அகமுடையார் வழித்தோன்றல் தேசியத்தலைவர் ஐயா ஏ ஆர் பெருமாள் தேவர் அவர்கள் அருப்புக்கோட்டை ராமுத்தேவர் - பாக்கியம் அம்மாள் ஆகியோரின் புதல்வராக 17.1.1921 ஆம் ஆண்டு பிறந்தார்...!!!
பெருமாள் தேவர் அவர்கள் ''அகில இந்திய பார்வர்ட் ப்ளாக்'' கட்சியின் தேசிய தலைவராக இருந்தவர் இன்றைக்கு எத்தனையோ நூல்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றி வந்திருக்கலாம் ஆனால் அதற்கெல்லாம் விதை போட்டவர் அகமுடையார் வழித்தோன்றல் ஏ.ஆர்.பெருமாள் தேவர் ஆவார் அவர் எழுதிய ”முடிசூடா மன்னர் முத்துராமலிங்கத்தேவர்” என்ற நூலை படிக்காதவர் பெரும்பாலும் இருக்க முடியாது முதன் முறையாக பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வரலாற்றை முழுமையாக எழுதியவர் இவரே தனது 12 வயதில் இருந்து தேவரோடு பயனித்தவர் மேலும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முதல் சிஷ்யன் ஆவார் அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தின் காரியாபட்டி தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருமுறை வென்றவர்...!!!
1937 சட்டபேரவை தேர்தல் சமயம் முத்துராமலிங்க தேவர் அருப்புக்கோட்டை அகம்படியர் மஹாலில் தங்கியிருந்த நேரம் செய்தி கேட்டு மக்கள் கூடி விட்டனர் பின்னர் தேவர் வெளியே வந்து மக்களை வணங்கி விட்டு காரில் ஏறி சென்றார் அக்காலத்தில் தலைவர்களின் பெயரை கூறி விட்டு ''ஜே'' என்று கூறுவது வழக்கம் கூட்டத்தில் ஒரு சிறுவன் மட்டும் இவ்வாறு கூறிக்கொண்டு தேவரின் காரை பின் தொடர்ந்து வர சற்று தூரம் சென்று காரை நிறுத்தி விட்டு அச்சிறுவனை காரில் ஏற்றி யாரப்பா நீ என கேட்க நான் அருப்புக்கோட்டை ராமு தேவரின் புதல்வர் பெருமாள் என தேவரிடம் கூறினான் அந்த சிறுவன் அந்த சிறுவனே பின்னாளில் (அருப்புக்கோட்டை ராமுத்தேவர் பெருமாள்) எ.ஆர்.பெருமாள் என அழைக்கப்பட்டார்...!!!
பசும்பொன் தேவர் தனது சொத்துக்களை 16 பங்குகளாக பிரித்து உயில் எழுதினார் அதில் முதல் பங்கு மற்றும் பெரும் பங்கை தனது சிஷ்யனான ஏ ஆர் பெருமாள் தேவர் அவர்களுக்கு வழங்கினார் அந்த அளவுக்கு தேவரின் நம்பிக்கைக்குரியவராய் விழங்கினார் அச்சொத்துகளை அவர் தேவர் பெயரில் இயங்கும் தரும ஸ்தாபனம் ஒன்றை நிறுவி இனைத்து விட்டார் மேலும் தேவர் அவர்கள் தனது சொத்தை 16 பேருக்கு பிரித்தளித்ததில் 12 பேர் அந்த சொத்துக்களை ஸ்தாபனத்தில் இனைத்து விட்டனர் முத்துராமலிங்க தேவரின் மறைவிற்கு பின் கட்சியை வலுப்படுத்த பாண்டி மண்டலத்தின் குக்கிராமங்கள் வரை சென்று பசும்பொன் தேவரின் புகழ் பரப்பினார்...!!!
முத்துராமலிங்க தேவர் பெயரில் மூன்று கல்லூரிகள் அமைத்திடவும் கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் முதுகுளத்தூர் கலவரத்தினால் பாதிக்க பட்டவர்களை விடுதலை செய்யவும் மூக்கையா தேவரோடு இனைந்து பணியாற்றினார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களோடு இனக்கமாக இருந்த காரணத்தினால் தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக அறிவிக்கவும் சிவகங்கை மாவட்டத்திற்கு தேவர் பெயரை சூட்டவும் காரணமாக இருந்தவர்...!!!
அருப்புக்கோட்டை பெரிய தெரு பதினெட்டு தலைக்கட்டு அகம்படியர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அகம்படியர் மஹாலில் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியவர் மேலும் தேவரின் வெண்கலச்சிலையை மஹாலில் திறந்து வைத்தார் இன்றைய நிலையில் தமிழ்நாட்டிலே புல்லட் புரூப் பாதுகாப்புடன் காணப்படும் ஒரே தேவர் சிலை ஏ ஆர் பெருமாள் தேவர் நிறுவிய சிலை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது பசும்பொன் தேவர் பெயரில் திருமண மண்டபம் ஒன்றினையும் கட்டினார்...!!!
பசும்பொன் தேவர் அவர்களுடன் பணியாற்றியதில் தனது வாழ்வில் எந்த ஒரு இடத்திலும் தனது ஜாதி அடையாளத்தை வெளிப்படுத்தாத ஒருவர் ஏ.ஆர் பெருமாள் தேவர் ஆவார் வாழ்வின் இறுதி வரை பசும்பொன் தேவர் புகழ் பாடும் சிஷ்யனாகவும் அனைவரிடமும் அன்புகாட்டி எளிமையை விரும்பினார் பெருமாள் தேவர் அவர்களுக்கு முன்று மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர் உடல் நலக்குறைவின் காரணமாக 21.4.1998 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்...!!!
இத்தகைய பெரும் புகழ் கொண்ட தேசிய தலைவர் பெருமாள் தேவரின் வரலாற்றை எமது அகமுடையார் இனமும் மறந்தது மேலும் இன்று வரை திட்டமிட்டு அவரது புகழ் மறைக்கபப்டுகிறது...!!!
Comments
Post a Comment