சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே மருது சீமையான சிவகங்கை சீமையின் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக புதுப்புது போர் உத்திகளை கையாண்டனர் அது அப்போதைக்கு அவர்களால் கையாளப்பட்ட அதிரடி உத்திகள் அவற்றில் சிலவற்றை இப்பதிவில் காண்போம்...!!!
வீடுகளுக்கு தீ வைத்தல்
மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் அறிவுறுத்தல்படி சுதந்திர போரில் தாங்கள் வாழ்ந்த இருப்பிடத்திற்கு தாங்களே தீயிட்டு கொண்டனர் சிவகங்கை மக்கள் ஒக்கூரில் வீடுகளுக்கு தீவைத்த ஆங்கிலேயர் அரண்மனை சிறுவயலை நோக்கி வேகமாக வந்தனர் அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருந்தது நீயென்ன தீ வைப்பது...? அதை நாங்களே செய்துவிட்டோம் என்று சொல்கின்ற முறையில் இருந்தது சிறுவயல் மக்களின் செயல் அங்கு வந்து அதை கண்ட ஆங்கிலேய அதிகாரி கர்னல் வேல்ஸ் (இயற்கையும் போர்க்களையும் சிறுவயல் போராளிகளுக்கு) எவ்வளவோ வசதி அளித்திருந்தும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் தங்கள் வீடுகளுக்கு தாங்களே தீவைத்துவிட்டு காட்டிற்குள் விரைந்தனர் இவ்வாறு எரிந்து கொண்டிருக்கும் நகரத்தை நாங்கள் எடுத்துக்கொள்ள விட்டுச்சென்றுள்ளனர் என்று கர்னல் வேல்ஸ் ஏமாற்றத்துடன் குறிப்பிடுகிறார் ஆனால் எரிகின்ற வீட்டில் பிடிங்கியது லாபம் என்பார்களே அதுபோல ஆங்கிலேயருக்கு ஏதாவது ஆதாயம் இருந்ததா என்று கேட்டால் இல்லை சிறுவயலில் எரிந்து நாசமாகி கொண்டிருக்கும் எந்த வீட்டிலும் பிடுங்குவதற்கு ஒன்றுமில்லை காரணம் என்னவென்றால் கர்னல் வேல்ஸின் கூற்றுப்படி சிறுவயலில் சுழன்றடிக்கும் காற்றின் வேகத்தால் சிறுவயல் மொத்தமும் தீக்கிறையாகிவிட்டது முடிவில் வெள்ளையனுக்கு மிஞ்சியது கொள்ளிக்கட்டை தான்...!!!
நீரில் நின்று போர்
வைகை ஆற்றங்கரை போரின் போது மருது சீமை மக்கள் நீரில் நின்று போரிடும் உத்தியை கையாண்டனர் ஆங்கிலேயர் எதிர்பாராத அந்த சாகச செயல் பற்றி கர்னல் வேல்ஸ் கூறுகிறார் இவ்வாறு (மருது சீமை போராளிகளின் ஈட்டி ஏந்திய வீரர் குழுவொன்று எங்களிடமிருந்து ஐம்பது காலடிகள் வைக்கும் தூரத்திலிருந்து அங்கு யாரோ உத்தரவிட பகுதி பகுதியாக குண்டுமாறி பொழியத் தொடங்கியது இந்த சமயத்தில் எதிரிகள் நின்றது தரையில் இல்லை தொடையளவு தண்ணீரில் நின்று போரிட்டனர்) மேலும் சாகத்துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் அளவு என்பார்கள் அது போல நாட்டுக்காக உயிரை துறக்க துணிந்த சிவகங்கை போராளிகளுக்கு தொடையளவு தண்ணீர் ஒரு தடையாக தெரியவில்லை...!!!
பல்லாயிரம் வீரர்கள்
இதே வைகை ஆற்றங்கரை போரின் போது ஆங்கிலேயரின் படை பெரும் எண்ணிக்கையில் திருப்புவனம் நோக்கி வருவதாக மருதரசர்களிடம் தெரிவிக்கப்பட்டது மருதரசர்கள் தங்கள் படையும் மிகுதியாக இருப்பதாக காட்டிக்கொள்ள திருப்புவனம் கோட்டையின் மேல் ஆயிரம் வீரர்கள் நள்ளிரவில் ஏறி நின்றனர் இரு கைகளிலும் தீப்பந்தங்களை வைத்துக்கொண்டு அவற்றை சுழற்றி பல்லாயிரக்கணக்கான வீரர்கள் கோட்டை மீது நடப்பது போல பாவனை காட்டினர் ஆயிரம் வீரர்கள் பல்லாயிரம் வீரர்களாக தெரிந்தார்கள்...!!!
கண்மாயை உடைத்தல்
மேற்கண்டது போல புதிய புதிய உத்திகள் ஒன்றா இரண்டா...? இதோ இன்னொன்று வைகை ஆற்றங்கரை போரின் போது மானாமதுரை தாண்டிய பின்னர் புதுக்கோட்டையில் இருந்து நீர் நிரம்பி இருந்த கண்மாயை மாமன்னர் மருது பாண்டியர்களின் படையினர் திடீரென உடைத்தனர் அதன் விளைவு நீர் வருவது தெரியாது இருந்த ஆங்கிலேயர் வசமிருந்த வெடிமருந்து கருமருந்து பீரங்கி குண்டுகள் எல்லாம் நனைந்து பாழாயின இதனால் வைகை ஆற்றங்கரை விட்டு ஆங்கிலேயர் வேகவேகமாய் இராமநாதபுரம் நோக்கி நடையைகட்ட வேண்டியதாயிற்று...!!!
ஆதாரம் : மருது பாண்டிய மன்னர்கள்
Comments
Post a Comment