Skip to main content

சுதந்திர போராட்டத்தில் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் பயன்படுத்திய புதிய உத்திகள்


சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே மருது சீமையான சிவகங்கை சீமையின் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக புதுப்புது போர் உத்திகளை கையாண்டனர் அது அப்போதைக்கு அவர்களால் கையாளப்பட்ட அதிரடி உத்திகள் அவற்றில் சிலவற்றை இப்பதிவில் காண்போம்...!!!

வீடுகளுக்கு தீ வைத்தல்


மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் அறிவுறுத்தல்படி சுதந்திர போரில் தாங்கள் வாழ்ந்த இருப்பிடத்திற்கு தாங்களே தீயிட்டு கொண்டனர் சிவகங்கை மக்கள் ஒக்கூரில் வீடுகளுக்கு தீவைத்த ஆங்கிலேயர் அரண்மனை சிறுவயலை நோக்கி வேகமாக வந்தனர் அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருந்தது நீயென்ன தீ வைப்பது...? அதை நாங்களே செய்துவிட்டோம் என்று சொல்கின்ற முறையில் இருந்தது சிறுவயல் மக்களின் செயல் அங்கு வந்து அதை கண்ட ஆங்கிலேய அதிகாரி கர்னல் வேல்ஸ் (இயற்கையும் போர்க்களையும் சிறுவயல் போராளிகளுக்கு) எவ்வளவோ வசதி அளித்திருந்தும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் தங்கள் வீடுகளுக்கு தாங்களே தீவைத்துவிட்டு காட்டிற்குள் விரைந்தனர் இவ்வாறு எரிந்து கொண்டிருக்கும் நகரத்தை நாங்கள் எடுத்துக்கொள்ள விட்டுச்சென்றுள்ளனர் என்று கர்னல் வேல்ஸ் ஏமாற்றத்துடன் குறிப்பிடுகிறார் ஆனால் எரிகின்ற வீட்டில் பிடிங்கியது லாபம் என்பார்களே அதுபோல ஆங்கிலேயருக்கு ஏதாவது ஆதாயம் இருந்ததா என்று கேட்டால் இல்லை சிறுவயலில் எரிந்து நாசமாகி கொண்டிருக்கும் எந்த வீட்டிலும் பிடுங்குவதற்கு ஒன்றுமில்லை காரணம் என்னவென்றால் கர்னல் வேல்ஸின் கூற்றுப்படி சிறுவயலில் சுழன்றடிக்கும் காற்றின் வேகத்தால் சிறுவயல் மொத்தமும் தீக்கிறையாகிவிட்டது முடிவில் வெள்ளையனுக்கு மிஞ்சியது கொள்ளிக்கட்டை தான்...!!!

நீரில் நின்று போர்


வைகை ஆற்றங்கரை போரின் போது மருது சீமை மக்கள் நீரில் நின்று போரிடும் உத்தியை கையாண்டனர் ஆங்கிலேயர் எதிர்பாராத அந்த சாகச செயல் பற்றி கர்னல் வேல்ஸ் கூறுகிறார் இவ்வாறு (மருது சீமை போராளிகளின் ஈட்டி ஏந்திய வீரர் குழுவொன்று எங்களிடமிருந்து ஐம்பது காலடிகள் வைக்கும் தூரத்திலிருந்து அங்கு யாரோ உத்தரவிட பகுதி பகுதியாக குண்டுமாறி பொழியத் தொடங்கியது இந்த சமயத்தில் எதிரிகள் நின்றது தரையில் இல்லை தொடையளவு தண்ணீரில் நின்று போரிட்டனர்) மேலும் சாகத்துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் அளவு என்பார்கள் அது போல நாட்டுக்காக உயிரை துறக்க துணிந்த சிவகங்கை போராளிகளுக்கு தொடையளவு தண்ணீர் ஒரு தடையாக தெரியவில்லை...!!!

பல்லாயிரம் வீரர்கள்


இதே வைகை ஆற்றங்கரை போரின் போது ஆங்கிலேயரின் படை பெரும் எண்ணிக்கையில் திருப்புவனம் நோக்கி வருவதாக மருதரசர்களிடம் தெரிவிக்கப்பட்டது மருதரசர்கள் தங்கள் படையும் மிகுதியாக இருப்பதாக காட்டிக்கொள்ள திருப்புவனம் கோட்டையின் மேல் ஆயிரம் வீரர்கள் நள்ளிரவில் ஏறி நின்றனர் இரு கைகளிலும் தீப்பந்தங்களை வைத்துக்கொண்டு அவற்றை சுழற்றி பல்லாயிரக்கணக்கான வீரர்கள் கோட்டை மீது நடப்பது போல பாவனை காட்டினர் ஆயிரம் வீரர்கள் பல்லாயிரம் வீரர்களாக தெரிந்தார்கள்...!!!

கண்மாயை உடைத்தல்


மேற்கண்டது போல புதிய புதிய உத்திகள் ஒன்றா இரண்டா...? இதோ இன்னொன்று வைகை ஆற்றங்கரை போரின் போது மானாமதுரை தாண்டிய பின்னர் புதுக்கோட்டையில் இருந்து நீர் நிரம்பி இருந்த கண்மாயை மாமன்னர் மருது பாண்டியர்களின் படையினர் திடீரென உடைத்தனர் அதன் விளைவு நீர் வருவது தெரியாது இருந்த ஆங்கிலேயர் வசமிருந்த வெடிமருந்து கருமருந்து பீரங்கி குண்டுகள் எல்லாம் நனைந்து பாழாயின இதனால் வைகை ஆற்றங்கரை விட்டு ஆங்கிலேயர் வேகவேகமாய் இராமநாதபுரம் நோக்கி நடையைகட்ட வேண்டியதாயிற்று...!!!

ஆதாரம் : மருது பாண்டிய மன்னர்கள்

அகமுடையார் வரலாறு மீட்புகுழு

Comments

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தி...

மழை வெள்ளத்தால் நிரம்பிய காளையார் கோவிலை சித்தர் வடிவில் வந்து காத்த மருது பாண்டியர்கள்

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு மருது சீமையான காளையார் கோவிலில் நடந்த நிகழ்ச்சி...!!! சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு காளையார் கோவில் பகுதியில் பலத்த மழை பெய்து வெள்ளம் வந்தது இதனால் காளையார் கோவில் தெப்பக்குளம் ஆனைமடு விரைவில் நிறைந்தது ஏனென்றால் காளையார் கோவில் அமைந்துள்ள பகுதி பள்ளமான இடமாகும் இதற்கு எடுத்துக்காட்டாக சுமார் 200 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியினை நினைவு கூற விரும்புகிறேன்...!!! காளையார் கோவில் தெப்பக்குளம்                   மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு காளையார் கோவிலில் உள்ள காளீஸ்வரருக்கு ஒரு ராஜகோபுரம் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளதைப் போல் கட்ட வேண்டும் என்ற ஆசை அதற்கான ஆயத்த வேலைகள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது அஸ்திவாரம் தோண்டும் போது பிரச்சனைகள் கட்டிடம் கட்ட முடியாமல் நீர் ஊற்று அதிகரித்து கட்டிடம் கட்ட தடைப்பட்டது அந்த சமயத்தில் சிறிய வயதுடைய ஒரு முகமதியர் பெயர் சுலைமான் பக்கிரி என்பவர் அந்த இடத்திற்கு வந்தார் அவர் யார் தெரியுமா...? ஆற்காட்டு நவாப் முகமதலியின்...