காளையார் கோவில் காட்டில் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் உயிரை காத்த புளியமரம் : 09/08/1801 அன்று ஆங்கிலேயர்களின் மரம் வெட்டும் குழுவிற்கு மேஜர் ஷெப்பர்டு தலைமை ஏற்றார் அவர்களின் வேகமான முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த ஒரு மேட்டை வசப்படுத்தும் முயற்சியில் அவர்கள் இருந்தனர் ஆங்கிலேயர்களால் வசப்படுத்தப்பட்ட அந்த மேட்டை ஒரு இராணுவ நிலையாக அரண் செய்யும்படி ஆங்கிலேயர்களுக்கு உத்தரவு வந்தது அதன்படி கர்னல் இன்ஸ் என்பவரின் தலைமையில் ஒரு அணி புறப்பட்டு வந்து வேலையில் ஈடுபட்டது 300 வீரர்களும் 3 பீரங்கிகளும் இருக்கும் அளவிற்கு ஏற்றவாறு மாலை நேரம் வருவதற்குள் தற்காலிகமாக ஒரு கொத்தளம் அமைத்தனர்...!!! ஆங்கிலேயர்கள் அமைத்த கொத்தளத்தின் தென்பகுதி காளையார் கோவிலை பார்த்து இருந்தது மேலும் அந்த இடத்தில் இருந்து காளையார் கோவிலும் சிறுவயலும் தெளிவாக தெரியும்படி அமைந்திருந்தது அங்கிருந்த ஒரு பெரிய புளிய மரத்தை ஆங்கிலேயர்களின் படைகளால் வெட்ட முடியவில்லை இந்த புளிய மரம் தான் மருதரசர்கள் உயிரை காத்தது என்பது குறிப்பிடத்தக்கது...!!! குண்டடிபட்ட புளிய மரம் : நெருங்கி புடிக்க முடியா...
அகமுடையார் வரலாறு மீட்புகுழு