![]() |
கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார் |
தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தின மாலை பச்சையப்பர் மீது இயற்றியுள்ளார் இன்னும் பல்வேறு பாடல்களும் பலரால் இயற்றபட்டுள்ளது...!!!
இளமைக்காலம்
கொடை வள்ளல்
பள்ளியில் படிக்க வேண்டிய பருவத்திலேயே பச்சையப்ப முதலியார் வாழ்க்கைக்கு வழிதேடும் முயற்சியில் ஈடுபட்டார் மொத்த வணிகர்களுக்குச் சரக்கு வாங்கியும் விற்றுக் கொடுக்கும் முகவராக பணியாற்றினார் இத்தொழில் இவர் மொழி பெயர்ப்பாளர் ஆவதற்கு வாய்ப்பளித்தது தம் பதினாறாம் வயதிலேயே கொடை வள்ளலானார் அறப்பணிகளுக்குக் கொடை வழங்கலாயினர் குடும்பப் புரவலர் நாராயணப் பிள்ளையின் செல்வாக்கால் நிக்கலசு என்ற ஏற்றுமதி வணிகருக்கு மொழி பெயர்ப்பாளராக பணிப்பொறுப்பினைப் பெற்றார் சில ஆண்டுகளில் சிறிது செல்வம் திரண்டது தம் தமக்கையின் மகளான அய்யம்மாளைத் திருமணம் செய்து கொண்டார்...!!!
வணிகம்
1776 இல் செங்கல்பட்டு மாவட்டத்தில் வரிவசூல் செய்தல் நவாப்பின் அலுவலாளர்களுக்குச் சம்பளத்தை ஒப்படைப்பு செய்தல் முதலிய ஒப்பந்த தொழில் மற்றும் ஆங்கில நிறுவனத்தாருக்கு வரவேண்டிய தானிய வரியை (மேல்வாரங்கள்) எனும் தானிய வரியை பணமாக்கித் தரும் குத்தகைத்தொழில், ஆங்கில வணிகர்கட்கும், கருநாடக நவாப்பு அதிகாரிகளுக்கும் இடையேயும் முகவராக இருந்து கொடுக்கல் வாங்கல் செய்தல் முதலிய தொழில்களை மேற்கொண்டார் பச்சையப்ப முதலியார் வரிவசூல் செயலில் இவர் ஆங்கிலேயர்களின் நன்மதிப்பைப் பெற்றார் குறுகிய காலத்திலேயே சென்னை மாகாணத்தின் சிறந்த மொழி பெயர்ப்பாளராக திகழ்ந்தார்...!!!
அரசுப்பணி
தனது 28 ஆவது வயதில் ஆங்கிலேய நிறுவனத்தில் முக்கியப்பதவி வகித்த இராபர்ட் யோசப்பு சலிவன் என்பவரின் முதன்மை மொழி பெயர்ப்பாளராக ஆங்கில அரசுப்பணி ஏற்றார் அதனாலும் பேரும் பெருஞ்செல்வமும் பெற்றார் சலிவனின் அரசியல் அலுவலங்களில் பேருதவிப் புரிந்தார் தஞ்சாவூர் அரசருக்கு மொழிபெயர்ப்பாளராகவும் வங்கியராகவும் இருந்து சென்னை மாகாணத்திற்குச் சரியான முறையில் கப்பம் கட்ட துணைப்புரிந்தார் 1784 இல் தஞ்சாவூரில் குடியேறினார் தஞ்சை அரசருக்குச் சென்னை அரசாங்கத்தாரால் தொல்லை நேராமல் காத்தார் அதனால் அரசர் இவரை திவான் போன்று போற்றி பச்சையப்ப முதலியாருக்கு உரிமைகளையும் சிறப்புகளையும் செய்தார்...!!!
