Skip to main content

சுதந்திர போராட்ட தியாகி மாவீரர் மாயாண்டி சேர்வை


ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் சமயம் மதுரை பகுதியில் இருந்த சமயம் இந்து சமுதாய பெண்கள் வெளியில் செல்லவோ திருவிழாக்களிலோ கலந்து கொள்ளவோ முடியாத சூழல் நிலவிகொண்டிருந்தது மாற்று மதத்தினரால் கடத்தபட்டு கொலை செய்யபடும் நிகழ்வுகள் சாதாரணமாக நடந்தது இதற்கு முற்றுபுள்ளி வைத்தவர்கள் மாயாண்டி சேர்வை மற்றும் அவரது குழுவினர் அகமுடையார் வழித்தோன்றல் மாவீரர் மாயாண்டி சேர்வை அவர்கள் தேசியவாதியாக இருந்தவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தேசிய கொடி ஏற்றபோவதாக ஆங்கிலேயர்களிடம் அறிவித்தார் ஆங்கிலேயர்களும் அவரை தடுப்பதற்கு பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தி இருந்தனர் ஆனால் மாயாண்டி சேர்வை மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு கோபுரத்திலே சில நாட்கள் தங்கி அந்த நாட்களில் உணவு தண்ணீர் இன்றி வாழ்ந்து சொன்ன தேதியில் தேசிய கொடி ஏற்றிவிட்டார்...!!! 

மாயாண்டி சேர்வை வரைந்த மருதரசர்கள் திருவுருவ படம்...!!! 

மாயாண்டி சேர்வை மிக சிறந்த ஓவியரும் ஆவர் மருது சீமையான சிவகங்கை சீமையின் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் சிம்மாசனத்தில் உள்ளவாறு முதன்முதலில் படம் வரைந்தவர் இவரே...!!!

மதுரை இந்து மகாசபை தலைவராக இருந்து இந்துகளுக்கு தொண்டாற்றினார் மேலும் அகமுடையார் சமுதாயத்திற்காக 1975 ஆம் ஆண்டு மதுரையில் "அகில இந்திய அகமுடையார் மகாசபை" என்ற அமைப்பை உருவாக்கி சிறப்பாக சமுதாய தொண்டாற்றியவர் திருமங்கலம் மாயாண்டி சேர்வை அவர்கள் ஆவார் "அகில இந்திய அகமுடையார் மகாசபை" அமைப்பின் நிறுவனராகவும் தலைவராகவும் சிறப்பாக தனது ஆயுள் உள்ளவரை செயலாற்றினார் மேலும் இந்து மகாசபையின் மதுரை மாவட்ட தலைவராக இருந்தார்...!!! 

மதுரை திருமங்கலத்தில் அமைந்துள்ள மாயாண்டி சேர்வை நினைவிடம்...!!! 

மார்ச் 03 மாயாண்டி சேர்வை அவர்களின் பிறந்தநாளையொட்டி நமது அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மேலும் மாயாண்டி சேர்வை குடும்பத்தினர் மூலம் மதுரை திருமங்கலத்தில் மாயாண்டி சேர்வை நினைவிடத்தில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது...!!! 

அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் மரியாதை செலுத்திய போது...!!! 

மாயாண்டி சேர்வை குடும்பத்தினர்...!!! 

அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் பொங்கல் வழிபாடு...!!! 


இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு

 

Comments

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தி...

மழை வெள்ளத்தால் நிரம்பிய காளையார் கோவிலை சித்தர் வடிவில் வந்து காத்த மருது பாண்டியர்கள்

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு மருது சீமையான காளையார் கோவிலில் நடந்த நிகழ்ச்சி...!!! சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு காளையார் கோவில் பகுதியில் பலத்த மழை பெய்து வெள்ளம் வந்தது இதனால் காளையார் கோவில் தெப்பக்குளம் ஆனைமடு விரைவில் நிறைந்தது ஏனென்றால் காளையார் கோவில் அமைந்துள்ள பகுதி பள்ளமான இடமாகும் இதற்கு எடுத்துக்காட்டாக சுமார் 200 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியினை நினைவு கூற விரும்புகிறேன்...!!! காளையார் கோவில் தெப்பக்குளம்                   மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு காளையார் கோவிலில் உள்ள காளீஸ்வரருக்கு ஒரு ராஜகோபுரம் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளதைப் போல் கட்ட வேண்டும் என்ற ஆசை அதற்கான ஆயத்த வேலைகள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது அஸ்திவாரம் தோண்டும் போது பிரச்சனைகள் கட்டிடம் கட்ட முடியாமல் நீர் ஊற்று அதிகரித்து கட்டிடம் கட்ட தடைப்பட்டது அந்த சமயத்தில் சிறிய வயதுடைய ஒரு முகமதியர் பெயர் சுலைமான் பக்கிரி என்பவர் அந்த இடத்திற்கு வந்தார் அவர் யார் தெரியுமா...? ஆற்காட்டு நவாப் முகமதலியின்...