Skip to main content

திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படத்தின் திறப்பு விழா







பேராசிரியர் ராஜையன் 

மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நேரடி வாரிசுதார் திருப்பத்தூர் ராமசாமி சேர்வை 

சிவகங்கை வரலாற்று ஆய்வாளர் குருசாமி மயில்வாகனன் 






வரலாற்றில் மறைக்கபட்ட இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் படுகொலையான திருப்பத்தூர் படுகொலையில் வீரமரணம் அடைந்த முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து இன்னுயிர் நீத்த 500 க்கும் மேற்பட்ட போராளிகளின் தியாகத்தை உயிர்பிக்கும் வீர வரலாறு தான் திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படம்...!!!

திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படத்தை YouTube வழியே காண https://youtu.be/OpDrspgrHng


அக்டோபர் 24 2018 அன்று திருப்பத்தூரில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் அரசு மணி மண்டபத்தில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு மூலம் #திருப்பத்தூர் #படுகொலை ஆவணப்படத்தை பேராசிரியர் ராஜையன் அவர்களின் கைகளால் திறந்து வெற்றிகரமாக இவ்விழா இனிதே நிறைவடைந்தது...!!!

ஆயிரம் ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் இருந்தும் தள்ளாத வயதில் உள்ள முதியவரான ஐயா ராஜையன் அவர்கள் கைகளால் தான் இந்த திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படத்தை வெளியிட வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டதன் காரணத்தை இந்த நேரத்தில் கூற விழைகிறேன்...!!!

யார் இந்த ராஜையன்...??? என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது...!!!

இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் போர் பிரகடனமான மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் #ஜம்பு #தீவு #பிரகடனம் என்ற மாபெரும் வரலாற்று பொக்கீஷத்தை ஆங்கிலேயர்களின் ஆவணத்தில் இருந்து கண்டுபிடித்து இந்த உலகிற்கு முதன் முதலில் காட்டிய உத்தம மனிதன் தான் இந்த ராஜையன் அவர்கள்...!!!

அதுமட்டுமல்ல சிப்பாய் புரட்சியை முதல் இந்திய சுதந்திர போராட்டமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் முன்னெடுத்த தென்னிந்திய புரட்சியே முதல் இந்திய சுதந்திர போராட்டம் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மருது பாண்டியர்களின் வரலாற்றை காக்க போராடிய உத்தமனே நீங்கள் படத்தில் காணும் முதியவர் ராஜையன் அவர்கள்...!!!

அதுமட்டுமா முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மருது பாண்டியர்களின் தியாக வரலாற்றை உலகிற்கு உணர்த்த #South #indian #Rebellion என்ற புத்தகத்தை எழுதி இன்று மருது பாண்டியர்களின் புகழ் ஓங்கி உயர்ந்து நிமிர்ந்து நிற்க முக்கிய காரணமானவர் தான் பேராசிரியர் ராஜையன் அவர்கள்...!!!

ஆனால் இத்தகைய பெரிய மாமனிதரை நமது அகமுடையார் இனம் முற்றிலும் மறந்து போனது என்பதே நிதர்சனமான உண்மை...!!!

நமது இனம் இந்த மாமனிதனுக்கு எவ்வளவோ கடமைப்பட்டுள்ளது ஆனால் இவரது சாதனைகள் உழைப்புகள் யாவையும் இத்தனை காலம் நாம் மறந்து விட்டோம் இனியாவது இவரை நமது இனம் அறிந்து கொள்ள வேண்டும் இவரது உழைப்புகள் போற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படத்தை ஐயா ராஜையன் அவர்கள் கைகளால் வெளியிட்டோம் இந்த சந்தர்ப்பத்தின் மூலம் இவரது முகத்தையும் இவரது தியாகத்தையும் அனைவருக்கும் கூற முடிந்தது...!!!

குறிப்பு : படம் திறப்பு விழாவிற்கு உதவியாக இருந்த அண்ணன்கள் ஆய்வாளர் குருசாமி மயில்வாகனன் மற்றும் செல்வராஜ் மற்றும் தீபன் மற்றும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் மற்றும் காவல் துறையினர் அனைவருக்கும் அகம் நிறைந்த நன்றிகள்...!!! 

இவண் : அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு) 

Comments

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தி...

மழை வெள்ளத்தால் நிரம்பிய காளையார் கோவிலை சித்தர் வடிவில் வந்து காத்த மருது பாண்டியர்கள்

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு மருது சீமையான காளையார் கோவிலில் நடந்த நிகழ்ச்சி...!!! சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு காளையார் கோவில் பகுதியில் பலத்த மழை பெய்து வெள்ளம் வந்தது இதனால் காளையார் கோவில் தெப்பக்குளம் ஆனைமடு விரைவில் நிறைந்தது ஏனென்றால் காளையார் கோவில் அமைந்துள்ள பகுதி பள்ளமான இடமாகும் இதற்கு எடுத்துக்காட்டாக சுமார் 200 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியினை நினைவு கூற விரும்புகிறேன்...!!! காளையார் கோவில் தெப்பக்குளம்                   மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு காளையார் கோவிலில் உள்ள காளீஸ்வரருக்கு ஒரு ராஜகோபுரம் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளதைப் போல் கட்ட வேண்டும் என்ற ஆசை அதற்கான ஆயத்த வேலைகள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது அஸ்திவாரம் தோண்டும் போது பிரச்சனைகள் கட்டிடம் கட்ட முடியாமல் நீர் ஊற்று அதிகரித்து கட்டிடம் கட்ட தடைப்பட்டது அந்த சமயத்தில் சிறிய வயதுடைய ஒரு முகமதியர் பெயர் சுலைமான் பக்கிரி என்பவர் அந்த இடத்திற்கு வந்தார் அவர் யார் தெரியுமா...? ஆற்காட்டு நவாப் முகமதலியின்...