போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் சுதந்திர போராட்ட தியாகி சடகோபாலத் தேவர்
--------------------------------------------------------------------
அன்பும் அறமும் கொண்ட போர்க்குடி அகமுடையார் பேரினத்தில் டெல்டா மண்டலத்தில் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் முத்தையா தேவர் மற்றும் நாகம்மாள் தம்பதியினருக்கு நான்காவது மகனாக 1907 ஆம் ஆண்டு நமது சடகோபால தேவர் அவர்கள் பிறந்தார் இவரது இளமைக்காலத்தில் ஆயக்காரன்புலத்தில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள ஆய்மூர் என்ற கிராமத்திற்கு சென்றார்...!!!
ஆய்மூர் வானம் பார்த்த பூமி எனவே மழையை நம்பிதான் விவசாயம் செய்வார்கள் இந்த நிலையை மாற்ற நினைத்த சடகோபால தேவர் பம்புசெட் முறையை கொண்டுவர அமைச்சர் பக்தவச்சலத்திடம் முறையிட்டு எந்திரப்பாசன முறை மூலம் விவசாயம் செய்யும் முறையை கிராமத்திற்கு கொண்டு வந்தார் ஆய்மூர் கிராமத்திற்கு சாலை வசதி கிடையாது எனவே அப்போதைய ஆட்சியர் பழனியப்பன் முன்னிலையில் கிராம மக்களை கூட்டி முறையிட்டு அருந்தவம்புலத்திலிருந்து ஆய்மூர் வரை சாலை வசதியை ஏற்படுத்தினார்...!!!
புரோகிதர்கள் வைத்து திருமணங்கள் நடைபெற்றால் தான் அவர்கள் வாழ்க்கை சுகமாக இருக்கும் என்று இருந்த அக்காலத்திலே தலைவர்களை வைத்து திருமணம் செய்யும் சுயமரியாதை திருமண முறையை அவர்கள் திருமணத்திலேயே கடைபிடித்து அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றார்கள் மேலும் ஆய்மூரில் இருந்த அரசு நடுநிலைப்பள்ளியை அரசு உயர்நிலைப்பள்ளியாக மாற்ற கடுமையாக முயற்ச்சித்து நிறைவேற்றினார்...!!!
அந்நிய பொருள்களை புறக்கணித்து கதர் ஆடைகளையே தன் வாழ்நாள் முழுவதும் அணிந்தவர் சடகோபால தேவர் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டார் மேலும் காந்தி முன்னெடுத்த உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தில் தமிழகத்தில் இராஜாஜி தலைமையில் திருச்சி முதல் வேதாரண்யம் வரை நடைபயணம் மேற்க்கொண்டு வேதாரண்யத்தில் உப்பு எடுத்தனர் அதில் சர்தார் வேதரத்தினம் உடன் ஆய்மூர் சடகோபாலத்தேவர் மற்றும் திருத்துறைப்பூண்டி தியாகி திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்...!!!
பல்வேறு சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்று வந்ததால் அரசாங்கத்தால் தொண்டியக்காட்டில் வழங்கப்பட்ட ஏழு ஏக்கர் நிலத்தை ஏழைகளுக்கே தானமாக வழங்கினார்...!!!
தனது தாய் நாட்டின் விடுதலைக்காக தான் போராடினேன் அதற்கு ஈடாக எந்த சலுகையும் வேண்டாம் என்று மறுத்து விட்டார் பூமிதான இயக்கத்தில் (சர்வோதய திட்டம்) தமது நிலத்தை ஏழைகளுக்கு அளித்தார்...!!!
ஆய்மூர் பசுபதீஸ்வரர் கோயில் பழுதடைந்து இடியும் நிலையில் இருந்தது அதை சீர்செய்து குடமுழுக்கு விழா நடத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார் மேலும் புதிதாக இராம மடம் ஒன்றை மடத்தையா திரு.கலிதீர்த்தாத் தேவர் அவர்களின் உதவியுடன் ஏற்படுத்தினார் அக்கோவில் விழாக்களை எல்லாம் விவசாயம் இல்லாத கோடைகாலத்தில் விழாக்களை நடத்தி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்...!!!
இவர் 2003 ஆம் ஆண்டு மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட அக்டோபர் 24 அன்று தனது 97 ஆவது வயதில் காலமானார்..!!!
வரலாறு படிப்போம்...!!!
வரலாறு படைப்போம்...!!!
அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)
அருமை
ReplyDelete