அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் வெளியிடும் காத்தியப்பத் தேவரின் திருஉருவ படம்...!!! அகமுடையார் குல வள்ளல் காத்தியப்ப தேவர் அவர்களின் நினைவு தினமான இன்று அவரது புதிய முழு உருவ திருஉருவ படத்தை நமது அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்...!!! காத்தியப்பத் தேவர் வரலாறு : குடகு மலையில் தோன்றி சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களை வளம் கொழிக்க செய்து தன் பயணத்தை நினைவு செய்ய நினைக்கும் காவிரி தாயின் கடைமடையான தஞ்சாவூர் அருகே மன்னார்குடி வட்டம் திருமக்கோட்டைக்கு 16 முறை சென்று வந்தால் காசிக்கு ஒரு முறை சென்றதற்கு சமம் என்பார்கள் திருமக்கோட்டைக்கு கிழக்கில் சோழபாண்டிக்கு தெற்கில் அமைந்துள்ள சிற்றூர் கடுக்காகாடு ஆகும் அக்கிராமத்தில் வாழ்ந்து வந்த சுப்பையா தேவரின் அருமை மகனாகப் பிறந்த கந்தசாமி தேவர் அவர்கள் செல்லத்தம்மாளை மணந்து வியாபார நிமித்தமாக சைகோனில் குடியேறி செல்வசீமானாக வாழ்ந்து வந்தனர்...!!! வாழ்க்கை சுருக்கம் : கந்தசாமி தேவருக்கும் செல்லத்தம்மாளுக்கும் 1879 ஆம் ஆண்டு சைகோன் நகரின் ருவிஸ்டார்ட் என்னுமிடத்தில் உள்...
அகமுடையார் வரலாறு மீட்புகுழு