போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் சுதந்திர போராட்ட தியாகி சடகோபாலத் தேவர் -------------------------------------------------------------------- அன்பும் அறமும் கொண்ட போர்க்குடி அகமுடையார் பேரினத்தில் டெல்டா மண்டலத்தில் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் முத்தையா தேவர் மற்றும் நாகம்மாள் தம்பதியினருக்கு நான்காவது மகனாக 1907 ஆம் ஆண்டு நமது சடகோபால தேவர் அவர்கள் பிறந்தார் இவரது இளமைக்காலத்தில் ஆயக்காரன்புலத்தில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள ஆய்மூர் என்ற கிராமத்திற்கு சென்றார்...!!! ஆய்மூர் வானம் பார்த்த பூமி எனவே மழையை நம்பிதான் விவசாயம் செய்வார்கள் இந்த நிலையை மாற்ற நினைத்த சடகோபால தேவர் பம்புசெட் முறையை கொண்டுவர அமைச்சர் பக்தவச்சலத்திடம் முறையிட்டு எந்திரப்பாசன முறை மூலம் விவசாயம் செய்யும் முறையை கிராமத்திற்கு கொண்டு வந்தார் ஆய்மூர் கிராமத்திற்கு சாலை வசதி கிடையாது எனவே அப்போதைய ஆட்சியர் பழனியப்பன் முன்னிலையில் கிராம மக்களை கூட்டி முறையிட்டு அருந்தவம்புலத்திலிருந்து ஆய்மூர் வரை சாலை வசதியை ஏற்படுத்தினார்...!!! புரோகிதர்கள் வைத்து திருமணங்கள் நடைபெற்றால் ...
அகமுடையார் வரலாறு மீட்புகுழு