இந்திய சுதந்திர வரலாற்றில் முதல் முறையாக மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து ராக்கெட் குண்டுகளை பயன்படுத்திய தினம் இன்று...!!!
-------------------------------------------------------------------
ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திர போரில் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் புதுப்புது போர் யுக்திகளை கையாண்டனர் அவற்றில் மிக முக்கியமானது இந்த ராக்கெட் தாக்குதல் ஆகும் 25.07.1801 அன்று நடத்த போரில் மருது பாண்டியர்கள் முதல் முறையாக ராக்கெட் குண்டுகளை பயன்படுத்தினார்கள்...!!!
ஆங்கிலேய அதிகாரி கர்னல் வேல்ஸ் எழுதிய குறிப்புகளில் சிவகங்கை சீமை போரின் போது ராக்கெட் தாக்குதல் தொடக்கம் பற்றி குறிப்பிடுகையில் "நம் பகைவர் (மருது பாண்டியர்) இன்று (25.07.1801) முதன் முதலாக ராக்கெட்டுகளை பயன்படுத்தினார்கள் என்று எழுதியுள்ளார் மேலும் மருது பாண்டியர்கள் தொடுத்த ராக்கெட் குண்டுகளால் வெள்ளையனின் போர் படையில் ஒரு சிப்பாயின் உடல் நெருப்பில் எரிந்தது வெள்ளையர்களால் அவனது உடலில் இருந்து ராக்கெட்டை பிரித்து எடுக்கவும் முடியவில்லை நெருப்பை அணைக்கவும் முடியவில்லை என்பதையும் கர்னல் வேல்ஸ் தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்...!!!
புதுமையான பல போர் உத்திகளை அன்றே நமது தமிழ் மண்ணில் முதல் முறையாக கையாண்ட ஆற்றல் மிக்க வீர தமிழர்கள் நமது முப்பாட்டன் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் ஆவார்கள்...!!!
ஆதாரம் : மீ.மனோகரன் அவர்களின் மருது பாண்டிய மன்னர்கள் புத்தகம்
வரலாறு படிப்போம்...!
வரலாறு படைப்போம்...!
மருது பாண்டியர் என்பதற்கு ஆதாரம் இல்லை இல்லாத ஒன்றை இருப்பதாக திரிக்க வேண்டாம் மருது சகோதரர்கள் என்று சொல்லுங்கள் அல்லது மருதிருவர் அல்லது சின்ன மருது பெரிய மருது என்றுசொல்லுங்கள்
ReplyDeleteநீங்கள் தவறான கருத்தை பதிவிட வேண்டாம்
Delete