சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே மருது சீமையான சிவகங்கை சீமையின் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக புதுப்புது போர் உத்திகளை கையாண்டனர் அது அப்போதைக்கு அவர்களால் கையாளப்பட்ட அதிரடி உத்திகள் அவற்றில் சிலவற்றை இப்பதிவில் காண்போம்...!!! வீடுகளுக்கு தீ வைத்தல் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் அறிவுறுத்தல்படி சுதந்திர போரில் தாங்கள் வாழ்ந்த இருப்பிடத்திற்கு தாங்களே தீயிட்டு கொண்டனர் சிவகங்கை மக்கள் ஒக்கூரில் வீடுகளுக்கு தீவைத்த ஆங்கிலேயர் அரண்மனை சிறுவயலை நோக்கி வேகமாக வந்தனர் அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருந்தது நீயென்ன தீ வைப்பது...? அதை நாங்களே செய்துவிட்டோம் என்று சொல்கின்ற முறையில் இருந்தது சிறுவயல் மக்களின் செயல் அங்கு வந்து அதை கண்ட ஆங்கிலேய அதிகாரி கர்னல் வேல்ஸ் (இயற்கையும் போர்க்களையும் சிறுவயல் போராளிகளுக்கு) எவ்வளவோ வசதி அளித்திருந்தும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் தங்கள் வீடுகளுக்கு தாங்களே தீவைத்துவிட்டு காட்டிற்குள் விரைந்தனர் இவ்வாறு எரிந்து கொண்டிருக்கும் நகரத்தை நாங்கள் எடுத்துக்கொள்ள விட்டுச்சென்றுள்ளனர் என்ற...
அகமுடையார் வரலாறு மீட்புகுழு