மருது சீமையான சிவகங்கை சீமையினை 1780-1801 வரை சுமார் 21 ஆண்டுகள் நல்லாட்சி செய்த மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் அவர்களது ஆட்சி காலத்தில் வெளியிட்ட நாணயங்களை பற்றி இந்த பதிவின் வழியே காணலாம்...!!! ------------------------------------------------------------------- மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் வெளியிட்ட 3 வகையான நாணயங்கள் பற்றிய ஆதாரங்கள் நமக்கு கிடைத்துள்ளது அவற்றை 1,2,3 என அந்த நாணயத்தின் படத்துடன் வரிசைப்படி பார்போம்...!!! 1) 09/12/1989 அன்று தினமணி இதழின் நாணயவியல் கட்டுரையாளர் திரு.அளக்குடி ஆறுமுக சீதாராமன் அவர்கள் சிவகங்கை வரலாற்று பேரவை கருத்தரங்கத்தில் மருது பாண்டியர்கள் வெளியிட்ட நாணயத்தினை காட்சிக்கு வைத்து கீழ்காணும் விளக்கத்தை அளித்துள்ளார்...!!! மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் ஆட்சியில் இருக்கும் போது ஒரு வகையான செம்பு நாணயங்களை வெளியிட்டு உள்ளனர் இந்த நாணயத்தின் முன் பக்கத்தில் ஒரு கொடி காணப்படுகிறது அந்த கொடியின் உள்ளே ஒரு சூரியனும் ஒரு பிறை சந்திரனும் உள்ளன கொடியின் கீழே நான்கு புள்ளிகள் காணப்படுகிறது...!!! செம்பு நாணயத்தி...
அகமுடையார் வரலாறு மீட்புகுழு