் பிறந்த தினம் 16/9/1884

23. பி யூ சின்னப்பா பிள்ளை அவர்களின் நினைவு தினம் 

26. அகமுடையார் வள்ளல் காத்தியப்பத் தேவர் அவர்களின் பிறந்த தினம் 26/9/1879

28. மாவீரர் மணலி கந்தசாமி பிள்ளை அவர்களின் நினைவு தினம் 28/9/1977

அக்டோபர் 

16. கருப்பம்புலம் வெங்கடாசல தேவர் அவர்களின் நினைவு தினம்

24. மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவேந்தல் தினம்

24. சுதந்திர போராட்ட தியாகி சடகோபாலத் தேவர் அவர்களின் நினைவு தினம்

24. ஏ கே வேலன் பிள்ளை அவர்களின் பிறந்த தினம்

26. பட்டுக்கோட்டை நாடிமுத்து பிள்ளை அவர்களின் நினைவு தினம் 26/10/1954

27. மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜை

29. பட்டுக்கோட்டை நாடிமுத்து பிள்ளை அவர்களின் பிறந்த தினம் 29/10/1902

நவம்பர் 

6. தியாகி பரமசிவம் பிள்ளை அவர்களின் நினைவு தினம்

15. மாவீரர் வாட்டாக்குடி இரணியன் அவர்களின் பிறந்த தினம் 15/11/1920

17. தமிழ் போராளி பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் பிறந்த தினம்

டிசம்பர் 

08. மாவீரர் ஜெயராமன் முதலியார் அவர்களின் நினைவு தினம் 8/12/2007

15. சிவகங்கை சீமையின் மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் பிறந்த தினம்

25. பாகல்பட்டி ஜமீன்தார் பா.வே.மாணிக்க நாயக்கர் அவர்களின் நினைவு தினம் 25/12/1931

Comments

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தி...

1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்

கி.பி 1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்  ----------------------------------------------------- பழந்தமிழர்களின் போர் ஆயுதமான வளரி ஆயுதத்தை 217 ஆண்டுகளுக்கு முன்பு போர்களங்களில் பயன்படுத்திய பெருமைக்குரியவர்கள் நமது சிவகங்கை சீமையின் மன்னர்கள் மருது பாண்டியர்கள் என்பது நாம் அறிந்த செய்தி ஆனால் அகமுடையார்கள் கி.பி 1500 களிலேயே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது...!!! ஆம் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வடகரை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கி.பி 1500 ஆண்டைச் சார்ந்த நடுகல் மூலம் இப்பகுதியில் அகமுடையார் சகோதர்கள் இருவர் வளரி ஆயுதத்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது இதுவே வளரி பற்றி தமிழகத்தில் கிடைத்துள்ள ஒரே பழமையான சிற்பம் ஆகும் இந்த நடுகல்லில் காணப்படுபவர்கள் திரு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களின் முன்னோர்களே ஆவார்கள் இந்நடுகல் பற்றியச் செய்தியை இவர் தனது “வடகரை-ஒர் வம்சத்தின் வரலாறு” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்...!!! மேலும் குறிப்பிட்ட இந்த சகோதரர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி ஆயுதம் மேற்குறிப்பிட்டவர்களி...