சொத்துகள்
பபச்சையப்பன் மகளிர் கல்லூரியில் அமைந்துள்ள வெண்கல சிலை |
பச்சையப்ப முதலியார் ஈட்டிய பொருள்கள் சொத்துகள் எத்தனை இலகரங்கள் என வரையறுத்து அறியப்படவில்லை இவரே தம் காலத்தில் அறப்பணிகளுக்கு ஆயிரக்கணக்கில் செலவிட்டார் இவர் இறந்தபின் இவர் சுற்றத்தாரும் பேராசைச்காரர் சிலரும் செய்த மோசடிகள் வழக்குகள் முதலியவற்றால் அளவற்ற சொத்துக்கள் மறைந்தன இவர் காலத்திற்கு பின் இவர் பொருளெனக் கண்டறியப்பட்ட தொகை வட்டி முதலுடன் கூடிய தொகை சுமார் எட்டு இலட்சங்கள் ஆகும் இத்தொகையை மூலப்பொருளாகக் கொண்டு பச்சையப்பன் அறநிலைக் காப்பாளர்கள் அறப்பணிகளையும், கல்விப் பணிகளையும் நடத்தி தற்போது வருகின்றனர்...!!!
கல்விப்பணிகள்
![]() |
பச்சையப்பன் கல்லூரியில் அமைந்துள்ள திருஉருவ சிலை |
கல்வி நிதிக்கென ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு காஞ்சீபுரம், சிதம்பரம், சென்னை இம்மூன்று இடங்களில் மூன்று உயர்நிலைப் பள்ளிகளும் சென்னையில் கல்லூரி ஒன்றும், காஞ்சியில் ஒரு கல்லூரியும் தொடங்கப்பட்டு அவைகள் இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன...!!!
இறைப்பணிகள்
![]() |
சிதம்பரம் நடராஜர் கோயிலின் கிழக்கு கோபுர நுழைவு வாயிலில் அமைந்துள்ள பச்சையப்ப முதலியாரின் திருஉருவ சிலை |
பச்சையப்ப முதலியார் மிகுந்த கடவுள் பற்றுடையவர். இவர் செய்த அறப்பணிகள் பல காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேசுவரர் கோயில் உள்ள திருமண மண்டபம் கட்டினார் சிதம்பரத்தில் தேர் செய்து ஆனித் திருமஞ்சனம் என்ற புதிய விழாவைத் தோற்றுவித்தார் காசியிலும் தென்னாட்டில் சென்னை, கும்பகோணம், திருவையாறு, தஞ்சாவூர், மதுரை முதலிய இடங்களிலுள்ள திருக்கோயில்களுக்கும், பலவகையான கட்டளைகளைத் திட்டஞ்செய்து வைத்தார் பல இடங்களில் அன்னசத்திரங்கள் கட்டினார் சில இடங்களில் அக்கிரகாரம் கட்டினார் இவ்வாறாக இவர் பலப்பல அறப்பணிகளையும் கணக்கில் அடங்கா கொடைகளையும் தன் வாழ்நாளில் செய்தார்...!!!
இறுதிக்காலம்
1794 பிப்ரவரியில் இவரின் உடல்நிலை மிகவும் சீரற்றது எனவே கும்பகோணத்தில் கட்டத்தொடங்கிய சத்திர வேலையை விரைந்து முடிக்க அங்கு சென்றார் கும்பகோணத்தில் மார்ச் மாதம் 22 நாளில் தம் உயிலை எழுதி முடித்தார் திருவையாற்றில் இறக்க விரும்பி அங்கு விரைந்தார் அதன்படி மார்ச்சு மாதம் 31 ஆம் நாளில் மரணமடைந்தார் இவர் இறப்பிற்கு அடுத்து பழனியாயியும் அடுத்தாற்போல் இவர்களுடைய மகளும் இறந்தனர்...!!!
நன்றாக உள்ளது
ReplyDeleteMIKAVUM NANRI ENTHA THAGAVALKU
ReplyDeleteSupr
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDeleteUseful information
ReplyDelete