![]() |
பா. வே. மாணிக்க நாயக்கர் (அகமுடையார்) |
மறைக்கபட்ட மாமனிதர் பாகல்பட்டி ஜமீன்தார் அகமுடையார் வழித்தோன்றல் பா.வே.மாணிக்க நாயக்கர் இவர் சேலம் மாவட்டம் பாகல் பட்டியில் வேங்கடசாமி நாயக்கருக்கும் முத்தம்மையாருக்கும் 02.02.1871 ஆம் நாள் இரண்டாவது மகனாகப் பிறந்தார் அகமுடையார் பேரினத்தில் நாயக்கர் பட்டம் பெற்ற இவர் பள்ளியில் படிக்கும் பொழுதே கவிபாடும் ஆற்றல் கொண்டவராக விளங்கினார் சேலம் கல்லூரியில் சேர்ந்து இளங்கலையில் எப்.ஏ பட்டம் பெற்றார் அவருடைய பொறியியல் நுட்ப ஆர்வத்தை அறிந்த கல்லூரி முதல்வர் சென்னை பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு உதவினார் அங்கு முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுப் பல பரிசுகளும் தங்க பதக்கமும் பெற்றார் சென்னை அரசாங்கத்தில் நீலகிரி உதவிப் பொறியாளராக 1896 ஆம் ஆண்டு பணியேற்றார்...!!!
செயற்பொறியாளராக 1906 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்றார் இங்கிலாந்துக்கு 1912 ஆம் ஆண்டு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார் வலுவாக்கிய கான்கிரீட் பற்றியும் ஆய்வு செய்தார் மேலும் ''கால்குலோகிராப்'' என்ற கருவியை உருவாக்கி அதை பொறியியல் உலகத்துக்கு அளித்து சாதனை புரிந்தார் தயாகம் திரும்பிய பின்னர் 1915 ஆம் ஆண்டு சென்னை பொறியியல் கல்லூரியில் சிவில் இஞ்சினியரிங் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார் கல்லூரி மாணவர்களுக்கு பொறியியல் கல்வியைத் திறம்பட அளித்தார் பொதுப்பணித் துறையில் 1919 ஆம் ஆண்டு செயற்பொறியாளராகப் பதவி ஏற்றார் அத்துறையில் கண்காணிப்புப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்றவர் பின்னர் 1927 ஆம் ஆண்டு அரசுப்பணியில் இருந்து ஓய்வுப் பெற்றார் பொறியியலைத் தொழிலாகக் கொண்டிருந்த போதும் விலங்கியல், வானவியல்,நிலவியல்,மெய்ப் பொருளியல் முதலிய துறைகளிலும் சிறப்புடன் விளங்கினார் தமிழ், தெலுங்கு, வடமொழி ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார் மேலும் தையற்கலை, தச்சுக்கலை, ஓவியக்கலை, இசை முதலிய பல கலைகளிலும் பயிற்சி உடையவராகவும் விளங்கியதால் இவரை ஒர் ''பல்கலைக் கழகம்'' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்...!!!
![]() |
பா.வே. மாணிக்க நாயக்கர் பற்றி அன்பரசு என்பவர் வெளியிட்ட புத்தகம் |
பொறியியல் துறையில் அறுபதுக்கும் மேற்ப்பட்ட கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி நிகழ்த்தி மாபெரும் சாதனையாளர் ஆனார் அவரது ஆய்வுகள் அனைத்தும் தனித்தன்மை உடைய தமிழ் மொழியின் சிறப்பு பற்றியும் ஆய்வுகள் பல செய்துள்ளார் தமிழ் ஒலியைக் கொண்டு உலகின் எந்த மொழியையும் உச்சரிக்க இயலும் என்பது இவரது ஆய்வு முடிவு இந்த முடிவு அறிஞர்கள் பலரின் பாராட்டையும் பெற்றது மேலும் மேட்டூர் அணை உருவாவதற்கு ஏற்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து திட்டம் வகுத்து தந்தவர் பா.வே மாணிக்க நாயக்கர் ஆவார்..!!!
