Skip to main content

சுயமரியாதை வழக்கறிஞர் இராமச்சந்திரன் சேர்வை

அகமுடையார் வழித்தோன்றல் இராமச்சந்திரன் சேர்வை 

போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் சிவகங்கை இராமச்சந்திரன் சேர்வை (செப்டம்பர் 16 1884 - பிப்பிரவரி 26 1933) வழக்கறிஞராகவும் தந்தை பெரியாரின் தோழராகவும் சாதி ஒழிப்பில் முனைப்பாளராகவும் தென் தமிழ்நாட்டில் திராவிட சுயமரியாதை இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராகவும் விளங்கியவர் ஆதி திராவிடத் தமிழர்களும் தாழ்த்தப்பட்டோரும் கோவில்களில் தடையின்றி சென்று வழிபட பாடுபட்டார் தாழ்த்தப்பட்டோர் கல்வி பெற இரவுப் பள்ளிகளைத் தம் சொந்தச் செலவில் கட்டி அவர்கள் கல்வியறிவு பெற உதவினார் 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த சுய மரியாதை இயக்க மாநாட்டில் தம் பெயருக்கு பின்னால் உள்ள சாதி ரீதியான அடையாளத்தை தமது சேர்வை என்ற பட்டத்தை துறப்பதாக அறிவித்து அந்நாளிலிருந்து சிவகங்கை இராமச்சந்திரன் என்றே அவர் மக்களால் அறியப்பட்டார்...!!! 

அந்த காலத்தில் நாடார் என்னும் பிரிவினர் கோவில்களிலும் அக்கிரக்காரத் தெருக்களிலும் நுழையவும் நடக்கவும் முடியாத சூழ்நிலை நிலவியது இருப்பினும் சிவகங்கை இராமச்சந்திரன் இராமநாதபுரம் தேவஸ்தானக் கமிட்டியில் தலைவர் பதவியில் இருந்தபோது பி. எஸ். சிதம்பரம் (நாடார்) என்ற நாடார் இனத்தவரை உறுப்பினராக அமர்த்தினார் 1932 சூன் திங்களில் அவர் நோய்வாய்ப்பட்டபோது வி. வி.இராமசாமி என்ற நாடார் இனத்தவரை தாம் வகித்த தலைவர் பதவிக்கு தேவஸ்தானம் கமிட்டி சிறப்புக் கூட்டத்தை கூட்டி தேர்ந்தெடுக்கச் செய்தார்...!!! 

1930 அக்டோபரில் நீதிக்கட்சி அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்க அழைப்பு வந்த போதும் அதனை ஏற்காமல் சுய மரியாதை இயக்கப் பணியில் முழுமையாகத் தம்மை ஒப்படைத்துக் கொண்டு உழைத்தார்...!!! 

அகமுடையார் வழித்தோன்றல் சிவகங்கை இராமச்சந்திரனார் சேர்வை 49 ஆண்டுகள் வாழ்ந்து 1933 ஆம் ஆண்டு பிப்பிரவரி 26 ஆம் தேதி அன்று காலமானார் காலங்கள் பல கடந்தாலும் அவரது தியாகம் அழியாது...!!! 


சிவகங்கையில் அமைந்துள்ள இராமச்சந்திரன் சேர்வை திருஉருவ சிலை 

அமரர் இராமச்சந்திரன் சேர்வை அவர்களது  திருஉருவ சிலை சிவகங்கையில் அமைந்துள்ளது கீழே உள்ள படங்களில் பார்த்தால் தெரியும் சிலை அமைத்த முதல் கல்வெட்டில் அமரர் இராமச்சந்திரன் சேர்வை என்று உள்ளது சிலை மற்றும் கல்வெட்டை புதுப்பித்து எடுக்கப்பட்ட இரண்டாவது கல்வெட்டில்  இராமச்சந்திரன் என்று மட்டுமே உள்ளது சேர்வை என்ற அகமுடையார் பட்டம் மறைக்கப்பட்டுள்ளது இதே போல் தான் சிவகங்கை அரண்மனை எதிரில் அமைந்துள்ள உலகில் முதன் முதலில் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் க்கு சிலை அமைத்த தியாகி சுந்தர்ராஜன் சேர்வை என்ற அகமுடையார் அவர்களது பட்டமும் மறைக்கபட்டுள்ளது இப்படி ஒவ்வொரு அகமுடையார் வழித்தோன்றல்கள் பின்னாலும் திட்டமிட்டு மறைக்கபடுவது அவர்களது பட்டம் மட்டுமல்ல எமது அகமுடையார் பேரினத்தின் உண்ணதமான வீர தியாக வரலாறும் தான்...!!! 


சேர்வை என்ற அகமுடையார் பட்டம் மறைக்கபட்ட புதிய கல்வெட்டு 

ராமச்சந்திரன் சேர்வை என்று இருந்த பழைய கல்வெட்டு 

Comments

  1. ராமச்சந்திர சேர்வையாகிய நான் இன்று முதல் ராமச்சந்திரனாகிறேன் என பெரியார் வழி உறுதியெடுத்து சாதிப் பெயர் அகற்றி ராமச்சந்திரனாக வாழ்ந்தவரை "ராமச்சந்திர சேர்வை" என குறிப்பிடச் சொல்வது அவரது பெயரையே களங்கப் படுத்துவதற்குச் சமம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தி...

மழை வெள்ளத்தால் நிரம்பிய காளையார் கோவிலை சித்தர் வடிவில் வந்து காத்த மருது பாண்டியர்கள்

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு மருது சீமையான காளையார் கோவிலில் நடந்த நிகழ்ச்சி...!!! சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு காளையார் கோவில் பகுதியில் பலத்த மழை பெய்து வெள்ளம் வந்தது இதனால் காளையார் கோவில் தெப்பக்குளம் ஆனைமடு விரைவில் நிறைந்தது ஏனென்றால் காளையார் கோவில் அமைந்துள்ள பகுதி பள்ளமான இடமாகும் இதற்கு எடுத்துக்காட்டாக சுமார் 200 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியினை நினைவு கூற விரும்புகிறேன்...!!! காளையார் கோவில் தெப்பக்குளம்                   மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு காளையார் கோவிலில் உள்ள காளீஸ்வரருக்கு ஒரு ராஜகோபுரம் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளதைப் போல் கட்ட வேண்டும் என்ற ஆசை அதற்கான ஆயத்த வேலைகள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது அஸ்திவாரம் தோண்டும் போது பிரச்சனைகள் கட்டிடம் கட்ட முடியாமல் நீர் ஊற்று அதிகரித்து கட்டிடம் கட்ட தடைப்பட்டது அந்த சமயத்தில் சிறிய வயதுடைய ஒரு முகமதியர் பெயர் சுலைமான் பக்கிரி என்பவர் அந்த இடத்திற்கு வந்தார் அவர் யார் தெரியுமா...? ஆற்காட்டு நவாப் முகமதலியின்...