Skip to main content

சிவகங்கை சீமை மீட்பு போருக்கு முன்பு மருது பாண்டியர்கள் வணங்கிய கோச்சடை முத்தையா கோவில்

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் 

இன்று (அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள்) மருது சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் சிவகங்கை சீமை மீட்பு போருக்கு முன்பு வணங்கிய கோச்சடை முத்தையா கோவிலுக்கு சென்று நாம் மறந்த சில வரலாற்றை மீட்டனர்...!!! 

மதுரையின் மைய பகுதியான கோச்சடை என்ற ஊரில் முத்தையா கோவில் உள்ளது மருது பாண்டியர்கள் வேலுநாட்சியாரை காப்பாற்றி விருப்பாச்சி கோபால நாயக்கர் உதவியுடன் விருப்பாச்சியில் பாதுகாத்து வந்தனர்  பின்னர் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானின் உதவியுடன் போர் படைகளை திரட்டி கொண்டு மருதிருவர் வழிநடத்தி வருகிறார்கள் வெள்ளையனிடம் இழந்த சிவகங்கை சீமையை மீட்க வைகை ஆற்றினை கடந்து செல்லும் போது இந்த கோச்சடை முத்தையா கோவிலுக்கு வந்து வணங்கி விட்டு கோவிலின் தல விருட்சமான சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான புளியமரத்தின் அடியில் அவர்கள் அழைத்து வந்த மொத்த படை வீரர்களுடன் மருது பாண்டியர்கள் மற்றும் வேலுநாட்சியார் ஒரு இரவு தங்கி இறைவனை வணங்கி அதன் பிறகு தான் வெள்ளையர்களுடன் போரிட்டு இழந்த சீமையினை மீட்டுள்ளனர்...!!!

முத்தையா கோவிலின் முன்புறம் 

இந்த கோயிலின் உள்ளே நுழைந்ததும் முத்தையாவும் வில்லாயுதம் உடைய அய்யனாரும் குதிரை மீது அமர்ந்த படி நம்மை வரவேற்கிறார்கள் அவர்களை தரிசித்து அப்படியே நேராக சென்றால் இந்திரன் அய்யனாருக்கு அளித்த வெள்ளை யானை உள்ளது அதையும் தாண்டி சென்றால் மூலஸ்தானத்தில் மூலவராக வில்லாயுதம் உடைய அய்யனார் அருள்பாலிக்கிறார் மேலும் மூலஸ்தானத்தின் முன்பு செண்பகப்பாண்டியன் காலத்தில் செண்பகத்தோட்டத்தில் கிடைத்த செண்பகவல்லி அய்யனார் உள்ளார் 
இது பாண்டியர் கால புராதன கோயிலாகும் அய்யனார் மதுரை எல்லையின் காவல் தெய்வம் இங்கு திருமலை நாயக்கரால் இரண்டு குதிரையும் ஒரு பூதமும் முதலில் கட்டப்பட்டது...!!! 

ஆரம்ப காலத்தில் முத்தையா சுவாமி என்பவர் இங்கு வந்தார் இங்குள்ள அய்யனாரிடம் அடைக்கலம் புகுந்தார் காலப் போக்கில் முத்தையா சுவாமி பிரபலமாகி விட்டார் அன்று முதல் அய்யனார் கோயில் என்ற நிலை மாறி முத்தையா கோயில் என்று வழங்கப்பட்டது...!!! 

மரம் கூறும் வரலாறு : பொதுவாக புளிய மரத்தை பற்றி கூறும்போது "புளி ஆயிரம் பொந்து ஆயிரம்'' என் று கூறுவார்கள் அந்தவகையில் இந்த கோயிலின் தலவிருட்சமான புளிய மரத்தின் பொந்தைப்பார்த்தால் மரமும் கோயிலும் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாயந்ததாக கருதப்படுகிறது...!!! 
அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் 

புதிதாக வைக்கப்பட்ட கோவிலின் தலவிருட்சமான புளிய மரம்

கோச்சடை முத்தையா கோவிலின் தல விருட்சமான புளியமரமானது அந்த கோவிலை அடைக்கும் அளவுக்கு பெரிதாக வளர்ந்து காணப்பட்டது 2013 ஆம் ஆண்டு சூறாவளி காற்றின் காரணமாக மரம் சாய்ந்தது அதன் பிறகு அதே இடத்தில் ஒரு புளிய மரக்கன்றை வைத்து வணங்கி வந்தனர் தற்போது அது வளர்ந்து தழைத்து நிற்கிறது மேலும் சில வருடங்களுக்கு முன்பு வரை மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் மற்றும் ராணி வேலுநாட்சியார் இந்த கோவிலுக்கு வந்து வணங்கி சென்றதை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக ஒரு பலகை வைக்கப்பட்டிருந்தது தற்போது அந்த பலகையும் இல்லை...!!!
அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் வணங்கிய போது 

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கோச்சடை முத்தையா கோவில் புளியமரம்...!!! 

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான புளியமரம் 2013 ஆம் ஆண்டு சாய்ந்தது அந்த வேலையில் எடுத்த புகைப்படம்...!!!  
இந்த வரலாற்று தகவலை நமக்கு அளித்த அண்ணன் செந்தில்குமார் அவர்களுக்கு நன்றி...!!! 

Comments

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தி...

மழை வெள்ளத்தால் நிரம்பிய காளையார் கோவிலை சித்தர் வடிவில் வந்து காத்த மருது பாண்டியர்கள்

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு மருது சீமையான காளையார் கோவிலில் நடந்த நிகழ்ச்சி...!!! சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு காளையார் கோவில் பகுதியில் பலத்த மழை பெய்து வெள்ளம் வந்தது இதனால் காளையார் கோவில் தெப்பக்குளம் ஆனைமடு விரைவில் நிறைந்தது ஏனென்றால் காளையார் கோவில் அமைந்துள்ள பகுதி பள்ளமான இடமாகும் இதற்கு எடுத்துக்காட்டாக சுமார் 200 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியினை நினைவு கூற விரும்புகிறேன்...!!! காளையார் கோவில் தெப்பக்குளம்                   மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு காளையார் கோவிலில் உள்ள காளீஸ்வரருக்கு ஒரு ராஜகோபுரம் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளதைப் போல் கட்ட வேண்டும் என்ற ஆசை அதற்கான ஆயத்த வேலைகள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது அஸ்திவாரம் தோண்டும் போது பிரச்சனைகள் கட்டிடம் கட்ட முடியாமல் நீர் ஊற்று அதிகரித்து கட்டிடம் கட்ட தடைப்பட்டது அந்த சமயத்தில் சிறிய வயதுடைய ஒரு முகமதியர் பெயர் சுலைமான் பக்கிரி என்பவர் அந்த இடத்திற்கு வந்தார் அவர் யார் தெரியுமா...? ஆற்காட்டு நவாப் முகமதலியின்...