![]() |
தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை இயற்றிய தீர்மானம் |
தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்கள் தமிழை செம்மொழியாக்க வேண்டுமென 1919 ஆம் ஆண்டு முதன் முதலில் தீர்மானம் நிறைவேற்றிய போது அதில் மாணிக்க நாயக்கர் பற்றி மேலும் சில கருத்துக்களையும் கூறியிருந்தார் அதாவது தமிழ் மொழியின் நலத்தை பேணுவதற்கும் அதற்குரிய பதவியையும் இடத்தையும் தேடிக்கொடுத்ததற்கும் தமிழ் மொழிக்கென உண்மை தொண்டாற்றி வரும் திரு பா.வே. மாணிக்க நாயக்கர் அவர்களை சென்னை பல்கலைக்கழக துணைவருள் ஒருவராக்க வேண்டுமென்று அக்கழக தலைவர் அவர்களையும் சென்னை ஆட்சியாளர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்...!!!
(இது திரு சாமிநாத பிள்ளை M.A,B.L அவர்களால் முன்மொழியப்பட்டு திரு V.A சகராய பிள்ளை B.A,B.L அவர்களால் வழி மொழியப்பட்டது)
![]() |
மாணிக்க நாயக்கர் சமாதி |
இவர் எழுதிய நூல்கள்
தமிழ் ஒலியிலக்கணம்
கம்பன் புளுகும் வால்மீகியின் வாய்மையும்
தமிழ் எழுத்துக்களின் நுண்மை விளக்கம்
தமிழலகைத் தொடர்
தமிழ் மறை விளக்கம்
இவர் தமிழ்படுத்திய சொற்கள்
புள்ளி அல்லது குற்று - point
ஒன்றுவிட்ட, இடைவிட்ட - alternate
அடுத்த - adjucent
இடைவெட்டு - intersection
குவியம் - focus
நிலத்தின் அளவைக் கணிப்பது வடிவ அளவை நூல் - geometry
கதிர் - ray
இயக்கம் - movement
தொகுப்பு - summary
நீர்மட்டம் - spirit level
விளம்பு தாள் - tracing paper
குறியளவை - algebra
தமிழில் அறிவியல் கலைச் சொல்லாக்கத்திற்கு முதலில் வித்திட்டடவர் பா.வே. மாணிக்க நாயக்கராவார் ஜஸ்டிஸ் இதழில் 1926 முதல் ஆங்கிலக் கலைச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச் சொற்களை உருவாக்கி வெளியிட்டார் தமிழ் மொழியின் சொற்களே தமிழ் மக்களின் நாகரிகத்தை விளக்குவதற்குச் சான்றுகளாக அமைந்துள்ளன என்பதைத் தனது ஆய்வு மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் சான்றாக 'கள்' என்னும சொல்லை நோக்கினால் தமிழர்கள்ஆப்பொருளின் மீது எத்தகைய வெறுப்புக் கொண்டிருந்தனர் என்பதை இப்படி விளக்கினார் "கள்'' என்ற சொல் திருடு என்று பொருள் தருகிறது கள்ளைக் குடிப்பதனால் ஒருவன் தன்னையே திருடிக் கொள்கிறான் அதாவது தன் உணர்வையும் அறிவையும் இழக்கிறான் எனவே தான் இத்தகைய திருட்டு நிலைக்குக் காரணமான அப்பொருளைக் 'கள்' எனத் தமிழர்கள் சுட்டினர் எனக் குறிப்பிட்டுள்ள விளக்கம் வியக்கத்தக்கது ஆகும் நாயக்கர் தமிழ்ப் பேரகராதியின் தயாரிப்பிலும் வளர்ச்சியிலும் அக்கறைக் காட்டினார் தமிழ் அல்லாத பிறதுறையில் இருந்து கொண்டு தமிழ்ப் பணி செய்து உயர்ந்த பெருமைக்குரியவர் பா.வே. மாணிக்க நாயக்கர் ஆவார்...!!!
பேரறிஞர் பா.வே மாணிக்க நாயக்கர் 25.12.1931 ஆம் நாள் காலமானார் அவரது புகழ் தமிழ் மொழி உள்ள வரை நிலைத்து நிற்கும் நிற்கும் பா.வே.மாணிக்க நாயக்கர் அவர்கள் நாயக்கர் பட்டப்பெயர் கொண்டுள்ள அகமுடையார் மேலும் சேலம் மாவட்டத்தில் வாழும் அகமுடையார்கள் நாயக்கர் பட்டம் கொண்டு வாழ்கின்றனர்...!!!
அருமையான பதிவு உறவே
ReplyDeleteபா.வே மாணிக்க நாயக்கர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் எனக் கேள்விப்பட்டேன் ! அவர் தமிழரா ? தகுந்த சான்று தந்தால் மகிழ்வேன் !
ReplyDelete